Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவத்தினர் பாலியல் வல்லுறவு முயற்சி
#1
<b>புத்தூரில் பெண்மீது இராணுவத்தினர் பாலியல் வல்லுறவு முயற்சி: மக்கள் பெரும் ஆர்ப்பாட்டங்கள்</b>
யாழ். புத்தூர் வாதரவத்தையில் வீடொன்றிற்குள் புந்து அங்கிருந்த பெண்மீது சிறிலங்கா இராணுவ வீரர்கள் சிலர் பாலியல் வல்லுறவை மேற்கொள்ள முயன்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராணுவத்தினரின் 51 ஆவது படைப்பிரிவு முகாமிற்கு முன்னால் திரண்ட பொதுமக்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


யாழ்ப்பாணத்தின் வடகிழக்கே 13 கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் புத்தூர் வாதரவத்தை கிராமத்திலுள்ள வீடொன்றிற்குள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் புகுந்த சிவில் உடையணிந்த இராணுவ வீரர்கள் சிலர் அங்கிருந்த பெண்மீது பாலியல் வல்லுறவினை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.

வீட்டிலிருந்த அப்பெண் எழுப்பிய கூச்சலைக்கேட்டு அங்கு ஓடிவந்த அயலவர்கள் அவர்களை விரட்டியதால் ஓடிய இராணுவ வீரர்கள் அருகிலிருந்த முகாமிற்குள் புகுந்துள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

படைமுகாமிலிருந்த வீரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட தடியடிப் பிரயோகத்தில் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். அங்கு பதற்றகரமான சூழ்நிலை ஏற்பட்டதையடுதது கலகம் அடக்கும் சிறிலங்கா காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

புத்தூர் கிழக்கிலிருக்கும் ஆலயத்திற்கருகில் இருக்கும் பாக்கியம் என்பவரின் வீட்டிற்குள்ளேயே இராணுவத்தினர் புகுந்துள்ளனர். அங்கு அவரும் அவரின் 3 மகள்களும் இருந்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து இன்று காலை சுமார் நூறு பெண்கள் பொல்லுகளுடன் முகாமைச் சுற்றிநின்றனர். பிரதேச இளைஞர்கள் பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். காவல்துறையினரால் தாக்கப்பட்டவர்களுள் 60 வயது வயோதிபர் ஒருவரும் அடங்குகிறார். கே.நல்லையா (வயது 60), எஸ்.பார்த்தீபன் (வயது 30), ரி.றீகன் (வயது 35), கே.கோவிந்தன் (வயது 40), எஸ்.தனீஸ் (வயது 25), பி.ஆனந்தன் (வயது 40) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

இதே முகாம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இராணுவத்தினரால் தாக்கப்பட்டு வெளியே போடப்பட்டிருந்த வயோதிபர் ஒருவர் பின்னர் உட்காயங்களால் உயிரிழந்தார். மதுபோதையிலிருந்த வயோதிபர் இராணுவத்தினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாலேயே அவர் தாக்கப்பட்டார்.

puthinam
Reply


Messages In This Thread
இராணுவத்தினர் பாலியல் வல்லுறவு முயற்சி - by mayooran - 10-28-2005, 05:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)