11-01-2005, 09:20 PM
kirubans Wrote:தனிச் சிங்களச் சட்டம் வரமுதல் தமிழர் சிங்களம் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை.
ஆங்கில மொழி அரசகரும மொழியாக இருந்ததாலும், அதில் தமிழர் தேர்ச்சி பெற்றிருந்ததாலும் தமிழர் நடுச் சிங்கள ஊருக்குள் அதிகாரம் செலுத்தும் உத்தியோகத்தர்களாகத்தான் இருந்தார்கள். எந்த ஒரு சிங்கள ஊரிலும் ஒரு தமிழனாவது அதிகாரம் உள்ள பதவியில் இருந்தான். சிங்களம் படித்தது சிங்களவருடன் உரையாடவும், அவர்களின் தேவையை அறிந்து கொள்ளவும் உதவியதொழிய சிங்களத்தில் எழுத அல்ல.
இது பொறுக்கமுடியாமல்தான் பண்டாரநாயக்கா சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
கட்டாயம் என்று சொல்லவில்லையே... தொழில்சார் தேவைக்கு படிக்கச் சொன்னது...நல்லம் என்று..! ஏன் சிங்களவர்களும் உயர் பதவிகளில் வடக்கு கிழக்கில் இருந்தவை தானே..! யாழ்ப்பாணத்து அரசாங்க அதிபராக கூட சிங்களவர்கள் இருந்திருக்கினம்...! அப்ப...பண்டாரநாயகாவுக்கு அதுகளும் எரிச்சலா...??! பழைய காலத்தில சிங்களவர்கள் தமிழர்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்தனர்...என்றும் சொல்கிறார்கள்..! தமிழர்களின் வியாபாரம் கொடிகட்ட சிங்களவர்களே உதவிதாகவும் அறிஞ்சிருக்கிறம்..! வெள்ளைக்காரையும் தமிழரையும் விட ஒற்றுமையா..சிங்களவர்கள் இருந்திருக்கினம்..! அப்ப ஏன் சிங்களம் படிக்கன் எண்டியள்..! சிங்களவர்களும் தமிழ் படிச்சவைதானே..! சந்திரிக்கா காலத்து முன்னாள் சபாநாயகர் ஒருவர் ஹாட்லிக் கல்லூரியில் படிச்சது என்று பேட்டியில் சொல்லக் கேட்டது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

