10-30-2005, 01:32 PM
"கெஸின்' என்ற பெயருடைய விண்கலம் ஒன்று சனிக்கோளின் துணைக்கோளான "டைட்டன்' சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
கெஸினியில் விசேடமாக கமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அது எடுத்து அனுப்பிய படங்களில் ஒன்றே இது. இருப்பினும் அந்தப் படத்தை வைத்து உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது என்ற கருத்தும் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது. சனிக்கோளின் துணைக் கோளாகக் கருதப்படும் "டைட்டன்' தொடர்பான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்ற "கெஸினி' விண்கலமானது சனிகோளில் பனிப்பாறையொன்று இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
"கெஸினி' விண்கலத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் வெண்ணிற வட்ட வடிவில் காணப்படுகின்ற பிரகாசமான புள்ளியைக் கொண்டே இது உறுதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த வட்டமானது 30 மீற்றர் சுற்றளவைக் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்மலைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது
இதற்கு முன்னர் சனிக்கோளில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வுகளின் படி சனிக்கோளில் சமுத்திரம் காணப்படுவதாகக் கருதப்பட்டிருந்தது.எனினும், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின்படி சனிக்கோளில் அவ்வாறான சமுத்திரம் எதுவும் கிடையாது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு, "கெஸினி' விண்கலத்தில், பொருத்தப்பட்டிருக்கும் "விம்ஸ்' என்ற விசேட கமராவினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, சனியில் ஐஸ் மலைகள் காணப்பட்டாலும் அவை உருகி நீர் நிலைகளாவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதும் தெரியவந்துள்ளது.
இருந்த போதிலும் இந்தக் கருத்துக்களுக்கெல்லாம் எதிர்வாதம் புரிகின்ற மற்றொரு தரப்பினரின் கருத்தின்படி, மேற்படி "விம்ஸ்' கமராவில் பதிவாகியுள்ள படங்கள் தெளிவாக இல்லாததால் தெளிவற்ற அந்தப் படங்களை வைத்து உறுதியான முடிவு எதற்கும் வர முடியாது எனவும் தெரிவிக்கின்றனர்.
http://www.sudaroli.com/05102301ari.htm