Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரிகாரம்
#1
நிறைய பாவம் பண்ணின ஒருத்தன், சாமியார் ஒருத்தரைத் தேடிப் போய் ""சாமி! இத்தனை நாளா வதந்திகளைப் பரப்பி நிறைய பேரை கெடுத்திருக்கேன். அந்தப் பாவங்களிலிருந்து விடுதலை பெற ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்''னு கேட்டான்.

""உன் வீட்டில் தலையணை இருக்கா?''ன்னு கேட்டாரு சாமியார்,

இருக்கு சாமின்னான் வந்தவன். அதைக் கொண்டு வரச் சொன்னாரு சாமியார். அவனும் வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வந்தான்.

இந்த தலையணையை எடுத்துப் போய் ஊர் நடுவில் வைத்து பிரித்து பஞ்சை நாலா பக்கமும் பறக்க விட்டுட்டு வா''ன்னாரு சாமியார்.

வந்தவனும் தலையணையை பிரிச்சு, பஞ்சை பறக்க விட்டுட்டு திரும்பவும் சாமியார்கிட்ட வந்தான். சாமி! நீங்க சொன்ன மாதிரியே செய்துவிட்டேன்.

இப்ப நீ செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் சொல்றேன். தீ பறக்க விட்டுட்டு வந்த பஞ்சையெல்லாம் பொறுக்கி பழையபடி தலையணையில் அடைத்துவிட்டால் போதும். அதுதான் பரிகாரம்.

வந்தவன் அதிர்ச்சியடைஞ்சான். ""சாமி! அது எப்படி முடியும்? காத்துல பறந்த பஞ்சை நான் öப்படி சேகரிக்கிறது?''ன்னு கேட்க,

நீ செய்த பாவத்துல பாதிக்கப்பட்டவங்களோட மனச்சுமையையும் சரி செய்ய முடியாது. அதை சரி செய்ய முடியாதபோது பரிகாரம் மட்டும் எப்படி செய்ய முடியும். அதனால இனிமேலாவது பாவம் செய்றதை விட்டுட்டு எப்பவும் தர்ம வழியில் நடப்பதுதான் நல்லது.''
[i][b]
!
Reply


Messages In This Thread
பரிகாரம் - by சாமி - 11-24-2003, 08:55 PM
Re: பரிகாரம் - by AJeevan - 11-27-2003, 12:03 AM
[No subject] - by aathipan - 11-27-2003, 05:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)