Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாறுமாறாக ஓட்டிய டிரைவருக்கு "பளார்' விட்ட இந்தியப் பெண்
#1
துபாயில் தாறுமாறாக டாக்சி ஓட்டிய டிரைவருக்கு இந்திய பெண் கன்னத்தில் "பளார்' விட்டு தண்டனை கொடுத்தார்.

இது பற்றிய விபரம் வருமாறு:

இந்தியாவை சேர்ந்தவர் பீனா சோனி. இவர் தன்னுடைய சகோதரருடன் ஷார்ஜாவில் டாக்சியில் பயணம் செய்தார். அப்போது டாக்சி டிரைவர் மிக வேகமாக போவதும் அடிக்கடி வண்டியை நிறுத்துவது (சடன் பிரேக்) என அவருக்கு பெரும் "இம்சை' கொடுத்துள்ளார். வண்டியை மெதுவாக ஓட்டும்படி பீனா வேண்டுகோள் விடுத்தார். அதற்கு செவி சாய்க்காத டிரைவர் பீனாவை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதில் அவமானமடைந்த பீனா ஷார்ஜா போலீசாரிடம் புகார் செய்தார்.இதை விசாரித்த போலீசார் இக்குற்றம் சம்மந்தமாக டிரைவர் மீது முறையாக புகார் பதிவு செய்யலாம் அல்லது "உடனடி நீதி' என்ற கொள்கையின் அடிப்படையில் பொது இடத்தில் டிரைவரின் கன்னத்தில் அறை விடலாம் என்று ஆலோசனை தெரிவித்தனர்.

தனது சகோதரரிடம் ஆலோசனை செய்த பீனா இரண்டாவது தண்டனை முறையை கையாள முடிவு செய்தார். அதன்படி பொது இடத்தில் அந்த டிரைவரின் கன்னத்தில் "பளார்'விட்டார். இச்சம்பவத்தை காண கூடியிருந்த மக்கள் கூட்டத்தை போலீசார் விரட்டி விட்டனர்.

இக்குற்றத்தை செய்த டிரைவர் மீது புகார் கொடுத்து சிறையில் தள்ளினால் அவருடைய வருமானத்தை இழக்க நேரிடும்.இதை நான் விரும்பவில்லை. அவர் செய்த குற்றத்துக்கு "உடனடி தண்டனை' கொடுத்தது மனதுக்கு மிகுந்த ஆறுதல் அளித்தது என்று பீனா சோனி கூறியதாக "கலீஜ் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
தாறுமாறாக ஓட்டிய டிரைவருக்கு "பளார்' விட்ட இந்தியப் பெண் - by SUNDHAL - 11-02-2005, 03:55 AM
[No subject] - by Mathan - 11-02-2005, 03:40 PM
[No subject] - by vasisutha - 11-02-2005, 03:49 PM
[No subject] - by Birundan - 11-02-2005, 03:53 PM
[No subject] - by Vasampu - 11-02-2005, 06:01 PM
[No subject] - by Niththila - 11-02-2005, 06:09 PM
[No subject] - by Mathan - 11-02-2005, 06:29 PM
[No subject] - by MUGATHTHAR - 11-02-2005, 06:39 PM
[No subject] - by SUNDHAL - 11-03-2005, 03:34 AM
[No subject] - by Rasikai - 11-04-2005, 08:38 PM
[No subject] - by vasisutha - 11-04-2005, 09:35 PM
[No subject] - by tamilini - 11-04-2005, 10:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)