11-26-2003, 02:15 AM
மதத்தைப் பின்பற்றுவர்கள் அறியாமையாளர்கள் என்று சொல்வது பொருத்தமற்றதாயிருக்கும் என்றுதான் எண்;ணுகின்றேன். அறிவிற்கும் சிந்தனைத்திறனுக்கும் இடையே ஒரு மெல்லிதான கோடு ஒன்று உள்ளது. அறிவியலாளர்கள் ஏலவேயிருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் அவற்றை அறிந்து அதற்கமைய கருமமாற்றுபவர்கள். ஆனால் சிந்தனையாளர்கள் விடயங்களை தத்துவார்த்த ரீதியில் அலசி ஆராய்ந்து சிந்திக்கத் தலைப்படுபவர்கள். எமது சுற்றத்திலுள்ள பெரும் பதவி வகிப்பவர்களில் சிலரை அவதானிப்பின் அவர்கள் காலையில் திருநீற்றுப்பட்டையுடன் வேலைக்குப் போவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு நம்பிக்கை. காலம் காலமாக பாட்டன் புூட்டன் வழி பேணப்பட்டு வந்த புூர்வீகம். அதற்கு மாறாக சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை அல்லது அது தேவையற்றதொன்று. இந்த மரபுவழி வாழ்க்கைமுறைமை அவர்களுக்கு வசதிகரமாய் இருக்கின்றது. எனவே அதையிட்டு அவர்கள் கவலைகொள்ளவில்லை. அதற்காக அவர்கள் அறிவற்றவர்கள் என்று சொல்வதற்கில்லை. அதேநேரம் அந்த அறிவார்ந்தவர்கள் செய்கின்றார்கள் என்பதற்காக அவையனைத்தும் சரியானவை என்ற முடிவுக்கு வந்து விடுவதற்கும் இல்லை.
இன்று எமது பண்பாட்டினை எடுத்து நோக்கினால் அதன் பெரும்பாலான அம்சங்கள் மதத்துடன் பின்னிப்பினைந்துள்ளன. மதத்தை எடுத்து எறிந்தால் எமக்கு பண்பாடே இல்லை என்று சொல்லுமளவுக்கு அவற்றின் செறிவு எமது பண்பாட்டில் இருக்கின்றது. மிக அன்மைக்காலம் வரை எமது ஒவ்வொரு செயற்பாடும் மதத்தின் ஆசிர்வாதத்துடன்தான் மேற்கொள்ளப்பட்டு வந்தன. எனவே இயல்பாகவே அதன் செல்வாக்கு எமது பெரும்பாலான நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இப்போது பாருங்கள் விடுதலைப்போராட்டகாலத்தில் எமது பெரும்பாலான சமுக நடவடிக்கைகள் அந்தபோராட்டத்தை ஒட்டி இடம்பெறவில்லையா. இலக்கியம் சிற்பம் ஓவியம் இசை நாடகம் நாட்டியம் ஏன் விடுதலைப்போராட்டத்தையொட்டிய ஒரு வணக்கமுறைகூடத் தோன்றவில்லையா. அதாவது எமது வாழ்க்கைமுறைமையென்பது சூழலையொட்டியது. அச்சூழலிற்கூடாக வாழ்வியலை விருத்திசெய்து கொண்டு செல்வது மனிதவியல்பு. ஒரு காலத்தில் சமயம் எமது சமுகத்தில் செல்வாக்கு செலுத்தியது. எனவே அதனையொட்டி எமது கலையிலக்கியங்கள் வாழ்க்கைமுறைகள் வளர்ந்தன. அதற்காக சமயம்தான் எமது பண்பாடு என்று சொல்லிவிடமுடியாது. அப்படிச் சொல்வோமாயின் இப்போது போராட்டத்தையொட்டி சமுக விழுமியங்கள் வளர்ச்சி காணும் போது போராட்டம்தான் எமது பண்பாடு என்று சொல்லவேண்டியிருக்கும். இந்த விடுதலைப் போராட்டம் என்பது எமது வரலாற்றின் ஒரு காலகட்டம். அதேபோல சமயம் என்பது அறிவியல் மட்டுப்படுத்தப்பட்ட அன்றைய காலத்தில் அது மனித வாழ்வின் ஒரு வரலாற்றுக்கட்டம். நாம் சுதந்திரமாய் வாழும் ஒரு காலகட்டத்தில் இந்தப்போராட்டம் எப்படி காலாவதியாகிப் போகுமோ அது போல அறிவியல் விருத்தியுற்ற இக்காலத்தில் சமயமும் காலாவதியாகி விட்டது. காலாவதியான பொருட்களைப் பாவித்தால் எப்படி மனிதன் நோய் வாய் படுவானோ அதுபோல காலாவதியான வாழ்க்கை முறையை நாம் பின்பற்றும்போது சமுகம் நோய்வாய்ப்படுகின்றது.
தாலி, பொட்டு, வேட்டி என்பன எமது பண்பாட்டுச் சின்ன அணிகலங்களாக அணிந்து வருகின்றோம். இந்த தாலி பொட்டு இற்கும் இந்த வேட்டிக்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. வேட்டி தனியே ஒரு உடை. அதற்கு பெரிய சமுகச்சிறப்பு கிடையாது. அதனை தேர்வு செய்வது தனியே அதனை அணிபவரின் இரசனையை விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. ஆனால் இந்த தாலி, பொட்டு என்பன தனியே ஒரு அணிகலன் என்பதற்கும் மேலாக சமுகத்தின் ஒரு தரப்புக்கும் மட்டும் வலிந்து சில அடையாளங்களைக் புகுத்துகின்றன. இந்த அடையாளங்கள் அந்த தரப்பினரை சமுகத்தில் பலவேளைகளில் சிறுமைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த இரு அணிகலன்களும் அணிபவரின் விருப்பு வெறுப்புக்களுக்கப்பாற்பட்டு சமுகத்தால் வரையறைசெய்யப்பட்ட சில அநாகரிகச்சட்டங்களை அமுல்படுத்துவதற்குத் துணைபோகின்றன. எனவே இவை தொடர்பி;ல் நாம் கவனம் செலுத்தவேண்டியவர்களாகின்றோம்.