10-31-2005, 12:06 PM
Selvamuthu Wrote:இலங்கைத் தமிழரை இலகுவாக அறிந்துகொள்வதற்கான 10 வழிகள். (நேரில் கண்டவை, காண்பவை)
1. தமிழரைக் கண்டாலும் தமிழிலே கதைக்கமாட்டார்கள்
2. தமிழர் கூட்டங்களிலும் ஆங்கிலத்தில்தான் கதைப்பார்கள்.
3. தமது பிள்ளைகள் எல்லோரும் டாக்டர்களாக வரவேண்டும் என்றே எண்ணுவார்கள். இல்லையென்றால் தம் வாழ்வே முடிந்துவிட்டதாகக் கலங்குவார்கள். எவ்வளவு பணம் செலவானாலும் உலகின் எந்தப் பகுதிக்காயினும் அனுப்பி டாக்டருக்குப் படிக்க வைப்பார்கள். இறுதியில் தாம் நோயாளிகளாக அலைவார்கள்.
4. இடியப்பம் சொதி, சம்பலுடன் சாப்பிடுவார்கள்.
5. ஒரு பிள்ளைக்கு (பிள்ளை தயாரில்லாவிட்டாலும் பரவாயில்லை)3 அரங்கேற்றங்களும் செய்வார்கள்.
6. பெயருக்காவும், புகழுக்காகவும் பணத்தை தண்ணிபோல் செலவு செய்வார்கள்.
7. குளிர் காலத்திலும் வெறும் "சேட்" அல்லது "ரி-சேட்" உடன் வெளியே செல்வார்கள்.
8. கலியாண வீடுகளில் காப்புக்கள் அணிந்த கையை நாடியில் ஊன்றியபடியே மற்றவர்களுடன் கதைப்பார்கள்.
9. பொது இடங்களில் பதவியில் ஒருமுறை அமர்ந்துவிட்டால் இறங்கவே மாட்டார்கள். தமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று எண்ணுவார்கள்.
10. சீட்டுக் கட்டுவார்கள், எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு நாட்டைவிட்டும் ஓடுவார்கள்.
இந்த பண்புகள் எதுவுமே இந்திதமிழரிடம் இல்லையா?
சீட்டுக்காசை சுருட்டிக்கொண்டு ஓடாத எவரும் இல்லையா? சுருட்டாதவர்கள் இலங்கைத்தமிழர் இல்லையா? சீட்டு யார் கட்டுகிறார்கள்(தாச்சி) அவர்கள் அனைவரும் இந்திய தமிழரா? அல்லது இவை அனைத்தும் உங்கள் அனுபவ உதாரணங்களா? "மல்லாக்கா படுத்திருந்து எச்சி துப்புனா உங்க முகத்திலதான் விழும்" செல்வமுத்து. :wink:
.
.
.

