11-01-2005, 04:15 PM
நாடும்நடப்பும் -- 28
எதனை முறியடிக்க இந்த ஊடுருவல்கள்
சங்குவேலிச் சாத்தன்
28.10.2005, வெள்ளி;.
காலம் தாழ்த்தி, யாழ் குடாவில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. எங்கும் கண்களுக்குக் குளிர்ச்சியாக நிலமும், மரங்களும் பச்சையாகக் மாறிவருகின்றன. காகக் குஞசுகள் சற்று வளர்ந்து, காகங்களிலிருந்து சற்று வேறுபட்ட சத்தமிட்டபடி மரங்களிலும், பறந்தும் காணப்படுகின்றன. அதேவேளையில், சற்று வளர்ந்த நிலையில் தாம் உணவு ஊட்டிவந்த குஞ்சுகள் சில, தமது குஞ்சுகள் இல்லை என்பதை அவைகள் இடும் சத்தத்தின் வேறுபாட்டாலோ, அல்லது அவற்றின் நிறங்களால் உணர்ந்த நிலையிலோ என்னவோ, குயில் குஞ்சுகளை இனங்கண்டுகொண்ட காகக் கூட்டம், அவற்றை விரட்டுவதையும், அவை ஓலமிட்டவாறு கூடலான மர இலைகளுள் ஒளிந்து கொள்வதையும் காண முடிகிறது. இடையிடையே மழையால் குரல் சற்று மாறிக் குயில்களின் கூவல்களும் கேட்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், குயில்கள் பெருமளவில் இன்னும் வந்து சேரவில்லை கிளிக்கூட்டங்களும் இன்னும் வந்து சேரவில்லை. ஆங்காங்கு கொக்குகளும், வெள்ளை நாரைகளும் சற்றுக் கூடிய எண்ணிக்கையில் வரத்தொடங்கியுள்ளன. தவளைகளின் மேளங்கள் கேட்பதற்கு, நீர் இன்னும் தேங்கிச் சேரவில்லை. பகல் நேரங்களிலும் இருட்டுக் கட்டி, மழை இடையிடையே பெய்தவாறு இருந்தது.
ஆனால் இன்று நல்ல வெய்யில்!
செப்ரெம்பர் மாதத்தில் போதிய மழை பெய்யாமையால், வயல்கள் உழப்படவில்லை. நெற்செய்கை யாழ் குடாவில் இம்முறை எப்படியிருக்கும் என்பது தெரியாத நிலைதான் காணப்படுகிறது. ஆனால், வன்னி, கிழக்குப் பகுதிகளில் சென்ற முறை நல்ல விளைச்சலான நிலையில், அரிசிக்குத் தட்டுப்பாடுகள் இருக்கமாட்டாது என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
மழை காலமென்றால், சாத்தனுக்கு வேறொரு காரணத்தாலும் சற்றுச் சந்தோசம்தான். பாண் என்ற நிலையிலிருந்து, அவன் மாலையில் அவித்த மரவள்ளிக் கிழங்கைச் சம்பலுடன் உண்ணும் காலமல்லவா இது!
மீன் ருசிப்பவர்கள் ஓரா ஒட்டி, மற்றும் மீன் சீசன் வருகிறது என்று சந்தோசமாக உள்ளனர். ஆனால், சாத்தனுக்கு இப்போது கடல் உணவும், இறைச்சி வகைகளும் பிடிப்பதில்லை. முன்னர் இவற்றின் கறி, பொரியல் மணத்தால், அவனுக்கு வாசனையாக இருந்தது, வயிற்றில் பசியைக் கிளப்புவதாக இருந்தது. ஆனால், இன்று, அவனுக்கு அவை முன்னரைப்போல் வாசமாகவும் இல்லை, வயிற்றில் பசியைக் கிளப்புவதாகவும் இல்லை, ருசியாகவும் இல்லை.
சாத்தன் சிலவேளைகளில் தன்னைப் பற்றித் தானே சிந்தித்துச் சிரிப்பதும் உண்டு.
சாத்தன் முன்பு, ஒரு புறத்தில, நாய், பூனை என்பவைகள் தவிர்ந்த நத்தை, தவளைத் துடை என்பவைகள் முதல், குதிரை, ஒட்டகம் வரை ருசித்துச் சாப்பிட்டிருந்தான். மறுபுறத்தில், அவன் பியர் சாராயம், வைன், விஸ்கி, உழபெயெஉ (டீசயனெல) எனச் சகலவற்றையும் சயற ஆக நாவில் விட்டு உழட்டிச் சுவையையும், வாசத்தையும் ரசித்துக் குடித்தவன். ஆனால் இன்றோ, அவனுக்கு மச்சம், மாமிசம், மது பானங்கள் என்றால் ஒரே வெறுப்பு!
இலங்கையில் ஒருசாரார் மது பானத்தை ஏதோ பேதி மருந்தை வாயில் விட்டு விழுங்குவதுபோல் விழுங்குகின்றனர். மற்;றொருசாரார், சாராயம், விஸ்கி, உழபெயெஉ (டீசயனெல) என்பவைகளுக்கும், ஐஸ் கட்டி, கொக்கா கோலா, ஏனையவைகள் கலந்து குடிக்கின்றனர். இவற்றைக் கலந்தால், அந்த மது பானங்களின் சுவை எப்படித் தெரியப்போகிறது? ஆவற்றின் வாசம் எப்படித் தெரியப்போகிறது? இவர்கள் மதுபானத்தைத் தாம் ஏன் சுவைக்கிறோம் என்பது தெரியாதவர்கள், அல்லது போதைக்காக மாத்திரம் மது அருந்துகிறவர்கள்!
இவர்களாவது பறவாயில்லை. ஆனால் மதுபானத்தை கொக்கா கோலா, செவின் அப், ஸ்பிரைற் போத்தல்களில் விட்டு, தெருவோரங்களில் நின்று குடித்துக்கொண்டு அவ்வழியால் செல்லும் பாடசாலை மாணிவிகளையும், பெண்களையும் கேலி பண்ணுகிறவர்களையும், கிண்டல் செய்பவர்களையும், தகாத வார்த்தைகளைக் கொண்டு “பகிடி” செய்பவர்களையும் காணும்போதுதான் சாத்தனுக்குத் தாங்கமுடியாத நிலை உருவாகிறது.
இளமையில் விளையாடுவது, சேட்டைகள், குறும்புகள் செய்வது, உயிரினங்கள் அனைத்திலும் இயற்கையானது. பூனைக ;குட்டிகளும், தாயும் விளையாடுவதைப் பாருங்கள். சிங்கங்கள், புலிகள் குட்டிகளுடன் விளையாடுவதைப் பாருங்கள். எப்படியெப்படயெல்லாம், நாம் நினைக்காதவாறு அழகாக விளையாடுகின்றன. மிருகங்களில் தாம்தான் மேன்மையான இனம் எனக் கருதும் மனிதர்கள், பிறரின் உரிமைகளுக்கும், கௌரவத்திற்கும் மதிப்புக் கொடுக்கும் விதத்தில் இவற்றைச் செய்தால், வெறுப்பு ஏற்படாது, அங்கு யிpசநஉயைவழைn இருக்குமல்லவா?;
இதைப்போன்ற மற்றொரு விடயமாக இன்று இருப்பது, இளையவர்களும், முதியவர்களும் வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தும் விதமாகும்.
சாத்தனுக்கு இன்று பஸ் வண்டிகளில் ஏறினால் ஒரே அருவருப்பு. பஸ்வண்டிகளிலும், மினி பஸ்களிலும் இன்று விதம் விதமான வாசனைகள் கலந்து, ஒருவருக்கு தலையிடியே உண்டாகும். அதுவும் மதியத்தின் பின் என்றால், கோடையில் வியர்வையும் இவற்றுடன் சேர்ந்து, வயிற்றில் குமட்டிலெடுக்கும்.
மாரியில் மற்றொரு பிரச்சனை. குளிர் காரணமாகத் தினமும் குளிக்காரவர்கள், வெளியே செல்லும்போது புஸ், புஸ் அடித்துவிட்டுச் செல்வர். பஸ், மனி வான்களுள், அழுக்கு வியர்வையும், வாசனைப் பொருட்களின் மணங்களும் சேர்ந்து, ஒருவரை பஸ் இனை விட்டு இறங்கி ஓடவே செய்யும்.
மனித உரிமைகள் பற்றி இன்று எங்கும் பேசுகின்றனர், எழுதுகின்றனர். இங்கு மனித உரிமை மீறப்படவில்லை? இங்கு பிறரின் உரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்காத நிலை காணப்படவில்லையா?
மனித உரிமை என்பது, பொருள், உயிர், வாயால் பேசுவது, எழுதுவது என்பவையுடன் மாதத்திரம்தான் தொடர்பானதா?
ஒருவர் வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துவதானால், அவருக்கு மிகமிக அருகில், நெருக்கமாகச் செல்பவருக்கு மாத்திரம் சிறிய அளவில் மணக்கும் விதத்தில் செய்யப்படும் வாசனைப் பொருக்களையே பொது இடங்களில் பயன்படுத்த அனுமதிக்கவேண்டும்.
லண்டன் பிக்கடிலியிலும், பிரான்சின் பரியிலும், புஆ து பூலோனிலும் நிற்கும் பெண், ஆண் விபச்சாரிகள்கூட, நிண்ட காலமாக தூரத்தில் செல்பவர்களைக் கவர்ந்து இழுக்கவென மணத்தை எங்கும் கடுமையாக வீசும் வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், இப்போ, நிலைமை மோசமாக உள்ளது.
மறுபுறத்தில், மழை ஆரம்பித்த நிலையில், தெருக்கள், சாக்கடைகள், சந்தைகள், உணவகங்கள், வைத்தியசாலைகள் எல்லாமே மணங்கத் தொடங்கிவிட்டன.
யாழ் பல்கலைக் கழகத்துக்கு இடையால் செல்லும் ரயில் பாதைப் பகுதிக்குச் சென்றவருக்கு, யாழ் மாநகர சபைப் பகுதியில் எப்படியான மணங்களை அனுபவிக்கமுடியும் என்பதை உணர்ந்துகொள்ளமுடியும்.
என்றாலும், வைத்தியசாலை என்றவுடன், சாத்தனுக்குக் காதினுள் வண்டு புகுந்து குடையும் ஒருவரைப் போன்ற ஒரு உணர்வுதான் உண்டாகும்.
இதற்குக் காரணங்கள் உள்ளன.
இன்று எமது மககளின் வரிப்பணத்தினை உதவியாகப் பெற்றும், இலவச கல்வியாகப் பெற்றும் டாக்டர்கள் ஆக வந்தோர்களுள் சிலர் யாழ் குடா மக்களுக்குச் செய்யும் மனிதத் தன்மையற்ற செய்கைகள் தெரியவந்தமைதான் சாத்தனைக் காதினுள் சென்ற வண்டு குடையும் உணர்வை உருவாக்கியது.
வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, மகற்பேறுக்கு யாழ்ப்பாணத்தின் பிரபல மகப்பேற்று வைத்தியரிடம் காட்டி, அண்மையில் யாழ்ப்பாணக் கடற்கரையோர தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு சத்திர சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட்டது. ஆனால், ஒருசில நாட்களில் அவருக்குக் குத்தும் வலியும் ஏற்பட்டது. சலம் போகவில்லை. பின்னர்தான், சத்திரசிகிச்சையின்போது, சத்திர சிகிச்சை செய்தவர் அவரது சலப்பையும் வெட்டுடப்பட்டாதாக மெதுவாகக் கதைத்தது ஞாபகம் வந்தது!
அவர்களால் யாழ்ப்பாணத்தில் என்ன செய்யமுடியும்? இறுதியாக கொழும்புக்கு கொண்டு சென்று உயிர் தப்பி சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இதைப்போலவே, அதே மருத்துவ மனையில், மற்றெருவருக்கு சத்திர சிகிச்சை முடிவடைந்த சில நாட்களில் குத்தும் நோவும், உடல் சுகவீனமும் ஏற்பட்டது. பின்னர்தான், பஞ்சுச் சுருளை வயிற்றில் வைத்துத் தைத்து, உள்ளே பெருமளவு சிதலுடன் சத்திர சிகிச்சைமூலம் பின்னர் எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
இவை ஏன் நடைபெறுகின்றன என்பதைப் பார்த்தால், ஒரு குறிப்பிட்ட மகற்பேறறு டாக்டர், பெரும்பான்மையானவர்களை அந்த மருத்துவ மனையில் சத்திர சிகிச்சை செய்வதாக அறியமுடிகிறது. அது மாத்திரமல்ல. பெரும்பாலான இந்த அறுவைச் சிகிச்சைகளைப் பலர் பழகுவதாகவும் அறியவருகிறது.
சாதாரணமாக மகற்பேறு செய்யமுடியுமாயினும், பிள்ளை பிறக்கும் திகதியைச் சற்றுக் காலந்தாழ்த்திக் கூறிவிட்டு. பின்னர் அறுவைச் சிகிச்சை மூலம் மகற்பேறு செய்யும் தந்திரம் கையாளப்படுவதாகவும், இதனால் பல தாயார்கள் இறந்துள்ளதாகவும் அறிய வருகிறது.
சத்திரசிகிச்சை செய்வதற்கு மனைவியையும் தாங்களாகவே முடிவெடுக்க வைக்கக்கூடிய வகையில் அழகாக விடயங்களை சிறு சிறு தொழில்சார் பேதிகளைக்கொடுத்துவிட்டு நீங்கள் முடிவைக் கூறுங்கள் என்று அவர்களிடமிருந்து சம்மதத்தைத் தெரிவிக்க வைத்து இந்த மகப்பேறுகள் செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட இந்தப் பிரபல மகற்பேறு வைத்தியரிடம் சென்றவர்களில் குறிப்பிட்ட மருத்தவ மனையில் மாத்திரம் எத்தனை வீதமானவர்களுக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்தால் சில வியப்பான உண்மைகள் வெளிவரும்.
இது ஒரு இரக சேவை!
இன்னொரு இரக சேவையும் அண்மைக்காலத்தில் நடைபெறறதைச் சாத்தன் அறிந்தான்.
மேற்கு ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்த வலிகாமம் தெற்கைச் சேர்ந்த ஒருவருக்கு மூக்கில் ஒரு விசித்திர பிரச்சனை. அவர் மேற்கு ஐரோப்பாவிலும் அதற்குச் சிகிச்சை பெற்றிருந்தார். அதனால், அவர் வைத்தியசாலை றிப்போட்களை வரும்போது கொண்டுவந்தும் இருந்தார். அவருக்கு சில காரணங்களால், மூக்கினுள் ஒருவித மணம் உண்டாவதுதான் அந்தப் பிரச்சனை.
யாழ்குடாவின் ஒரு நிபுனரிடம் சென்று ஆலோசனையைப் பெற்றபோது, அவர் அந்த றிப்போட்டுக்களைப் படித்த பின்னர், தான் சிகிச்சையைச் செய்வதாகக் கூறி, திருநெல்வேலியில் பிரதான வீதியில் அமைந்துள்ள மருத்துவ மனைக்குக் குறிப்பிட்ட நாள் வரக்கூறியிருந்தார். அந்தச் சிகிச்சைக்கு ரூபா 10,000ஃ- செலுத்தவேண்டும் எனக் கோரிய நிலையில், அப்பணத்தையும் அவர் செலுத்தியிருந்தார்.
சிகிச்;சைக்குச் சென்றவர் மருத்துவ மனையின் ஒரு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்பகுதி சத்திர சிகிச்சை அளிக்கும் இடமாக இல்லை. ஒரே குப்பையாக இருந்தது. இதுவா சிகிச்சை இடம் என நோயாளி கேட்டார். நிபுனரும் ஆம் என்றார். நிபுனர் மூக்கினுள் ஒரு சிறு பொருளை விட்டு ஏதோ செய்தபோது, அச்சிறிய உலோகத்தாலான பொருள் மூக்கு ஓட்டையினுள் விழுந்து விட்டது. மூக்கிலிருந்து இரத்தம் நிற்காது வெளிவரத் தொடங்கியது. ஆனால், அதை எடுப்பதற்கான கருவிகள் எதுவும் நிபுனரிடமும் இருக்கவில்லை. அந்தத் தனியார் மருத்துவ மனையிலும் இருக்கவில்லை.
நோ ஒருபுறமும், இரத்தம் வடிவது மறுபுறமுமாக, நோயாளிக்கும், வைத்திய நிபுணருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உங்களால் இயலாது என்றால், ஏன் மூக்கில் கை வைத்தீர்கள்? எனக் கேட்டு, பிரச்சனை வலுக்க, அந்த நிபுனர் மெதுவாக வெளி சென்று, காரை எடுத்துக்கொண்டு வீடு சென்றுவிட்டார். அங்கிருந்து தன்னால் எதுவும் செய்யமுடியாது, அந்தப் பத்தாயிரம் ரூபாயைத் திரும்ப எடுக்குமாறு கூறி, போனை வைத்து விட்டார்.
பாவம். விடுமுறைக்கு ஊர் சென்று சகலரையும் கண்டு, பேசிச் சந்தோசமாக திரும்பவும் ஐரோப்பா செல்லவென யாழ்ப்பாணம் வந்தவர், அவசர அவசரமாகக் கொழும்பு சென்று, மூக்கினுள் வீழ்த்தப்பட்ட உலோகப் பொருளை வெளியே எடுத்தபின்னர், ஒன்றும் வேண்டாத நிலையில் விமானம் ஏறி, ஐரோப்பா திரும்பிவிட்டார்!
இவைகள் எல்லாம் மனித உரிமைகள், ஏனைய மீறல்கள் இல்லையா?
இதுபோன்ற பல மனிதத் தன்மையற்ற விடயங்கள் இப்பூமியில் யாரால் செய்யப்படக் கூடாதோ, அவர்களான வைத்தியர்கள் சிலரால் யாழ் குடாவில் நடாத்தப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க ஏன் எவரும் முன்வரவில்லை? இப்படியான பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களது நிலையை ஏன் யாழ் குடாவின் ஊடகஙகளும், ஊடகவியலாளுர்களும் வெளிப்படுத்தவில்லை?
இங்குதான் யாழ் குடாவினதும், கொழுமடபு ஊடகங்களதும் உண்மை நிலை வெளிவருகிறது.
பாருங்கள்;!
இப்படியான சம்பவங்கள் பல அண்மைக் காலங்களில் யாழ் குடாவில் நடைபெற்றுவரும்போதும், யாழ் குடா மக்களின் மருத்துவம் தொடர்பான நிலை பற்றியும், பிரச்சனைகள் பற்றியும் எதுவும் பேசாது யாழ்; குடாத் தினசரிகள் இருந்துவரும் அதேவேளையில், 27.10.2005 திகதிய யாழ் தினக்குரல் பத்திரிகையின் பக்கம் -3 இல், இந்தியாவில் நடைபெற்ற மருத்துவ மனை சம்பந்தப் பிரச்னை பற்றி ஏன்; எழுதியுள்ளன?
தூர, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் 500 ரூபாயை லஞ்சம் கொடுக்காத இளம் பெண்ணின் துன்பக் கதை இதில் முக்கிய செய்தியாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியானது, குறைந்தது மூன்று நோக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கலாம். அவையாவன:
இந்தியாவில் மருத்துவ மனைகளில் பிள்ளைளைப் பெறவும் லஞ்சம் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்த@
இந்தியாவில் லஞ்சம் வாங்கப்பட்டே மருத்துவம், ஆனால் யாழ்குடாவில் அப்படியில்லை@
இந்தியாவில் லஞ்சம் கொடுத்துதே மருத்துவம் பெறப்படுகிறது, இங்கும் அதை மருத்துவம் தொடர்பானவர்கள் சற்று இறுக்கமாகக் கடைப்பிடிக்கலாம் என்ற மறைமுக தூண்டுதல் முயற்சி.
இவற்றில் எந்த நோக்கத்தில் அந்தக் குறிப்பிட்ட செய்தி யாழ் தினக்குரலில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை அறிய, அதன் தலைப்பினையும், கீழே செய்தி எப்படிக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஆராயவேண்டும்.
ஆனால், இங்கு ஆராயப்படவேண்டிய மிக முக்கிய விடயம் என்னவென்றால், தூரவுள்ள ஆந்திராப் பிரதேசச் செய்திக்;கு முக்கியத்துவம் கொடுக்கும் யாழ் பத்திரிகைகள் அருகிலே, யாழ் பட்டினத்தில் பல 10,000 ரூபாய்களைச் சேவைக்கான பணமாகக் கொடுத்தும் எதிர்நோக்கப்படும் பிரச்சனைத் துன்பக் கதைகள் பற்றி யாழ் குடாத் தினசரிகள் ஏன் மௌனம் சாதிக்கின்றன என்பதாகும்.
புல பத்தாயிரம் ரூபாய்களைக் கொடுத்திருந்தவர்களுக்குயாழ் பட்டினத்தில் என்ன நடந்தது? அவர்களுக்கு உயிருக்குப் போராடவேண்டிய நிலைதான் ஏற்பட்டது!
மூக்கினுள் உலோகப் பொருளை வீழ்தியிருந்த வைத்திய நிபுனருக்கு 10,000 ரூபாயைச் சேவைப்பணமாக அந்த வலி தெற்கைச் சேர்ந்தவர் முற்கூட்டிச் செலுத்தியே இருந்தார். மூக்கினுள் வீழ்த்தியதைத் தன்னால் எடுக்கமுடியாது என அந்த வைத்திய நிபுனர் தான் வீடு சென்று பின்னர் கைவிரித்தபோது, ஐரோப்பாவில் வசித்துவந்த நிலையில், அவர் தனது பணத்தில் கொழும்புக்கு விரைந்து, உயிர் தப்பமுடிந்தது.
ஆனால், மயிலிட்டியிலிருந்து போர் காரணமாக 1991ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்து, சக்கோட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்போதும், 15 வருடங்களாகச் சிறிய கொட்டில்களில் வதியும் ஏழை மீனவனுக்கு இந்தக் கைவிரிப்பு நடைபெற்றிருந்தால், ஒரு குடும்பம் மேலும் பல ஆண்டுகள் வறுமையிலும், பெரும் துன்பத்திலும் அழுதவண்ணமே இருக்க நேருடும்.
இங்குதான் மனிதம் முன் வருகின்றது, இங்குதான் கடமை முன்வருகின்றது, இங்குதான் அறம் முன்வருகின்றது!
இவைகள் ஏன் இன்று யாழ் குடாவில் நடைபெறுகின்றன? யாழ் குடாவில் நடைபெறும் இந்த மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான செய்கைகளை யாழ் குடாவின் பத்திரிகைகள் மூடிமறைத்து, திசை திருப்பலில் ஈடுபடுகின்றன?
ஐரோப்பாவில் பறவைக் காச்சல் பரவி, இத்தாலி, மற்றும் நாடுகளில் 40 வீதமான கோழி, முட்டை வியாபாரம் விழ, யாழ் குடாவில் ஏன் பறவைக் காய்ச்ல் பேதியை இந்தத் தினசரிகள் மக்களுக்குக் கொடுக்கின்றன? காரணம் இல்லாது இருக்கமுடியாது!
ஆனால், எந்தவித மனக்கூச்சமும் இன்றி, இந்தப் பத்திரிகைகள் தமக்குத் தாமே கொடுத்துவரும் சான்றிதழ்களைப் பாருங்கள்!
யாழ் தினக்;குரலானது, அதற்குத்; தமிழ்த் தெரியாததுபோல், தன்னைத தானே: “ யுn ஐனெநிநனெநவெ னுயடைல ஏழiஉந in வுயஅடை “ என்கிறது@ “ மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ் “ எனத் தன்னைத்தானே கூறிக்கொள்கிறது “ உதயன்” என்ற பத்திரிகை@ “ தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ் “ என்கிறது நமது ஈழநாடு தன்னை@ வலம்புரியோ யாழ் குடா மக்களுக்குத் தன்னை: நடுவு நிலை தவறா நன்னெறி காக்கும் உங்கள் நாளிதழ் “ என்கிறது!
யாரிடம் சொல்லி அழுவது யாழ் குடா மக்கள்? அவர்களது கண்களில் நீர் வற்றிவிட்டது! ஆனால், அவர்களது மனம் வைராக்கியம் அடைந்துவிட்டது!
யாழ் குடாவின் இந்தத் தினசரிகள்;, தமக்கு இந்த மருத்துவ சம்பந்தப் பிரச்சனைச் செய்திகள் கிடைக்கவில்லை, அதனால் செய்திகளைத் தாம் வெளியிடவில்லை எனக் கூற முற்படலாம்.
ஆனால், மக்களோ வேறுவித கருத்துக்களையே கொண்டுள்ளனர்.
யாழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவதில் யாழ் குடாப் பத்திரிகைகள் அக்கறை காட்டுவதில்லை. அவை ஒரு வகுப்பினரின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் பற்றி எதுவும் பேசாது, வேறு வேறு விடயங்களுக்குத்தான் அந்த வகுப்பினரின் நலன்களைக் காக்கும் விதத்தில் செயற்படுகின்றன என்பது அவர்களது கருத்து.
யாழ் குடாவின் ஒவ்வொரு பத்திரிகைக்கும் எத்தனையெத்தனை செய்தியாளர்கள் உள்ளனர்? ஊர் ஊராக எத்தனை செய்தி பொறுக்கிகள் உள்ளனர்? இவர்களால் ஏன் இந்தச் செய்திகளை அறிந்து, விடயங்களை வெளிக்கொணர்ந்து, மாற்றங்களை ஏற்படுத்த முடியாதுள்ளது?
எமது இணையத்தளத்திற்கு எப்படி இப்படியான செய்திகள் எல்;லாம் ஆதாரங்களுடன் தேடி வருகின்றன?
எமது இணையத்தளம் உள்நாட்டு, வெளிநாட்டு, சர்வதேச அமைப்புக்களின் உதவிகளையும், அனுசரனையும், பயிற்சிகளையும்; பெற்று இந்த யாழ் குடா ஊடகங்கள்போல் செயற்படுவதில்லை. செய்தியாளர்கள், செய்தி பொறிக்கிகளை பணத்திற்கு வைத்திருக்கவுமில்லை. எமது இணையத்தளத்தில், சமூக நலன்கருதி, ஏழடரவெநநச ளுநசஎiஉந அடிப்படையில்தான் எல்லாம்; நடைபெறுகிறது!
கீழே பாருங்கள் ஒருவரின் அங்கலாய்ப்பை!
இது, யாழ் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியருக்குக் கார்த்திகேயன் என்றவொரு யாழ்நகர் வாசி எழுதியுள்ள கடிதம்.
பல்;கலைக் கழக மட்டத்தில் ஒரு புது ஓழுங்கு மருத்துவ பீடப் பட்டதாரிகளால்; இந்த ஆண்டுக் ஊழnஎழஉயவழைn இல் புகுத்தப்பட்டுள்ளது!
குரு – சீடன்; தொடர்பைப் பண்டைக் காலத்து முறைபோல் இறுகத் தாம் கடைப்பிடிப்பது போன்ற ஒரு தோற்றமே, மருத்துவ பீடப் பட்டதாரிகள் காலில் வீழ்ந்து வணங்கிப் பட்டச் சான்றிதழ்களைப் பெறுவது காட்டுகிறது.
ஆனால், இதே மருத்துவ பீடத்தில் பயிற்றப்பட்டவர்கள்தான், யாழ் வைத்தியசாலைகளில் இன்று வைத்தியர்களாகப் பெருமளவில் கடமையாற்றுகின்றனர்.
அவர்கள் தமது கடமைகளைச் சரியாக செய்யாது இருப்பதற்கு மருத்துவ பீடம்தான் காரணமா? அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா? இது மிக முககிய விடயமாகும். இதைச் சமூக நலனுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்துவரும் ஒருபகுதி வைத்தியர்களும், தமிழ் மக்களும் ஆராயவேண்டியுள்ளது, மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியுள்ளது.
இவர்கள் ஒரு சாராரின் நலன்களைக் காக்கச் செயற்படுபவர்கள் மாத்திரமே. இப்படியான உரிமைகளை மீறுகிறவர்களுக்கும், ஊடகங்கங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதை அறியமுடியும்.
யாழ் குடாவினதும், கொழும்பினதும் தமிழ் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும்; இன்று பிற நாட்டுச் சக்திகளின் வலையினுள் வீழ்த்தப்பட்டு விட்டனரா என்ற கேள்வியை விவரம் அறிந்தவர்கள் எழுப்பாது விடமுடியாது.
இலங்கையின் தெற்கு அரசியலே இலங்கையில் உரிமை மீறலுக்கும், வன்செயல்களுக்கும, போருக்கும்; காரணமாக உள்ளது என்பதை நன்கு அறிந்தும், போர் நிறுத்த ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு நாடுகள், ஐக்கிய நாடுகள் என்பவை, இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதி மக்களுக்கு ஜனநாயகம், மனித உரிமை, வசயnளியசநnஉலஇ Pநயஉந என்பவை பற்றிக் கற்பித்து, அறியவைக்க, வடக்குக் கிழக்கு ஊடகங்களுக்கும், ஊடகவியலாளருக்கும் எப்படியான திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதை ஆராய, கொழும்பிலிருந்து ஊPயு என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் ஒருவரை யாழ் குடா, ஏனைய பகுதிகளுக்கு அனுப்பி, பின்னர் ஒரு அறிக்கையைத் தயாரித்துக்கொண்டன.
(அவ்வறிக்கை இங்கே அழுத்துவதன் மூலம் நீங்களும் வாசிக்கலாம். Pனுகு குழசஅயவ)
www.tamilsociety.com