10-29-2005, 02:28 AM
Thiyaham Wrote:[b]ஆங்கிலத்தில் ஒவ்வொரு வருடமும் புதிதுபுதிதாக சொற்கள் சேர்க்கப்படுகிறது. ஆனால் திமிழில் அப்படி இல்லையே
.......
......
[quote=Thiyaham]நான் எல்லாவற்றையும் தமிழில் தான் எழுதுவேன் என்று இறுமாப்பு கொண்டு [b]இல்லாத சொற்களுக்கு புதிதுபுதிதாக சொற்களை உருவாக்கி
என்ன நீங்களே முன்னுக்கு பின் முரணாக எழுதுகிறீர்கள்? ஆங்கிலத்தில் புதிது புதிதாக சொற்கள் சேர்க்கப்படுகின்றன தமிழில் அப்படி இல்லை என்று எழுதிவிட்டு பின்னர் தமிழிலே புதிது புதிதாக சொற்களை உருவாக்கி அர்த்தம் புரியாத படி எழுதுவதாக முன்னுக்கு பின் முரணாக எழுதுகிறீர்களே?
ஆங்கிலத்தில் மட்டுமல்ல, உலகில் உள்ள வாழும் மொழிகள் எல்லாவற்றிலுமே நாளுக்கு நாள் புதிய சொற்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. உங்களுக்கு ஆங்கிலத்தில் உருவாகும் புதிய சொற்களின் அர்த்தம் புரியும் அதே வேளை தமிழில் உருவாகும் புதிய சொற்களின் அர்த்தம் புரியாததற்கு காரணம் தமிழில் உருவாகும் புதிய சொற்களை ஏற்க மறுக்கும் மனோபாவமாக இருக்கலாம்.
[quote=Thiyaham] அப்படி சேர்த்தலும் அது ஏதோ குளுவுக்குறி போல் ஆகி விடுகிறது.
மேற்படி கருத்து அந்த மனோபாவத்துக்கு எடுத்துக்காட்டு.
ஆங்கிலம் உங்களுக்கு அந்நிய மொழியானதால் அதில் உருவாகும் புதிய சொற்களும் உங்களுக்கு அந்நியமானவை. ஆகவே வேறுபாடு குறைவு. தமிழ் உங்கள் தாய் மொழி. அதில் புதிய சொற்கள் வரும் போது உங்கள் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது போலும். ஆனால் புதிய தலைமுறை தமிழை அறியும் வயதில் இந்த மாற்றங்களை தமது தமிழாக கற்று ஏற்றுக்கொள்ளும்.
''
'' [.423]
'' [.423]

