Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாத்ருபூமி
#4
[size=15]
அன்று இரவு 12 மணி
சுவிஸ் இரவுப்படங்கள் ஒளிபரப்பாகும் சனல் ஒன்றில் மாத்ருபூமி(கலைப்படங்களாகவும் சிறுவர்கள் பார்க்கத் தடையான படங்கள் ஒளிபரப்பாகும் நேரத்தில்) ஒளிபரப்பாகியது.

படம் தொடங்குவதற்கான முன்னோட்ட விரிவுரையுடன்
ஒளிபரப்பபப்படப் போகும் திரைப்படத்தைப் பற்றிய சுருக்கமான விளக்கம் ஜெர்மன் மொழியில் சொல்லப்பட்ட போதே படத்தைப் பார்க்கத் தோன்றியது.

இப்படித்தான் படம் தொடங்குகிறது.............

ஒருவன் பால் நிறைத்த ஒரு பெரிய அண்டாவுக்குள்
ஒரு பெண் குழந்தையை தலை கீழ் தொங்கும் வண்ணம் கால்களால் பிடித்து தலை அண்டாவுக்குள் இறங்கும் வண்ணம் மெதுவாக இறக்குகிறான்.

ஆரம்பத்தில் குழந்தை கதறுகிறது.

மெதுவாக சத்தம் குறைந்து......... நிற்கிறது.

அது உயிர் பிரிந்ததற்கான அறிகுறி................

படத்தை தொடர்ந்து பார்ப்பதா வேண்டாமா என்ற மன உழைச்சலை உருவாக்குகிறது இக் காட்சி............

ஐந்து மகன்கள், அப்பா, ஒரு சமையல்காரச் சிறுவன் இந்தக் குடும்பத்திலிருந்து கதை தொடங்குகிறது.
<img src='http://www.matrubhoomithefilm.com/images/stills5.jpg' border='0' alt='user posted image'>
மூத்த மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்க்கும் படி ஒரு தரகரிடம் தந்தை கூறுகிறார்.

அவர் தேடி அலைகிறார்.

பெண் சிசுக் கொலை காரணமாக அப் பகுதிக்குள் ஒரு பெண்ணைக் கூட தேடுவது கடினமாக இருக்கிறது.

வேறோர் கிராமத்திலுள்ள வீட்டொன்றில் தந்தையோடு மறைந்து வாழும் ஒரு இளம் பெண் தரகர் கண்களில் படுகிறாள்.

செய்தியை பண்ணையாருக்கு தரகர் சொல்கிறார்.

பெண் பார்க்க புறப்பட்ட இவர்களுக்கு முதலில் பெண்ணைக் காட்ட பெண்ணின் தந்தை மறுக்கிறார்.

பின்னர் பணத்தையும் இவர்களது பேச்சையும் கேட்டு பெண்ணின் தந்தை மனம் மாறி பெண்ணைக் காட்டுவதோடு மணமுடித்தும் வைக்க உடன்படுகிறார்.

மூத்த மகனுக்கு மனைவியானவள் புருசன் வீட்டுக்கு விழாக் கோலமாக வருகிறாள்.

கணவனோடு தொடங்கும் அவள் வாழ்கை
பின்னர் ஏனைய சகோதரர்களோடும்
<img src='http://www.matrubhoomithefilm.com/images/stills6.jpg' border='0' alt='user posted image'>
வயதான தந்தையோடும் பகிர்ந்து கொள்ள வேண்டியவளாகிறாள்.

அவளது விருப்பத்துக்கு மாறாக அவர்கள் அவளை பாலியல் இச்சைக்கு இரையாக்குகிறார்கள்.

குடும்பத்தினர் நடத்தும்
பலாத்காரம் அவளை ஒரு மனைவியாக அல்ல ஒரு விபச்சாரியை துன்புறுத்துவது போலவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அவளை பரிதாபமாக நேசிக்கும் வேலைக்காரச் சிறுவன் அவளது தந்தைக்கு ஒரு மடல் வரைகிறான்.

பெண்ணின் தந்தை
இவர்ககள் கொடுத்த பணத்தால் முன்னை விட பணக்காரனாகி ஒரு ஜீப்பில் வருகிறார்.

அவளது பேச்சை விட அவர்களது உபரிப்பும் பேச்சுமே எடுபடுகிறது.

இறுதியில் அவர் தன் பெண்ணுக்கு வாழ வழி சொல்லிவிட்டு போகிறார்.

அவள் முன்னை விட பயங்கர வேதனைகளை அனுபவிக்கத் தொடங்குகிறாள்.

வேலைக்காரச் சிறுவன் அவளைத் தப்பிக்க வைப்பதற்காக
அவளையும் அழைத்துக் கொண்டு ஓடுகிறான்.

பாவம். இடையில் அகப்படும் அவன் கொல்லப்படுகிறான்.

தப்பிக்க முயன்றவளை இழுத்து வரும் அவர்கள் வீட்டினுள் கட்டிப் போடுகிறார்கள்.

அங்கு முன்னை விட கொடுமையான விதத்தில் பலாத்காரம் தொடருகிறது............

ஆனாலும் குடும்பத்தில் உள்ள ஒரு சகோதரன் அவள் மேல் பரிவு காட்டுகிறான்.
<img src='http://www.matrubhoomithefilm.com/images/stills2.jpg' border='0' alt='user posted image'>
அவனோடு அவள் வாழும் நேரங்கள் அவளுக்கு ஆறுதல் தருகிறது.

அது ஏனைய குடும்பத்தவர்களுக்கு எரிச்சலையும் காழ்ப்புணர்ச்சியையும் தன் சகோதரன் மீதே உருவாக்குகிறது.

அவன் அவளுக்காக பரிசுகளை வாங்கி வரும் தருணம் தந்தையும் சகோதரர்களும் சேர்ந்து அவனை வழியில் இடை மறித்துக் கொலை செய்து விட்டு ஊரிலுள்ள ஒரு அப்பாவி மீது பழியைப் போட்டுத் தண்டிக்கிறார்கள்.

இறந்து போனவனை நினைத்து வருந்தும் அவளை
மிருகங்களைக் கட்டும் ஒரு பகுதியில் கட்டி இம்சித்து துன்புறுத்தும் காட்சிகள் மனதை இறுகச் செய்கிறது.

மிருகங்களுடன் ஒரு மிருகமாகவே ஒரு பெண்ணை நடத்துவது போன்ற உணர்வு................

அங்கு தொடரும் பலாத்காரம் அருவருப்பு தருகிறது.

அவள் தாய்மையடைகிறாள்.

அப்போதும் மிருக லாடத்தில் கட்டப்பட்டே கிடக்கிறாள்.

மீண்டும் வேலைக்கு புதியதொரு வேலைக்காரச் சிறுவன் வருகிறான்.

அவன் அவளை பராமரிக்கவும் அன்பு காட்டவும் தொடங்குகிறான்.

வேலைக்காரச் சிறுவனுடன் சேர்ந்து தப்பிக்க முயல்கையில் ஏற்படும் போரராட்டத்தில் பலர் கொல்லப்படுகின்றனர்.

தந்தையை வேலைக்காரச் சிறுவன் கொல்கிறான்.

அந்த இரத்த ஆறுகளின் நடுவே புதிய ஜீவனாக ஒரு குழந்தை பூவுலகைத் தரிசிக்கிறது.

அது ஒரு பெண் குழந்தை.

இதுவே <b>மாத்ருபூமி</b>..........

Confusedhock: <b>பெண் சிசுக் கொலை நடத்தும் இந்திய நாடு ஒருநாள் இப்படி மாற வாய்ப்புண்டு என்று துணிந்து சொன்னவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஆனால் இத்திரைப்படம் பார்க்க வேண்டியவர்கள் கண்களுக்கு போகுமா? </b>
Reply


Messages In This Thread
மாத்ருபூமி - by AJeevan - 10-30-2005, 08:29 PM
[No subject] - by Rasikai - 10-31-2005, 08:06 PM
[No subject] - by sankeeth - 10-31-2005, 09:01 PM
[No subject] - by AJeevan - 11-01-2005, 01:13 AM
[No subject] - by Eelavan - 11-03-2005, 04:56 AM
[No subject] - by Eelavan - 11-03-2005, 04:57 AM
[No subject] - by AJeevan - 11-03-2005, 03:25 PM
[No subject] - by AJeevan - 11-23-2005, 11:22 PM
[No subject] - by மேகநாதன் - 11-24-2005, 10:29 PM
[No subject] - by AJeevan - 11-24-2005, 11:09 PM
[No subject] - by மேகநாதன் - 11-26-2005, 05:59 PM
[No subject] - by vasanthan - 11-29-2005, 03:06 AM
[No subject] - by AJeevan - 12-16-2005, 04:46 PM
[No subject] - by AJeevan - 01-09-2006, 10:38 PM
[No subject] - by sooriyamuhi - 01-10-2006, 04:55 AM
[No subject] - by Snegethy - 01-10-2006, 06:10 AM
[No subject] - by AJeevan - 01-10-2006, 09:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)