10-27-2005, 12:10 PM
தியாகம்!!! நீங்கள் சொல்வதுபோல மொழி என்பது ஒருவரது கருத்துக்களை இன்னொருவருக்கு தெரியப்படுத்தும் ஊடகமே. ஆனால் அது அத்தகைய ஒரு தொழிற்பாட்டுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அதற்கப்பாலும் பலமைல் தூரம் செல்கின்றது. மொழி என்பது எமது அடையாளம்இ தனித்துவம்இ வரலாறு இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். அதற்காக சங்ககாலத்தில் எப்படி மொழியைப் பாவித்தோமோ அப்படியேதான் இப்போதும் பாவிக்க வேண்டும் என்று விவாதிப்பது பொருத்தமற்றது. மொழி என்பது காலவோட்டத்திற்கேற்ப மாற்றங்கள் விரிவாக்கங்களுக்குட்பட்டு செல்வது தவிர்க்க முடியாததே. சிலவேளைகளில் வேற்று மொழியில் உள்ளவற்றை எமது மொழிக்கு பெயர்த்தலில் ஈடுபடும்போது அதேகருத்தை அப்படியே தருவதென்பது கடினமானதுதான். ஆனால் முற்றிலும் முடியாது என்று விவாதிப்பது பொருத்தமற்றதாயிருக்கும் என்று எண்ணுகின்றேன். எமது மொழியில் ஏலவேயுள்ளவற்றை அடியொட்டியதாக மாற்றங்களை ஏற்படுத்தல் சிறப்பாயிருக்குமல்லவா. அப்படி மயக்கமான சந்தர்ப்பங்களில் வேற்று மொழியை அடைப்புக்குறிக்குள் இடுவது கருத்தை தெளியப்படுத் உதவும்.
கடினமாயிருக்கின்றது என்பதற்காக வேற்று மொழியில் உள்ளவற்றை அப்படியே எமது மொழியில் தரவிறக்கி பயன்படுத்தினால் எமது மொழியின் தற்போதைய நிலையை ஒருமுறை கற்பனை பண்ணிப்பாருங்கள்.
முடிந்தவரை முயல்வோம்.......
கடினமாயிருக்கின்றது என்பதற்காக வேற்று மொழியில் உள்ளவற்றை அப்படியே எமது மொழியில் தரவிறக்கி பயன்படுத்தினால் எமது மொழியின் தற்போதைய நிலையை ஒருமுறை கற்பனை பண்ணிப்பாருங்கள்.
முடிந்தவரை முயல்வோம்.......

