Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் இராணுவம், காவல்துறை மீது கைக்குண்டுத் தாக்குதல்கள்!!
#1
யாழில் சிறிலங்கா இராணுவம், காவல்துறை மீது கைக்குண்டுத் தாக்குதல்கள்!!
[திங்கட்கிழமை, 31 ஒக்ரொபர் 2005, 04:53 ஈழம்] [ம.சேரமான்]
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் மீது நேற்ற ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.


யாழ். மாவட்டம் தென்மராட்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறிலங்கா இராணுவத்தின் ட்றக் வாகனம் ஒன்று கொடிகாமம் நோக்கி ஏ-9 நெடுஞ்சாலையூடாக சென்று கொண்டிருந்தது.

அந்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இருவர், மிருசுவில் சந்தியில் மாலை 6.30 மணியளவில் இராணுவ ட்றக் வாகனம் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்தினர்.

இக்குண்டு வெடித்ததில் இரு சிறிலங்கா படையினர் படுகாயமடைந்தனர். இதையடுத்து குண்டு வீசியோர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் காயமின்றி தப்பித்துள்ளனர்.

இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் கோண்டாவிலில் சிறிலங்கா காவல்துறை நிலை ஒன்றின் மீது ஒரு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 காவல்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்த ஒரு சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த இராணுவச் சிப்பாய் பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

puthinam
Reply


Messages In This Thread
யாழில் இராணுவம், காவல்துறை மீது கைக்குண்டுத் தாக்குதல்கள்!! - by mayooran - 10-31-2005, 06:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)