11-02-2005, 01:21 PM
poonai_kuddy Wrote:குறுக்காலபோவான் அண்ணா சொல்றதில உண்மை இருக்குத்தான். உதாரணத்துக்கு நான் ஒண்ட இங்க காட்டுறன் பாருங்கோவன்......................
ரசிகை அக்கா ஒரு பகுதியல போட்டிருந்த கட்டுரைக்கு வந்த மிக நல்ல கருத்துக்கள (யாரையும் உதில நான் தப்பா சொல்லல)
RaMa Wrote:நன்றி ரசிகை தகவலுக்குadsharan Wrote:நன்றி ரசிகைMUGATHTHAR Wrote:பயனுள்ள தகவலுக்கு நன்றி ரசிகை....Niththila Wrote:தகவலுக்கு நன்றி ரசிகைviyasan Wrote:நன்றி ரசிகை
இதுவே சினிமாத் தலைப்புகளில போய் பாத்தீங்கள் எண்டால் நிறைய அலட்டல்கள் இருக்கும். சினிமா பாக்கவேண்டாம் எண்டு சொல்லேல. பொழுதுபோக்கவேண்டடாம் எண்டு சொல்லேல.................ஆனா அங்க ஐஸ்வர்யா ராய்க்கும் அசினுக்கும் செலவழிக்கிற நேரத்தில உங்கட அறிவ வளக்கிறதுக்கும் பாவிக்கலாந்தானே. ரசிகை அக்கா போட்ட கட்டுரைக்கு உங்களுக்கு ஒரு கருத்துமே இல்லயா? பொழுதுபோக்கிறதுக்கு மட்டுந்தான் நீங்களெல்லாம் யாழுக்கு வாறதெண்டுறத நான் ஏத்துக்கொள்ளமாட்டன். சினிமா பற்றிக் கதைக்கிறதுக்குத்தானே வேற வெப்சைட்டுகள் இருக்குதே.....கீதம் டொற் நெற்...அது இதெண்டு நிறைய இருக்குத்தானே.... அங்கபோய் அசினப்பற்றியும் சிம்ரன பற்றியும் எழுதலாந்தானே? குறுக்காலபோவான் அண்ணா சொன்ன மாதிரி ஏதொ ஒரு போலியான ஒண்டுக்குள்ள நீங்களே உங்கள முடக்கி வச்சிருக்கிறீங்கள் எண்டுறது மட்டும் உண்மை.சினிமா பற்றி கதைக்கிறத நான் தப்பா சொல்லல..........ஆனா உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் இந்திய சினிமா தானே? உலகசினிமா பற்றி ஏன் உங்களுக்குத் தெரியேல?....அசின பற்றி கதைக்கிறிங்கள்...விஜுய பற்றி கதைக்கிறிங்கள்...ஆனா அவை நடிச்ச படத்தில இருக்கிற நல்லது கெட்டதுகள பற்றிக் கதைக்கிறிங்கள் இல்லயே. உங்களுக்கு தெரியேல அதால கதைக்கெலாதெண்டுறது சும்மா சாட்டுத்தான்.உங்களிட்ட தேடலில்ல அதால நீங்கள் கதைக்க விரும்பல எண்டு சொல்லுங்கோ. கேள்விய கேளுங்கோ......சந்தேகங்கள கேளுங்கோ....ஆக்கபூர்வமா ஒருவரில உங்கட சொந்த கருத்த எழுதுங்கோவன். பந்தி பந்தியா எழுதோணுமெண்டில்ல.....தேடித்தான் எதையுமே பெறலாம்.... இங்க எழுதுறவ குழந்தையள் இல்ல. குறைஞ்சது 18 ஐத் தாண்டியவாய்த்தான் இருப்பினம்
அதபோல இங்க குறுக்காலபோவான் அண்ணாவோ நாரதர் அண்ணாவோ எதையும் அடாவடித்தனமா செய்தாத்தான் சாதிக்கலாம் எண்டு நினைக்கிறது தப்பாப் படுது. கொஞ்சம் புத்திசாலித்தனமா நீங்கள் நடப்பிங்கள் எண்டு பாத்தா நீங்களும் பத்தொட பதினொன்டாத் தான் இருக்கிறிங்கள். நீங்கள் முன்மாதிரியா நடவுங்கோவன்....மற்றாக்கள கவருற மாதிரி எழுதுங்கோவன்....மற்றாக்களும் வருவினம். மாசேதுங் சீனால நடத்தின மாதிரியோ பிடல்காஸ்ரொ கியூபால நடத்தின மாதிரியோ ஈழத்தில நடத்தேலாது தானே? அதமாதிரித்தான் அந்த அந்த சூழ்நிலைய பாத்து அதுக்கெத்த மாதிரி எங்கட கருத்த சொன்னாத்தான் நாங்கள் வெல்லலாம். உங்கட நோக்கம் என்னண்ணா? இங்க யாழில கருத்தெழுதிற இளமாக்கள் சும்மா அரட்டையடிச்சு பொழுத போக்காமல் பிரியோசனமா சிந்திக்கிற மாதிரி கருத்துக்கள வைக்கோணும் எண்டுறதுதானே? நீங்கள் இப்பிடி அடாவடித்தனமா செஞ்சால் ஒருதருக்குமே எழுத மனசு வராது... எல்லாரும் விலகி விலகி போவினம் தானே?????? அவைஅவைக்கு பிடிச்சத குடுத்துத்தான் கவரலாம்......தப்பா சொல்லியிருந்தா மன்னியுங்கோ அண்ணா..... உங்கட கருத்துகள நான் வாசிக்கிறனான்.... உங்கட கருத்தில இருந்து நிறைய விசயம் தெரிஞ்சுகொண்டிருக்கிறன்......நன்றியண்ணா[/quote] வணக்கம் பூனைக்குட்டி
உங்களுடைய மேலையுள்ள கருத்துகளில் எனக்கும் உடன்பாடு தான்..ஆனால் என்னைப்பொறுத்தவரையில் நீங்கள் நல்ல கருத்தளார்..இந்த ஜால்ரா அடிக்கும் கூட்டத்தால் களத்தில் நீங்கள் எழுதுவதை குறைத்து கொன்றீர்கள்..களத்தில் மெருகுகண்டு திரும்பி எழுத வந்தது மிக்க சந்தோசம்..
நீங்கள் சொன்னமாதிரி மாஸ்கோவிலோ பீகிங்கீலோ ஹவனாவிலோ மழை பெய்தால் யாழ்ப்பாணத்தில் குடை பிடிக்க கூடாது தான் ...எமது சூழ்நிலைக்கேற்ற மாதிரி மாத்தி கொள்ள வேணும் ..மார்க்சியமும் நெகிழும் தத்துவம் தான்..மார்க்சியமட்டுமல்ல சமுதாய நோக்கோடு நன்மை பயக்கும் விசயங்களை விவதாங்களோடு களத்தில் இடம் பெற வேண்டுமென்று நாரதர் போன்றவர்கள் விரும்புகிறார்கள்....
பூனைக்குட்டி தொடர்ந்து எழுதுங்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

