10-27-2005, 01:30 PM
[size=14]
<b>தூக்கு கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது பற்றி
பாராளுமன்றத்தில் விவாதம்
அப்துல்கலாம் யோசனை </b>
புதுடெல்லி, அக். 27-
தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி, விரிவான கொள்கையை வகுக்க வேண்டும் என்று ஜனாதிபதி அப்துல்கலாம் யோசனை தெரிவித்து உள்ளார்.
கருணை மனுக்கள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் உள்ளிட்ட சில மரண தண்டனை கைதிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி உள்ளனர். அந்த கருணை மனுக்களை பரிசீலனை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் அனுப்பி வைத்து இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் வயது, உடல் மற்றும் மனநலம், குடும்ப பின்னணி ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
பரிசீலனை
உள்துறை அமைச்சகம் அந்த மனுக்களை பரிசீலனை செய்து மந்திரிசபையின் ஒப்புதலுடன் தனது கருத்தை ஜனாதிபதிக்கு தெரிவிக்கும். அதன் அடிப்படையில் ஜனாதிபதி முடிவு எடுப்பார்.
அரசிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி நாட்டின் முதல் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ள வஜாகத் அபிபுல்லாவின் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
ஜனாதிபதி யோசனை
அந்த நிகழ்ச்சி முடிந்ததும், கைதிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பது பற்றியும், மரண தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் பிரச்சினை பற்றியும் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், ``இதுதொடர்பான எல்லா அம்சங்கள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி விரிவான கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும்'' என்றார்.