10-30-2005, 07:25 PM
narathar Wrote:உங்கள் பதிலிலேயே முரண் இருப்பதைக் கவனிக்கவில்லயா.
ஒவ்வொருவர் மதிப்பீடும் வெறு படும் என்றும் கூறுகிறீர்கள் பிறகு அங்கத்துவர்களே சுய மதிப் பிட்டு படங்களைப் போடலாம் என்கிறீர்கள்.குறுக்ஸின் சுய மதிபீடும் உங்கள் மதிப்பீடும் வேறு பட்டதால் தானே பிரச்சினை.
.
இப்ப இந்த படப்பிரச்சனையில் கவர்ச்சியின் அளவு வேறும் படும் அதை கள உறுப்பினர்கள் தான் சுய அளவீட்டுடன் கணிப்பிடுதல் நல்லது என்று குறிப்பிட்டிருந்தேன். காரணம் படங்களில்
வருகின்ற ஆடைகள் காட்சிகள் போன்ற வற்றை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறைக்குள் கொண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியாது தானே
அதே வேளை ஒரு அளவிற்கு இது கவர்ச்சியான படம் என்று கள உறுப்பினர்கள் உணரும் பட்சத்தில் அதை தவிர்க்க முடியும் அல்லவா? அப்படி தவிர்க்காத விடத்து அதை நீக்குவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும். வியாசன் அந்த வரையறைக்கு ஒரு கருத்துக்கூறியிருக்கிறார். அதில் கூட சிலர் சொல்லலாம் நாங்கள் அப்படி வித்தியாசம்
பார்ப்பதில்லை ஒபினாக கதைப்போம் என்று. இதற்கு முக்கியமாக தேவை கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பே. இங்கு பலதரப்பட்ட உறுப்பினர்களும் வந்து செல்கையில். அப்படிப்பட்ட படங்கள் இணைக்கையில் அது அவ்வளவு நாகரீகமாக இருக்காது. அதே போல ஆண் பெண் வித்தியாசம் இன்றி களத்தில் உறுப்பினர்கள் இருக்கையில். அவர்களுக்கு கூட இது சற்று இடைஞ்சலைக்கொடுக்கலாம். இந்த வரையறைக்குள் தான் இணைக்க வேண்டும் என்று விதி போடும் போது மேலும் மேலும்பிரச்சனைகள் எழும் என்பது தான் என் கருத்து. வேறு எப்படி வரையறுக்க முடியும்..??
narathar Wrote:<b>அதனால் தான் கேக்கிறேன் யாழிற்கு ஏன் தேவை இந்த நடிகை, நடிகர்களது படங்கள்.தமிழ் சினிமாவின் அழிவாம்சங்களையும் தாங்கி வரவேண்டுமா யாழ் களம்.எமது இழஞர்களை இங்கே இழுப்பதற்கு இதைத்தவிர வேறு வழி இல்லயா.</b>
நடிகயிரின் படத்தைப் போட்டு ரசிப்பதில் என்ன இருக்கிறது.இதில் என்ன அவயவம் தெரிகிறது என்பதுவா நாகரீகத்தின் அளவு கோல்? ஈற்றில் முடிவெடுப்பது யாழ் கள நிர்வாகமும்,மட்டுறுத்தினர்களும் , நீங்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்.யாழ் களம் ஈழத் தமிழரின் கண்ணாடி. நாங்கள் தமிழ் சினிமாவையும் அதன் சீரழிப்புக்களையும் தமிழகத்தில் அது எவ்வறு மக்களைச் சீரழிக்கிறது என்று கூறிய படியே களத்திலும் இதனைத் தொடருகிறோம்.இது முரண் பாடானதாகத் தெரியவில்லையா? இதைத் தானே ஒரு பேப்பரில் எழுதிய இந்தியன் தாத்தா சுட்டிக் காட்டிய போது கிளர்ந்து எழுந்தோம்
உங்களது இந்தக்கருத்து வரவேற்கத்தக்கது. இதை ஒவ்வொரு கள உறுப்பினரும் எண்ணினால். சினிமாப்பகுதியில் வெறுமனவே
ரசிகர் ரசிகை அவர்களது படங்கள். திரைப்படம் போன்றனவன்றி. பல ஆக்க பூர்வமான விடயங்களும் நிறை வேற்றப்படலாம்.
உறுப்பினர்கள் பாவனைக்காய் சினிமா பகுதிதொடங்கியிருக்கிறார்கள், அதை பிரியோசனமான முறையில் பாவிப்பதா அல்லது படங்கள் இணைப்பதா
என்பது உறுப்பினர்களின் தெரிவாய்த்தானே இருக்க முடியும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Yalini

