10-28-2005, 09:42 PM
தாயகத்திலும், புலத்திலும் சிறு குழந்தைகளுக்கு எமது முறைப்படி சமைத்த கீரையும் சோறும் ஊட்டி வளர்த்ததைப் பார்த்திருக்கிறேன். உறைப்புக் கறி வேண்டாம் கீரைதான் வேண்டும் என்று கேட்டு வாங்கி உண்ணும் குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். மேல் நாட்டு முறைப்படி கீரையைச் சமைத்தால் பெரியவர்களே உண்பது கடினம்தான். தமிழும் வேண்டாம், தமிழ் உணவுகளும் வேண்டாம் என்றிருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் பெற்றோரில்தான் தங்கியிருக்கின்றது என்பதனை நானும் உறுதி செய்கிறேன்.

