11-25-2003, 02:47 PM
சொன்ன சொல்லுக்கு சொல் எயமான் சொல்லாத சொல்லுக்கு நீ எயமான் என்று சொல்வார்கள். இது நம் அனைவருக்கும் பொருந்தும். பலபேர் கருத்தாடும் களத்தில் நாம் கருத்துக்களை வைக்கும்போது கொஞ்சம் கவனமாயிருப்பது நல்லது. நக்கல்கள் நலினங்கள் பம்பலாயிருக்க நல்லதே. ஆனால் அது வெறுப்பாக வெளிப்பட்டு தனிநபர் மீது குரோத மனப்பாங்குடன் கருத்துக்கள் வெளியிடுவது கருத்தை வெளியிடுபவருக்கோ அதை வாசிப்பவருக்கோ அதனை அனுமதிக்கும் களத்திற்கோ நல்லதல்ல.

