11-01-2005, 08:23 PM
kirubans Wrote:சரி. சரி.. கனக்க எழுதியிருக்கிறீங்க.
யாழ் களத்தில் கருத்தாடுபவர்கள் எல்லோரும் அறிவிஜீவிகள் அல்ல, அல்லது அடி முட்டாள்களும் அல்ல. அவரவர் தங்கள் தங்களுக்குப் பிடித்ததை எ௯ழுதுகிறார்கள், குழுக்களாக கருத்தாடுகிறார்கள் (அல்லது அரட்டை அடிக்கிறார்கள்).
அதிக அரட்டையும், சினிமா மாயையும் உள்ள எங்கள் சமூகத்தின் நிலையை யாழிலும் பிரதிபலிக்கின்றது என்பது யாரும் மறுக்கமுடியா உண்மையான விடயம். வார சஞ்சிகைகள் வரும்போது, சினிமாப் பக்கத்தை ஒருவர் முதலாவதாகப் படிப்பார். இன்னொருவர் அரசியலைப் படிப்பார். மற்றொருவர் எதுவுமே படிக்க மாட்டார். அதுபோலத்தான் இங்கும். இதற்காக யாரும் யாரையும் நோகவேண்டியதில்லை.
தத்துவங்கள், சித்தாந்தங்கள் எடுத்த எடுப்பிலேயே அனைவருக்கும் புரிந்துவிடுவதில்லை. புரியாமல் இருந்தாலும் ஒன்றும் கெட்டுவிடுவதில்லை. வழமையான பொழுதுபோக்குகளுடன் எங்கள் வாழ்க்கை தன்பாட்டில் போகும். எங்குபோகும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்பவர்கள்தான் அதிகம்.
மார்க்கசியம், சோசலிசம், அரசியல் விஞ்ஞானம், முதலாளித்துவம், பொருள்மையவாதம், சிற்றிலக்கியம், பேரிலக்கியம், தீவிர இலக்கியம், எல்லாம் அறிந்து என்ன செய்யப் போகின்றோம். இருப்பது முதலாளித்துவ ஐரோப்பாவில். அதிகம் படித்தால் எப்படி முதலாளித்துவம் எங்கள் உழைப்பை அட்டை மாதிரி உறிஞ்சுகின்றது என்பது புரிந்துவிடும். அது புரியாமல் இருப்பதே பலருக்கு நல்லது.
தேடலும் ஆர்வமும் இல்லாமல் எமது சமூகம் போவது எதிர்காலத்திற்கு நல்லது என்றால் நாங்கள் எமது சிந்தனைமுறையை மாற்றாமல் அப்படியே தொடர்வோம்.
ஒரு கதைக்கு... இத்தனை மார்ச்சியம்...சோசலிசம்...முதலாளித்துவம்..அரசியல் விஞ்ஞானம்.. தீவிர இலக்கியம்... எல்லாம் அறிஞ்சவை இவ்வளவு காலமும் சாதித்தது என்ன..???! தங்கடை பெயரில் பட்டத்தை வைச்சிட்டு பொம்பிளை தேடினதும் வெளிநாடு போனதும்.. தான்...! இவற்றை அறியாத ஒரு பிரபாகரன் தான் மக்கள் புரட்சிக்கு வழிவகுத்திருக்கிறான்..! இப்ப களத்தில எதுக்கு அவை...???! புலத்தில சோசலித தனிநாடு கோரவா...???! இல்ல தாயகத்தில சோசலிச புரட்சி நடத்தவா...???! இல்லை...புலத்தில் மோர்கேஜ் கிரடிட் காட் சலுகைகள் கடன்களைத் தகர்த்து சம உடமைக்குள் மக்களை வாழ வைச்சிடவா...??! ஏன் வெறுவாய் மெல்ல நேரத்தை செலவிடனும்...??! அப்படிப் படிச்ச மனிசரில் எத்தினை பேர் கொள்கை வகுப்பில ஈடுப்பட்டிருக்கிறியள்...??! எங்காவது அரசாங்கங்களில் மிளிந்திருக்கிறியள்...செய்ததெல்லாம்..துரோகத்தனமே தவிர வேறில்லை...!
எது காலத்துக்கு தேவையோ அதைத் தேடுங்கோ..! தேடல் என்று பழசைக் கிளறி...அதுக்குள்ள நீங்கள் புதிசா வேறுபடுறியள் என்று காட்டி பெருமை பேசாதேங்கோ...எதை சமூகம் எதிர்பார்க்குதோ..அதைத் தேடுங்கோ கொடுங்கோ...பிரயோசனமா இருக்கும்...!
தென்னிந்திய சினிமா வேண்டாம் என்றா...உங்களால ஒரு வலுவான.. தென்னிந்திய சினிமாத் தன்மைகளில் இருந்து மாறுபட்ட ஒரு சினிமாவை நிலைநாட்ட முடியுமா...முடிஞ்சா அதைச் செய்யுங்கோ...சும்மா வெறுமனவே... சினிமா அவசியமா என்று கேட்டு நாலு பக்கத்துக்கு புரட்சி சீர்திருத்தம் பேசி பயன் எதுவுமில்லை..! மக்களுக்கு பொழுதுபோக்க எது இலகுவா மலிவா கிடைக்குதோ அதைத்தான் அவர்கள் நாடுவர்கள்...! நீங்க அறிவாளிகள் புரட்சிவாதிகள் என்றால் செய்துகாட்டுங்கோ...சொல்லில முழங்க வேண்டாம்..! செய்யமுடியல்லையோ... கம்முண்ணு இருங்கோ..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

