Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
திரை மொழி
#6
[Image: FillmMaking.gif]திரை மொழி
__________________________________அஜீவன்

[highlight=red:7b637405e0]திரை.2[/highlight:7b637405e0]

திரைக்கலையில் அனைத்துமே முக்கிய பகுதிகளாகத்தான் கருத வேண்டும் .காரணம் ஒரு மனிதனின் உடலில் உள்ள அவயவங்களில் எது குறைந்தாலும் அது அங்கவீனம்தான்.அது போலவே சினிமா என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட கலையல்ல. ஆனால் இயக்குனர் கலையாக கருதுவதற்கு காரணம், இவற்றை தேர்வு செய்வதிலிருந்து, அப் படைப்பின் வெற்றி , தோல்வி கூட இயக்குனர் கைகளில் தங்கியிருப்பதால்தான். இயக்குனர் என்பவர் ஒரு திரைப்படத்தின் தாயாகவே கருத வேண்டும். ஒரு குழந்தையின் பிறப்பு முதல் வளர்ப்பு வரை தாய்க்குத்தான் முக்கிய பங்கு உண்டு.

அடிப்படையில் ஏழு சுவரங்களுக்குள் இசை அமைவதைப் போல , ஒரு திரைப்படமும் ஒரு சில குறிப்பிட்ட வட்டத்துக்கள்தான் சுற்றிச் சுழல்கிறது. அதை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.ஆனால் அது எப்படி வேறுபடுகிறது என்றால் , அது இயக்குனர் படைக்கும் விதத்தில்தான் தங்கியிருக்கிறது. ஒரு மனிதனால் அனைவரையும் 100 சதவிகிதம் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் ஒரு திரைப்படத்தில் அல்லது படைப்பில் 60 சதவிகிதமாவது திருப்திப் படுத்த முடிந்தால் அதுவே ஒரு பெரு வெற்றிதான்.

இது எங்கேயிருந்து ஆரம்பிக்கிறது என்றால் ஒரு கதையை இயக்குனர் தேர்ந்தெடுப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. அது இயக்குனரது கதையாகவோ அல்லது இன்னொரு எழுத்தாளரின் கதையாகவோ இருக்கலாம். ஆனால் இயக்குனருக்கு , அந்த கதையைப் பற்றிய ஒரு அனுபவம் இருந்தால் மட்டுமே அவரால் முழுமையாக செயலாற்ற முடியும்.
கதை அழகாக சொல்லப் பட்டிருக்கிறதே என்று இயக்குவதற்கு முயல்வது தோல்வியைத்தான் தரும்.

காரணம் ஒரு குழந்தைப் பிரசவத்தைக் காணாத , அதுபற்றித் தெரியாத ஒருவரால், யதார்த்தமாக ஒரு பிரசவத்தை திரையில் செதுக்க முடியாது. அதை நேரடியாகக் காணா விட்டாலும் , அது பற்றிய விஞ்ஞான ரீதியான மருத்துவ திரைப்படம் ஒன்றையாவது பார்த்து , அது தொடர்பானவர்களுடன் பேசி பல தகவல்களை சேகரித்த பின்னரே அதற்கு இறங்க வேண்டும். நான் திரைப்படங்களில் பார்த்ததற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு நிகழ்வாக பிரசவம் நடப்பதை கண்டேன். அது எனக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு. அதாவது சுவிசின் சுகாதார அமைச்சுக்காக ஒரு டாக்யுமன்றி படத்தை ஒளிப்பதிவு செய்யக் கிடைத்த போதுதான் அது எனக்குக் கிடைத்தது.

அதுவரை தமிழ் சினிமாவில் பார்த்து வந்த விடயமே என் மனதில் படிந்திருந்தது. இவர்கள் ஒரு மென்மையான விடயத்தைக் கூட அதி மேதாவித்தனமாக நடிக்க வைத்து சாதாரண மக்களையே பயமுறுத்துவது போன்று காட்சிகளை அமைப்பதால், அக் காட்சி வாயிலாக சம்பந்தப்பட்டவர்களது மனதை கவர முடியும் என்ற கருத்து இவர்களிடமுண்டு.அது மக்கள் மத்தியில் உண்மைக்கு புறம்பான பீதியை உருவாக்க ஏதுவாகிறது. அதை யதார்த்தமாக தேவையான அளவு மாத்திரமே சுவையோடு கலை நயத்தை சேர்ந்தால் அது சம்பந்தப்பட்டவர்களைக் கவருவதுடன்,அடுத்தவர்களுக்கும் ஒரு முன் மாதிரியாக அமைய வாய்ப்புண்டு.

எனவே ஒரு இயக்குனரது முக்கிய பணி தனக்கு பரிச்சயமுள்ள , தான் வாழ்ந்த பிண்ணனியுள்ள கதையை அல்லது கதைக்கருவை தேர்வு செய்வதேயாகும். அப்படி இல்லாவிட்டால் அதைத் தவிர்ப்பதே சிறந்தது.

திரையில் மக்கள் காணும் சினிமாவை முதன் முதலில் மனத்திரையில் காண்பவன் கதாசிரியன் எனும் முதல் ரசிகனாகும். இவர் தனிமையில் ரசித்து , சிரித்து , அழுது , துவண்டு , வேதனைப்பட்டு எத்தனையோ வித விதமான மாற்றங்களை செய்து இறுதியில்தான் கடுதாசியில் தன் எண்ணங்களை வடிக்கிறார்.

இவர் தன் வாழ்வில்லோ, பிறர் வாழ்விலோ நடந்த சம்பவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அல்லது அறிந்த செய்திகளை வைத்து அவர் புனையும் விதத்திலேயே கதைக்கு மெருகேறுகிறது. இதுதான் ஒரு திரைப்படத்தின் விதியாகிறது.

நீங்கள் தெரிந்து கொள்ள
Shots (ஷாட்ஸ்) [பகுதி] சிலவற்றை
இணைக்கிறேன்.

[size=15]Ariel Shot

Very Long Shot

Long Shot

Mid Shot

Mid Shot

Mid Shot

Close up

Big Close up

Big Close up

மேலேயுள்ள Shots (ஷாட்ஸ்) [பகுதி] பற்றிய விபரங்களை அடுத்து எழுதுகிறேன்.

கனவு தொழிற்சாலை பயணம் தொடரும்............அஜீவன்

(உங்களுக்கு புரியாத கேள்விளைத் தொடுக்கலாம்.எனக்குத் தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்வேன்.)

[size=12]திரைக்கலையை உலகுக்களித்த மேதைகளுக்கும்,என் திரை ஆசான்களுக்கும்,நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.
AJeevan

www.ajeevan.com
Reply

Messages In This Thread
திரை மொழி - by AJeevan - 11-13-2003, 02:07 PM
[No subject] - by Ilango - 11-13-2003, 11:32 PM
[No subject] - by sOliyAn - 11-14-2003, 02:31 AM
[No subject] - by AJeevan - 11-14-2003, 10:59 AM
[No subject] - by vanathi - 11-16-2003, 08:46 PM
[No subject] - by AJeevan - 11-24-2003, 12:57 AM
[No subject] - by vanathi - 11-25-2003, 11:16 AM
[No subject] - by AJeevan - 11-26-2003, 11:35 PM
[No subject] - by ganesh - 11-28-2003, 04:45 AM
[No subject] - by AJeevan - 11-29-2003, 02:58 AM

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)