11-02-2005, 06:09 AM
தூயவன் Wrote:"ஆறிலும் சாவு நு}றிலும் சாவு"
மரணம் என்பது எப்பவும் வரும். அது எதற்கு காலம் என்பது இல்லை என்பது தான் அர்த்தம்
குறிப்பு: கர்ணனை குந்திதேவி தன் பக்கம் வரச்சொல்லி அழைத்தபோது, அங்கே வந்து என் சகோதரர்களுடன் ஆறு பேராக இருப்பினும் சாவு தான். இங்கே து}ரியோதனம் முதலான நு}று பேருடன் இருந்தாலும் சாவு சாவு தான் என்று சொன்னதாக கூறப்படுகின்றது. உண்மை தெரியவில்லை
<b>ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழிக்கு பொருள் தவறாக ஆறு வயதிலும் சாவு வரும் நூறு வயதிலும் சாவு வரும் என்று சொல்கிறார்கள் ஆனால் உண்மையான பொருள் …..
குருஷேத்திரப் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் தான் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர்கள் ஐவருடன் சேர்ந்து நூற்றுவர்களான கௌரவர்களை எதிர்த்துப் போராட அழைக்கிறாள் அப்போது கர்ணன் கூறுகிறான்! தாயே ! நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவதாக போரிட்டாலும் சரி அல்லது கௌரவர்கள் நூறு பேரோடும் சேர்ந்து நூறாவது ஆளாக துரியோதனனுக்கு முன்னர் போரிட்டாலும் சரி. மடிவது திண்ணம் என்று எனக்குத் தெரியும். ஆகவே ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு: எப்படிச் செத்தால் என்ன? செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுவேன்.
இது தான் அந்தப் பழமொழிக்குப் பொருள்</b>
----------

