10-27-2005, 10:53 AM
மொழி என்பது ஒருவருடைய எண்ண கருத்துக்களை மற்றவருக்கு தெரியப்படுத்தும் ஒரு ஊடகம். எல்லா எண்ணக்கருத்துக்களுக்கும் எல்லா மொழியிலும் சொல் கிடைப்பதில்லை. அப்படி குறிப்பிட்ட மொழியில் நாம் சொல்ல வந்ததை சொல்லமுடியாமல் போகும் போது அது "சொல் இறத்தல்" ஆகிறது. ஆங்கிலத்தில் ஒவ்வொரு வருடமும் புதிதுபுதிதாக சொற்கள் சேர்க்கப்படுகிறது. ஆனால் திமிழில் அப்படி இல்லையே அப்படி சேர்த்தலும் அது ஏதோ குளுவுக்குறி போல் ஆகி விடுகிறது. சில ஆண்டுகளுக்கு(1998) முன்னர் பாரிசில் இருந்து வெளியாகும் ஈழநாதத்தின் சந்தாதாரன் நான். அதிலே செய்திகளில் "துருப்புக்காவி'' என்று ஒரு சொல் அடிக்கடி வரும். எனக்கு அது விளங்கவில்லை. எத்தனையோ மாதங்களின் பின்னர் தான் அதன் அர்த்தம் என்னவென்று புரிந்துகொண்டேன்.
நான் எல்லாவற்றையும் தமிழில் தான் எழுதுவேன் என்று இறுமாப்பு கொண்டு இல்லாத சொற்களுக்கு புதிதுபுதிதாக சொற்களை உருவாக்கி நீங்கள் சொல்லவந்தை அர்த்தம் புரியாத சொற்களை கொண்டு எழுதாதீர்கள்.
நான் எல்லாவற்றையும் தமிழில் தான் எழுதுவேன் என்று இறுமாப்பு கொண்டு இல்லாத சொற்களுக்கு புதிதுபுதிதாக சொற்களை உருவாக்கி நீங்கள் சொல்லவந்தை அர்த்தம் புரியாத சொற்களை கொண்டு எழுதாதீர்கள்.