11-02-2005, 08:21 AM
Eelavan Wrote:மட்டுறுத்தினர் வந்து இந்தப் பக்கத்திற்கு ஆமைப்பூட்டுப் போடமுன்னர் நானும் எனது கருத்தை எழுதிவிடுகிறேன்.
எமது பலவீனம் என்ற தலைப்பின் கீழான கருத்தாடல் உண்மையிலேயே எமது பலம் எது பலவீனம் எது என்று அப்பட்டமாகச் சுட்டிக் காட்டுகிறது.முதற் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் வரை வாசித்தவர்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.
சீரியஸ் ரயேட் என்று இங்கேயும் கவிதைகளிலும் கற்பிக்கப்படும் தமிழைப் படித்துத் தான் புலத்திலுள்ள குழந்தைகள் தமிழ் படிக்கவேண்டிய நிலை.
<b>தமிழீழ சோசலிசக் குடியரசு </b>என்று எப்பவோ ஒருநாள் தலைவர் சொன்னமாதிரிக் கிடக்கு இங்கே என்னடாவென்றால் சோசலிசம் எல்லாம் பள்ளிக்கூடப் பாடமாம் நாங்கள் வீட்டுப்பாடம் மட்டும் தான் படிப்போமாம்.
அது அப்போ... சோவியத் உடைவுக்கு முன்...! இது சோவியத் உடைவுக்குப் பின்..!
அதுக்காக அவர் மாக்கிசியம் படிச்சு போராடா வந்தார் என்பது சுத்தப் புளுகு..! போராட வந்து படிச்சிருக்கிறார் வழிநடந்திருக்கிறார்...அது வேறு விடயம்..! விடுதலைப்புலிகளின் சோசலிசக் கொள்கை குறித்து டாக்டர் விக்கிரமபாகு கருணாநாயக்க... ஒரு சஞ்சிகையில் சொல்ல வாசிச்சது...உண்மை போலத்தான் தோன்றியது..! அவர் சிங்களவர் என்றிருப்பினும்...தமிழீழக் கொள்கையை ஆதரிப்பவர்...!
ஆரம்பத்தில் இந்திய உதவிகளைப் பெற்ற இயக்கங்கள் சோசலிசக் கொள்கையையே வைத்திருந்தன என்று பாலகுமார் ஒரு கட்டுரையில் கூறி இருக்கிறார்...காரணம் அக்காலத்தில் இந்தியா சோவியத் அருவருடியா இருந்ததாலும்... பனிப்போர் காலத்தில் அமெரிக்க சார்பு அரசுகளுக்கு எதிரான விடுதலை இயக்கங்களுக்கு சோவியத் ஆதரவு இருந்தது என்பதாலும் என்று குறிப்பிட்டிருந்ததை இங்கு குறிப்பிடுதல் தகும்..!
சீரியஸ்..ரயேட்... வடிவாத் தெரியுது தமிழில்லை என்று...தமிழுக்க கலந்தே விட்ட அலுமாரி... கக்கூசு...பஸ்..கார்.... இதுகளை தாயகத்திலையே பாவிக்கிறீங்களே...அந்த அளவில் இன்று புலம் பறுவாயில்லை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

