11-24-2003, 06:39 AM
ஆமாம் குட்டி அடக்கி வைத்திருந்தவர்களை எல்லாம் தெற்கில் சுதந்திரமாய் வாழ விட்டது பேரினத்தின் சாணக்கியம். தெற்கில் பொட்டு இட்டுக் கொண்டு ஒரு பெண்ணால் அன்று சுதந்திரமாய் வெளியே செல்ல முடிந்ததா? சுதந்திரம் மின்சாரமும், ரயிலும் தான் என்னும் உங்களைப் போனறவர்களுடன் பேசுவதில் லாபமில்லை. ரயிலில் வந்திருப்பீர்கள் யாழிலிருந்து வவனியா வரும் வரை தான் தமிழனாய் வந்திருப்பீர்கள் அதன் பின் கூனிக் குனிந்து தான் வந்துள்ளீர்கள். இதுதான் சுதந்திரமா? அவர்கள் சுதந்திர வாழ்வுக்கல்ல சோதரனே சொகுசு வாழ்விற்காக வந்தவர்கள். தெற்கில் மட்டும் என்ன லொட்ஜூகளிலும் சிங்களவனின் வீடுகளிலும் அடைந்து வாழாமல் என்ன சகல சுதந்திரங்களுடனுமா வாழ்ந்தீர்கள். பர தேமழா, தோசை வடை என்றும் ஐந்தாம் வகுப்பு படித்தவனுக்கு தொழிலில் பதவியுயர்வும், மெத்தபடித்தவன் தமிழன் என்ற காரணத்தால் அடிமைச் சேவகமும் பண்ண அடக்கி வைத்தவர்களைப் பற்றி புரியாமல் பேசுகின்றீர்கள். கிணற்றுத தவளையாய் குடாநாட்டில் வாழ்ந்த படியால் அப்படி எழுதுகின்றீர்கள். ஆனால் என் அனுபவம் பேசுகின்றது. நிச்சயமாய் வன்னியில் வசதி குறைவாக இருந்தாலும் அவர்கள் ஆட்டுப் பட்டியில் அடைந்திருந்தாலும் அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாய் வாழ்ந்தார்கள். பேரினத்தின் தடைகளினால் அவர்கள் துன்பப் பட்டார்களே ஒழிய வேறு காரணமில்லை. நீங்கள் தான் உங்கள் களிமண் மண்டையை காலுககடியில் அல்ல பேரினச் சேற்றுக்குள் புதைத்து வைத்துக் கொண்டு எழுதுகின்றீர்கள். தங்கக் கூண்டில் வாழ்ந்தாலும் கிளிக்கு அது சிறைக்கூடம் தான். சிங்களவனின் ஒரு சில சலுகைகளுக்காக அவமானத்துடன் வாழ்ந்த உங்களைப் போல் எம்மால் வாழ முடியாது. மானம் ரோசமுள்ள தமிழன் வாழவும் மாட்டான். தன் மண்ணை விட்டு ஓடியிருக்கவும் மாட்டான். ஓடினாலும் பரவாயில்லை தன் இனத்தை, போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வாழ்ந்திருக்க மாட்டான் உங்களைப் போல.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

