10-27-2005, 02:12 PM
துருப்புக்காவி என்பது பெயர்ச்சொல். அது பயன்பாட்டுக்கு வந்து நீண்டகாலமாகிவிட்டது. (நானறிய தொன்னூறின் தொடக்கத்தில் இது பயன்படுத்தப்பட்டது)
இதே போல் நிறைய போர்த்தளபாடச் சொற்கள் தமிழில் வந்துவிட்டன. அனைத்தும் ஈழப்போராட்டத்தினால் வந்தவை. உலங்குவானூர்தியெனும் சொல் பி.பி.சி தமிழோசை சங்கர் அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை எந்தக்கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டனர்.
முன்பு இப்படித்தான் தமிழில் அணிநடை முயற்சிகள் செய்யப்பட்டபோத யாழ்ப்பாணத்தில் மேதாவிகள் சிலர் பழித்தனர். சில கிராமப்புறப் பாடசாலைகள் இவற்றைச் செய்தபோது எல்லாரும் கிண்டலடித்தார்கள். இன்று வன்னயில் புலிகளின் அணிகள் மட்டுமன்றி எல்லோருமே தனியே தமிழில் மட்டுமே கட்டளைகள் வழங்கி அணிநடை செய்கின்றனர். அதே மேதாவிகள் வந்து பார்த்து மரியாதையை ஏற்றுக்கொண்டு செல்கின்றனர். தமிழ்க்கட்டளைகளில் மிடுக்குக் குறைந்துவிட்டதா?
புதுச்சொல் பயன்பாட்டுக்கு வரும்போது முதல் இரண்டொரு தடவை அடைப்புக்குறிக்குள் அதன் விளக்கத்தைப்போடலாம். பின் வழமைக்குத் திரும்பிவிட வேண்டும்.