Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னுமொரு தேர்தல் இனவாதிகளுக்கு வழியாகிவிடும்
#17
மதி போராட்டத்தின் மூலமே அறியாத உங்களைப் போன்றவர்களுடன் பேசுவது வீண். எதற்காக தமிழன் ஆயுதம் ஏந்தினான்? சிங்களம் இன்று நேற்றல்ல என்று பிரித்தானியனிடமிருந்து சுதந்திரத்ததை வாங்கிக் கொண்டானோ அன்றே தமிழனின் அவல வாழ்விற்கும் அத்திவாரமிட்டு விட்டான். அனைத்திலும் கல்வியிலோ வேலை வாய்ப்பினிலோ வாழ்விடத்தினிலோ அனைத்தினிலும் பாராபட்சம் பாகு பாடு காட்டப்பட்;டதனால் தான் இந்தப் போராட்டமும் அழிவுகளும். அவர்கள் போராடுவதும் போராடிக் கொண்டிருப்பதும் இவைகளை அகற்;றி ஒரு சமத்துவமான நிம்மதியான வாழ்வை தம்மை நம்பியவர்களுக்கு கொடுப்பதற்காகவே. அதை விடுத்து அழுக்குப்படாமல் வெள்ளையும் சொள்ளையுமாய் பாரளுமன்றக் கதிரைகளைச் சூடாக்கிக் கொண்டு தமது வங்கிக் கணக்குகளுக்கு புனர்வாழ்வு அளிக்கவல்ல. படித்தவனோ படிக்காதவனோ, எழையோ, பணக்காரனோ அத்தனை தமிழரும் முழு இலங்கையிலேயும் பேரினத்தின் பாராபட்சத்தால், பாகுபாடால், இனவெறியால் பாதிக்கப்பட்டவர்கள் தாம். உலகுக்கே அது புரியும் உமக்கு அது புரியாமல் இருப்பது ஒன்றும் அதிசயமல்ல. ஏனென்பது உமக்கே தெரியும். நீங்கள் குடாநாட்டினில் கிணற்றுத் தவளையாயிருந்து ஒரிரு நாட்களுக்கு கொழும்பிற்கு உல்லாசபயணம் வந்து போனவர்களுக்கு அது புரியாமலிருக்கலாம். ஆயினும் எனக்கு அப்படியல்ல. நன்றாக நிறைய அனுபவமிருக்கின்றது. அந்த நாடே வேண்டாம் என்று வெளியேறியதன் காரணமும் அது தான். அவ்வளவு அசிங்கங்களை அவலங்களை அனுபவித்து விட்டதனால். நிச்சயமாய் போரட்டமோ வி.புலிகளோ இல்லாமலிருந்தால் இன்று முழுதும் பௌத்த சிங்கள நாடாகியிருக்கும். காங்கேசன் துறையிலிருந்து மாத்தரை வரை போராட்டம் ஒரளவாவது இவைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றது. அல்லது தமிழர் அணைவரும் சிங்களவனின் கழிப்பிடங்களைக் கழுவிக் கொண்டு தான் இருந்திருக் வேண்டும். எங்கோ ஆயுத பாதுகாப்புடன் வல்லரசுக்களின் உதவியுடன் இருந்து கொண்டு தமிழனை அடக்கி ஆண்டு கொண்டிருப்பதைத் தவிர. அதுவும் இன்னும் எத்தனை நாட்களுக்கு? ஆயினும் உங்களைப் போன்று கைவிட்டு எண்ணக் கூடிய சிலரால் தான் இன்னமும் ஈழத்தில் வாழும் தமிழருக்கு ஆபத்து. இரண்டெழுத்து அதிகம் படித்துவிட்டேன் அதுவும் அந்நிய நாட்டில் சொகுசுடன் பாதுகாப்புடன் வாழ்கின்றேன் என்ற மமதையில் இனத்தையும் போராட்டத்தையும் அந்நியனுக்கு விலை பேசி உங்கள் பேச்சுக்களினால் விற்றுப் பிழைத்துக் கொண்டிருக்கின்றீர்கள், உங்களை அறியமலே. ஏனெனில் வயிற்றெறிச்சல். அட நாம் படித்து வி;ட்டு பகட்டாய் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் போது படிப்பறிவில்லாத(உங்கள் கருத்துப்படி) சின்னப் பெடியள் இத்தனை பெரியதொரு காரியத்தைச் சாதித்து விட்டார்களே என்ற குரோத உணர்வு. இது இன்றும் அங்கு (ஈழத்தில்) சில பெரிய அரச கந்தோர் வெள்ளைக் காட்சட்டைக்காரரிடம் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு மேலும் எழுதலாம். ஆனால் அது நாமே எம் முகத்தை அசிங்கப்படுத்திக் கொள்ளும் செயலாகி விடும். கொழும்பின் அவலவாழ்க்கை வாழ்ந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் அங்கு வாழ்ந்து அசிங்கப்பட்ட நிலைமைகளை. தமது பொருளாதாரபலத்திற்காகவே தமிழனை தெற்கில் இன்று இப்படியாவது வாழ விடுகின்றார்கள் புரிந்து கொள்ளுங்கள். அதுவும் ஜேவீப்பியோ சிங்கள உறுமையோ எருமையோ உறுமாதிருக்கும் வரை தான் அங்கும் உங்கள் சுதந்திரம். விரைவில் உணர்வீர்கள். மண்ணின் விடுதலையே, சுதந்திரமே ஒரு தனிப்பட்ட மனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும். அதுவே உறுதியான சுதந்திரமும் ஆகும்.

இன்று காலை சுப்பிரபாதம் கேட்கும் போது இந்த வரிகள் என் காதுகளில் வீழ்ந்தது படித்துப் பாருங்கள் :

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டிற்கு தோரணமானது வாழை
நீயும்; நாட்டில் உன்னை அழித்தவன் காலை நக்கினால் நீ ஒரு கோழை
சூடு சொரணை கொஞ்சமும் இல்லை சொல்லடா நீயா தமிழனின் பிள்ளை.....
கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை கும்பிட்டு வாய் பொத்தி நின்றாய்
அவன் சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அல்லோ நீ சாக்கடை..... போல தின்றாய்.
(நன்றி : இருப்பாய் தமிழா நெருப்பாய் இசைவட்டு , சாந்தி செல்லப்பாவின் வெண்கலக் குரலில்)

எத்தனை உண்மையான வசனங்கள். சத்தியமாக ஒருவரையும் காயப்படுத்வோ அவமானப்படுத்தவோ இங்கு எழுதவில்லை. என்மண் மீது ஆணை தாத்தா உங்களை அவமானப்படுத்தவோ காயப்படுத்தவோ எழுதவில்லை. உங்களுக்கு பதவிகள் பட்டங்கள் இனி கொடுப்பதில்லை என்று நான் முடிவெடுத்துவிட்டேன். நாங்கள் கொடுத்தால் அது சாதாரணம் கேவலம். ஆனால் பேரினம் கொடுத்தால் கழுத்தில் அணிந்து கொண்டு துள்ளித் திரிவிர்கள். புரிந்து கொள்ளவே எழுதுகின்றேன.; புரிந்து கொண்டால் நாமும் வாழ்வோம் தமிழும் வாழும்.
நன்றி வணக்கம்.

அன்புடன்
சீலன்
விடுதலை ஒன்றே மானிடத்தின் பெரும் பொருள்!
விடுதலை ஒன்றே உயிர்களின் உயிர் மூச்சு!!
விடுதலை ஒன்றே மானஸ்தர் சூடும் மகுடம்.!!!
seelan
Reply


Messages In This Thread
[No subject] - by P.S.Seelan - 11-18-2003, 12:29 PM
[No subject] - by AJeevan - 11-18-2003, 03:14 PM
[No subject] - by P.S.Seelan - 11-19-2003, 12:30 PM
[No subject] - by Mathivathanan - 11-19-2003, 01:10 PM
[No subject] - by AJeevan - 11-19-2003, 02:01 PM
[No subject] - by P.S.Seelan - 11-20-2003, 12:48 PM
[No subject] - by AJeevan - 11-20-2003, 02:12 PM
[No subject] - by Mathivathanan - 11-20-2003, 05:21 PM
[No subject] - by AJeevan - 11-20-2003, 05:53 PM
[No subject] - by P.S.Seelan - 11-22-2003, 12:46 PM
[No subject] - by Mathivathanan - 11-22-2003, 10:14 PM
[No subject] - by P.S.Seelan - 11-24-2003, 06:39 AM
[No subject] - by Mathivathanan - 11-24-2003, 10:57 AM
[No subject] - by P.S.Seelan - 11-24-2003, 01:20 PM
[No subject] - by P.S.Seelan - 11-24-2003, 01:23 PM
[No subject] - by P.S.Seelan - 11-25-2003, 11:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)