11-01-2005, 08:52 PM
kirubans Wrote:kuruvikal Wrote:ஐரோப்பா வந்து கற்றனியள்..ஏன் அங்க <b>இலவசமா</b> சிங்களம் படிக்க மாட்டன் என்று ஒத்தக்காலில நிண்டனியள்..! ஏன்னா சிங்களவன் இழிச்ச வாயன் வாயால பேய்க்காட்டாலமாம் என்று தெரியும்..! ஐரோப்பாவில அது நடக்காது..! மொழி தெரியாட்டி ஊமைப் பாசைல எத்தின காலத்துக்கு காலம் தள்ளுவியள்...அதுதான் படிச்சியள்...இல்ல நீங்களாவது படிக்கிறதாவது புதிய மொழிகள்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
முட்டாள்தனமாக எழுதுவதற்கு குருவிகளை விட்டால் யாருமில்லை என்று எல்லோருக்குமே நன்றாகப் புரியும்.
சிறிலங்காவில் மூன்று மொழிகள் பாவனையிலிருந்தால், மூன்று மொழிகளுக்கும் சம அந்தஸ்த்து இருந்திருக்கவேண்டும். சிங்களத்திற்கு முன்னுரிமை கொடுத்தபோது, தமிழர்கள் படிக்க மாட்டோம் என்றது, தமது மொழியுரிமையைப் பாதுகாக்கவே அன்றி சிங்களம் படிப்பது கடினம் என்பதால் அல்ல. ஐரோப்பாவில் புலம் பெயர்ந்து வந்தபின் இங்கும் எமது மொழிக்கு சமயுரிமை வேண்டும் என்பது முட்டாள்தனமாக இருந்திருக்கும். பிற நாட்டில் பிற மொழியையும் சொந்த நாட்டில் தாய் மொழியையும் நாங்கள் பாவிக்க வேண்டும். சொந்த நாட்டில் அந்நிய மொழியைப் பாவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால்தான் போராட்டம் வெடித்தது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. பாலபாடம் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கின்றேன்.
நீங்கள் சொல்லுறதெல்லாம் ரெம்ப வேடிக்கையா இருக்கு... தனிச்சிங்களச் சட்டம் வரமுதல் சிங்களத்தை தமிழரும் சிங்களவர் தமிழும் படிக்கிறது நல்லம்...உத்தியோகத்துக்கு உதவும் என்றுதான் இருந்தது..! இப்ப நீங்கள் ஐரோப்பாவில பிரஞ்சு பேசிற இடத்தில இருக்க பிரஞ்சு படிக்கிறாப் போல..உங்கட தமிழீழத்துக்கு வெளியில வேலை செய்ய சிங்களம் படிக்கச் சொன்னது...அதுக்கு உங்களுக்கு ரோசம் வந்திட்டு...இப்ப அகதியானதும் அந்த ரோசம் எங்கையோ ஓடிட்டு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

