11-01-2005, 08:44 AM
Danklas Wrote:குறுக்ஸ் இப்ப என்ன சொல்ல வாறீங்க? நகைச்சுவை, சினிமா, அரட்டையை நிறுத்த சொல்லுறீங்களா? நிறுத்திபோட்டு நீங்க வைக்கும் கருத்துக்களை பார்த்து அதுக்கு மறுகருத்தை வைக்க சொல்லுறீங்களா? நீங்க நாரதர் வைக்கும் கருத்துக்கள் என்ன? மாக்சியம், கம்யுனிசம், அது இதெண்டு அறியாத விடயங்களைபற்றி கதைக்கிறீங்க, களத்தில இருக்கிறவங்களுக்கு அதில இன்றஸ் இருந்தால்த்தானே அதற்கு கருத்து சொல்லுவாங்க? மற்றயபடி அவங்களும் அந்த செய்தியை கருத்தை கண்டிப்ப வாசீப்பாங்க, பட் கருத்துக்களை முன்வைக்கமாட்டாங்க,, அப்படி வைக்கிறதெண்டாலும் சிலருக்கு பிடிக்காது முக நயம், நன்றி தகவலுக்கு என்று எழுதினால் மட்டும்போதுமா எண்டு குண்டக்கா மண்டக்கா கேள்வி கேப்பாங்க, அதைவிட உங்களுக்கு தெரிஞ்சதை போடுங்க, அதைபற்றி அறிஞ்சவங்க கட்டாயம் பதில் சொல்லுவாங்க அல்லது அதைபற்றி கருத்து வைப்பாங்க, அதைவிட்டுட்டு உங்க பெயருக்கு ஏற்றமாதிரி விசமத்தனமான கருத்து தலைப்புகளை வைத்து மற்றவங்களும் உங்க கருத்துக்கு நீங்கள் நினைக்கும் கருத்தை எழுத வேண்டும் எண்டு நினைக்காதேங்க,,,
உங்களுக்கு, நாரதருக்கும் குருவி, ஸ்ராலின் போன்றவர்களுக்கு அதுகளைபற்றி தெரிந்து இருக்கும் அதனால்த்தான் அதைபற்றி கதைக்கிறார்கள்,
யூரோப் அமெரிக்கா என்று இருக்கிறவங்க இங்க வாரது சந்தோசத்துக்கு,, தனிபட கதைக்கும் பொழுது சில உறுப்பினர்கள் தெரிவித்தார்கள் முந்தி (யாழில அங்கத்தவரா இனையுமுன்னம்) வெளியில போறது, அதால கனக்க பிரச்சினைகள், கலாபம், காதலா எண்டு அரட்டை அடிக்கிறது அதில பல பிரச்சினைகள் வந்தது என்று சொன்னார்கள், ஆனால் இப்ப அப்படியில்லை, நண்பர்களுடன் கதைக்கவே நேரம் இல்லையாம் ஏன் தெரியுமா? யாழ்களம் அவர்களை தன்பக்கம் ஈர்த்துவிட்டதாம், வேலை, வீடு, இனையத்துக்கு வந்தால் யாழ்களம் இதுதான் தற்போதைய யாழ் அங்கத்தவர்களது வாழ்க்கை,
நீங்கள் நினைப்பது போல மாக்சியம், கம்யுனிசம் பற்றி நினைத்து மண்டையை போட்டு குழப்பி வேலையில், பாடசாலையில் தான் அப்படியெண்டு போட்டு இங்கவந்தால் இந்த சப்ஜெக்ட்டை பற்றி கதைச்சு வாழ்க்கையில் வெறுப்பை உண்டுபன்னபார்க்கிறீங்க உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்க கண்டிப்பா வாசிப்பாங்க அறிந்து கொள்ளுவாங்க,,
டன்னின் கருத்துத்தான் எமதும்..!
வாசித்து அறிந்தவற்றைத்தான் நாமும் பகிர்ந்துகொள்கின்றோம்..! களம் என்ன உலகமே பல ரசனை மட்டங்களை கொண்டதுதான்..! அனைவரையும் அது திருப்திப்படுத்த முனைய வேண்டும்..! அப்போதுதான் சீரியஸான விடயங்களும் மற்றவர்களைப் போய் சேரும்..! வெறும் சீரியஸ் பேசிட்டு இருந்தா ஒரு சிலர்தான் அதை இங்கு பேசிட்டு இருக்க வேண்டி வரும்..! ஆரம்பத்தில் களம் அப்படித்தான் இருந்தது...ஒருவரே நாலு பெயரில் எழுதியதும் உண்டு..! அப்படியான நிலையில் அவர் விலகிக் கொண்டால் 4 பேர் கருத்தெழுதாது போனது போல இருக்கும்..! உண்மையில் இக்களத்தில் இருந்து விலகியவர்கள் என்று எவரும் இல்லை..! ஒன்றில் இதை தொடர்ந்து வாசிக்கிறார்கள்...அல்லது வேறு பெயரில் எழுதுகிறார்கள்..! எல்லாம் ஐபிக்கே வெளிச்சம்..! அப்படி இருக்கும் போது சிலரின் கருத்துக்கள் தொடர்பான ஆதங்கங்களே களத்தின் மீதான வெறுப்பாக மாற்றமடைகின்றன...அதன் விளைவுகளை தான் சமீப காலமாக களம் கண்டு வருகிறது..!
ஒரு பெரிய ஆய்வுக்கட்டுரை சொல்வதை விட முகத்தார் வீடு சொல்லும் அதே சாரமான செய்தி பல மட்டங்களையும் விரைவாக சென்றடைய முடியும்..! காரணம்.. முகத்தார் வீடு சாதாரண மக்களை மட்டுமன்றி அனைத்து தரப்பினரையும் கவரவல்லது..! தனித் திறமையைக் காட்ட சீரியஸாக கருத்துக்களை பிறப்பிப்பது பெரிய விடயமல்ல.. பிறப்பிக்கப்படும் கருத்து சென்றடையும் அளவில் தான் அதன் பயனே தங்கி இருக்கிறது..! அந்த வகையில் டன்..முகத்தார்...போன்றோரின் கருத்து வெளியிடும் வடிவம் கருத்தாளர்களை பாகுபாடின்றி கவரவல்லனவாக இருக்கின்றன..! அதுவும் அவசர உலகில் உழைத்து உடல் மூளை களைத்து இருப்போருக்கு அவை இலகு முறையில் செய்திகளை நகைசுவையோடு, சோர்வு நீக்கிகளாக இருந்து வழங்குகின்றன என்றால் அது வெறும் புகழாரம் அல்ல அதுதான் உண்மை..! குறிப்பாக பெரிய கட்டுரைகளை வாசிக்க எப்போதும் மனம் விரும்பாது...அதே விடயத்தை ஒரு படம் மூலம்...அல்லது நகைச்சுவை மூலம் சொல்லிவிட்டால்...அது இலகுவாக எல்லோரையும் அடைந்துவிடும்...! அதனால் தான் என்னவோ ஒரு பேப்பர் கூட முகத்தார் வீட்டை உள்வாங்கிக் கொண்டது போல..!
கருத்து என்பது களத்துக்கு சோடனைக்கல்ல... கருத்தாளர்கள் உள்வாங்கிக் கொள்ளவே...! கருத்தாளனின் பொது ரசனை அறிந்து வைக்கப்படும் கருத்துக்களே அவனை இலகுவில் சென்றடையும்...மற்றும் படி என்னதான் சீரியஸாக பக்கம் பக்கமாக எழுதினும்... அது ஒரு சிலரை மட்டுமே சென்றடையும்...அதில் பயன் ஏதும் பெரிதாக இருக்கப் போவதில்லை..! அதற்காக அவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதல்ல அர்த்தம்..சீரியஸாக எழுதக் கூடுயவை எழுதலாம்...அப்படி ஒரு வடிவம் இருப்பதை சொல்லலாம்..அதன் மூலம் பரந்த ஒரு விளக்கத்தை அளிக்கலாம்...அது வரவேற்கப்படும்...! ஆனால் அதையே பலமான கருத்தியல் வடிவம் என்று சாதிக்க எண்ணக் கூடாது...! அதையே எல்லோரும் செய்ய வேண்டும் என்றும் நிற்கக் கூடாது...! காரணம் கருத்தின் பலம் பலவீனம் என்பது அதன் சீரியஸ்தனத்தில் இல்லை... அது கருத்தாளர்களை அடையும் மட்டத்திலையே தங்கியுள்ளது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

