11-25-2003, 09:38 AM
சவப்பெட்டியில் வரும் பணிப்பெண்கள்
இலங்கையின் கிராமப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் மத்திய கிழக்கிற்கு வேலை வாய்ப்புத்தேடிச்செல்வது வழமை.சிலர் ஓரளவு பணத்துடனும் புதிய வாழ்க்கை குறித்து நம்பிக்கையுடனும் திரும்பிவருவதும் வழமை.எனினும் இவையாவற்றையும்விட வழமையான விடயமாகிவிட்ட ஒன்று உண்டு.அது மாதத்திற்கு 20அல்லது 25இலங்கைப் பணிப்பெண்களின் உடல்கள் மத்திய கிழக்கிலிருந்து வருகிறது.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகளைப்பொறுத்தவரை இது வழமையான விடயமாகிவிட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.கடந்த மூன்று வருட காலப்பகுதியில் 750உடல்களை தாங்கள் பெற்றுள்ளதாகவும் இதில் 532பெண்கள் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.புள்ளிவிபரங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.ஏனைய மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களின் உடல்களும் விமான நிலையத்தினூடாக செல்வதாகவும் மாதமொன்றிற்கு 2912களிற்கு மேல்வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கிற்கு செல்லும் அனைவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மூலம் செல்லாததால் முழுமையான புள்ளிவிபரங்கள் தெரியாமல் உள்ளன.துஷ்பிரயோகமும் பாலியல் வன்முறைகளும், கொலையும்,தற்கொலைகளும் மத்திய கிழக்கிற்கு சென்ற இலங்கைப் பெண்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக உள்ளன.ஒக்டோபர் 15ஆம் திகதி கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில தினசரி ஒன்றில் மத்திய கிழக்கில் இராஜதந்திரிகளால் இலங்கைப் பணிப்பெண்கள் துன்புறுத்தப்படும் சம்பவம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
2001இல் அபுதாபியில் பணிபுரிந்து இலங்கைப் பெண்மணியொருவர் இலங்கை இராஜதந்திரியொருவராலும் நண்பராலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்தப் பெண்மணி அபுதாபி தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார்.அங்கும் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.குறிப்பிட்ட இராஜதந்திரிகளுக்கு உதவியாக இருந்தவர்களிற்கு அபுதாபி நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்ட ஈட்டினை வழங்குமாறும் கோரியுள்ளது.எனினும் அபுதாபியில் உள்ள தூதரகம் குறிப்பிட்டுள்ள பெண்ணை இலங்கைக்கு பலவந்தமாக திருப்பியனுப்பிவிட்டது.எனினும் வேலைவாய்ப்பு பணியகங்களில் இந்த குற்றச்சாட்டுகளை ஏற்கத் தயாரில்லை.பத்திரிகைகளே இதனை பெரிதுபடுத்துகின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி-வெப்தமிழன்