11-01-2005, 09:38 PM
narathar Wrote:தமிழினி,
<b>நான் உங்களை வெளியேற்றவோ அல்லது பல உறுபினர்களை வெளியேற்றவோ எங்கே சொன்னேன்.</b> நீங்கள் பெண் என்பதால் இப்படி எழுதுகிறேன் என்றும் ,பொய்யுரைகளைக் கூறி அனுதாபம் தேட முயல வேண்டாம்.
நீங்கள் உங்களுக்கு இருக்கும் மட்டுறுத்தினருக்கான அதிகாரங்களை நடு நிலை அற்று தேர்ந்தெடுத்து பாவிக்கிறீர்கள் என்பதுவும்,<b>இக் கட்டான தருணங்களில் சாதாரண உறுபினராக வந்து பிறரை உங்கள் கருத்துக்கு ஆதரவாக எழுதவும் சொல்லி உள்ளீர்கள்</b>.இதை நிராகரித்தும் மற்றவற்றையும் நான் சும்மா விளயாட்டகக் கூறினேன் என்றும் நீங்கள் வாதிடலாம். ஆனால் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் காட்டிய மேற்கோள்களுக்கு நீங்கள் அழித்த விளக்கம் நேர்மயானது என்பதையும் , நீங்கள் யாழினி அல்ல என்பதையும் ஏற்றுக் கொண்டு, மேலும் உங்கள் நடு நிலமை,கருத்தாடல் நேர்மை ஆகிய வற்றை மெச்சி ,இதனை மேலும் வளர்க்க விரும்பாமல் முடித்துக் கொள்கிறேன். நன்றி.
நாரதர் இன்னொரு தலைப்பில் உறுப்பினர் வெளியேற்றம்பற்றிப்பேசியிருந்தோம். தேவையில்லாத கருத்தில் நான் பேசியதை நீங்கள் இணைத்ததைக்கொண்டு வேறை எதை நான் எண்ண முடியும்..?? இதில் அனுதாபம் தேட என்ன இருக்கிறது. இனி பெண் பெயரில் வரும் மட்டுறுத்தினர்களுக்கு தகவல் கொடுத்தேன். அதுவும் சமகால நடவடிக்கைகளில் இருந்து என் எண்ணத்தின் வெளிப்பாடு தான் அது.
உங்களுக்கு முக்கியவிடயம்?? மற்றப்பெயர்களில் இருக்கும் மட்டுறுத்தினர்கள் யார் என்று அறிவதா?? ஏன் கள உறுப்பினர் பெயர்களை மட்டுறுத்தினர்களுடன் இணைத்துப்பேசுகிறீர்கள். நான் கருத்து வைத்தால் என் கருத்து பற்றி கருத்து வைத்தால் போதும் என்று நினைக்கிறேன். இக்கட்டான சூழ்நிலையில் யாரை எழுதச்சொன்னேன் ஆதரவாக குழப்பமாய் உள்ளது. கருத்தாடல்களின் போது எனது கருத்தை மட்டும் வைத்தேன். ஆதரவாக எழுதச்சொல்லி யாரையும் கேக்கவில்லை அதற்குரிய தேவை எனக்கில்லை நாரதர். மற்றவர்களது ஆதரவை எதிர்பார்த்து கருத்து நான் வைப்பதில்லை. வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு என்னோடு நட்புடன் கருத்தாடும் அனேகர் இப்படிப்பட்ட கருத்தாடல்களில் கலந்து கொள்வது கிடையாது. எனது கருத்தில் நான் சரியாய் உறுதியாய் இருந்தால் எதற்கு ஆதரவு?? . நாரதர் எனது தனிப்பட்ட நான் வைத்த கருத்துக்களை வேண்டும் என்றால் உங்களால் முடிந்தால் திரும்பி பாருங்கள் நான் வைத்த கருத்துக்களில் நூற்றுக்கு 90 வீதமானவை நகைச்சுவை சம்பந்தமானவையே. ஒரு வேளை நான் வைக்கும் நகைச்சுவை தொடர்பான கருத்துக்களை நகைச்சுவையாக உங்களுக்கு தெரியாமல் விட்டிருக்கலாம். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நான் இங்கு கருத்தாட ஆரம்பித்ததில் இருந்து கள உறுப்பினர்களுடன் நட்புடனான நகைச்சுவையோடு கருத்துக்கள் வைப்பது வழமை. முந்தி நீண்ட நேரங்கள் களத்தில் நிக்க கூடியதாய் கிடந்தது. ஒவ்வொரு தனி தலைப்பிற்கும் பதில் எழுதியிருப்பேன். அதில் அநேகம் நகைச்சுவையே. பலதடவை எங்கள் கருத்துக்கள் அரட்டைக்கு நகர்த்தி அரட்டையைக்குறைக்க்சொல்லி கூறியும் இருக்கிறார்கள். நீங்கள் அந்தக்கருத்துக்களை மிரட்டல் வெருட்டல் என்று எடுத்தால் நான் என்ன செய்ய முடியும். நீங்கள் சுட்டிக்காட்டிய எனது கருத்தை நகைச்சுவைக்கு சொன்னேன் என்று சும்மா சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கண்டிப்பாக அதை நகைச்சுவையாகவே வைத்தேன். மேலதிகமாய் தெரியவேண்டுமானால் அந்த தலைப்பின் கீழ் நடந்த உரையாடல்களையும் நான் வைத்த கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பாருங்கள். அந்த தலைப்பு தெரிந்து தானே வெட்டி ஒட்டினீர்கள். சுட்டிக்காட்டத்தேவையில்லை என்று நினைக்கிறேன். யாருடனும் தேவையற்று வாக்குவாதப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை என்னைக்குறிப்பிட்டு எழுதியதால் தான் இந்தனை பதிலும் தனிப்பட தந்தேன். எனது கருத்துக்களுக்கு நீங்களாக ஏதாவது அர்த்தம் கண்டு பிடித்து இப்படி கருத்துக்கள் வருதவற்கு நான் பொறுப்பாக மாட்டேன். அப்படி எனது கருத்தில் பிழை கண்டால் உடனே சுட்டிக்காட்டுங்கள். அதை விட்டிட்டு தேவையற்ற இடங்களில் எனது கருத்தை வைத்து கதைப்பதில் அர்த்தம் என்ன .
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

