11-01-2005, 08:36 PM
kuruvikal Wrote:ஒரு கதைக்கு... இத்தனை மார்ச்சியம்...சோசலிசம்...முதலாளித்துவம்..அரசியல் விஞ்ஞானம்.. தீவிர இலக்கியம்... எல்லாம் அறிஞ்சவை இவ்வளவு காலமும் சாதித்தது என்ன..???! தங்கடை பெயரில் பட்டத்தை வைச்சிட்டு பொம்பிளை தேடினதும் வெளிநாடு போனதும்.. தான்...! இவற்றை அறியாத ஒரு பிரபாகரன் தான் மக்கள் புரட்சிக்கு வழிவகுத்திருக்கிறான்..! இப்ப களத்தில எதுக்கு அவை...???! புலத்தில சோசலித தனிநாடு கோரவா...???! இல்ல தாயகத்தில சோசலிச புரட்சி நடத்தவா...???! இல்லை...புலத்தில் மோர்கேஜ் கிரடிட் காட் சலுகைகள் கடன்களைத் தகர்த்து சம உடமைக்குள் மக்களை வாழ வைச்சிடவா...??! ஏன் வெறுவாய் மெல்ல நேரத்தை செலவிடனும்...??! அப்படிப் படிச்ச மனிசரில் எத்தினை பேர் கொள்கை வகுப்பில ஈடுப்பட்டிருக்கிறியள்...??! எங்காவது அரசாங்கங்களில் மிளிந்திருக்கிறியள்...செய்ததெல்லாம்..துரோகத்தனமே தவிர வேறில்லை...!அன்ரன் பாலசிங்கம் பிரபாகரனுக்கு என்ன அறிவுரை கொடுக்கின்றார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் மார்க்கசியத்தை நன்றாகக் கற்றுத் தேர்ந்தவர் என்பது மட்டும் புரியும். ஒருவனுடைய சிந்தனை முறையை மார்க்கசியமோ, வேறெதுவோ மாற்றி அது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றால் அதனைத் தூக்கி எறிய வேண்டிய அவசியமில்லை.
எது காலத்துக்கு தேவையோ அதைத் தேடுங்கோ..! தேடல் என்று பழசைக் கிளறி...அதுக்குள்ள நீங்கள் புதிசா வேறுபடுறியள் என்று காட்டி பெருமை பேசாதேங்கோ...எதை சமூகம் எதிர்பார்க்குதோ..அதைத் தேடுங்கோ கொடுங்கோ...பிரயோசனமா இருக்கும்...!
தென்னிந்திய சினிமா வேண்டாம் என்றா...உங்களால ஒரு வலுவான.. தென்னிந்திய சினிமாத் தன்மைகளில் இருந்து மாறுபட்ட ஒரு சினிமாவை நிலைநாட்ட முடியுமா...முடிஞ்சா அதைச் செய்யுங்கோ...சும்மா வெறுமனவே... சினிமா அவசியமா என்று கேட்டு நாலு பக்கத்துக்கு புரட்சி சீர்திருத்தம் பேசி பயன் எதுவுமில்லை..! மக்களுக்கு பொழுதுபோக்க எது இலகுவா மலிவா கிடைக்குதோ அதைத்தான் அவர்கள் நாடுவர்கள்...! நீங்க அறிவாளிகள் புரட்சிவாதிகள் என்றால் செய்துகாட்டுங்கோ...சொல்லில முழங்க வேண்டாம்..! செய்யமுடியல்லையோ... கம்முண்ணு இருங்கோ..! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சினிமா தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கின்றது. தமிழ் நாட்டில் பலர் சினிமா மோகம் கொண்டபடியால்தான், கொள்கைகள் எதுவுமற்ற நடிகர்கள் அரசியலில் முன்னுக்கு வரமுடிந்தது. புலத்தில் வாழும் தமிழரும், தாயகத் தமிழரும் இந்த மாயைக்குள் கொஞ்ஞ்சமாக விழுந்து கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தில் எங்கே போவார்கள் என்பதை தமிழ்நாட்டைப் பார்த்தும் புரியாத முட்டாள்களாக நாங்கள் இருக்கிவேண்டுமென்றால் கம்முனு இருந்திட்டுப் போகின்றோம்.
<b> . .</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 