10-27-2005, 07:05 AM
வலைஞன் Wrote:நன்றி யூட்,
உங்கள் கருத்தை ஆக்கபூர்வமானதாக எடுத்து சொற்களைத் தமிழில் மாற்றியுள்ளேன். "Kick Out" என்கிற செயற்பாடு புதிதாக இணைக்கப்பட்டதாலும், அந்த செயற்பாட்டுக்கு உரிய படத்தை களத்தில் இன்னும் தமிழில் மாற்றவில்லையென்பதாலும் விளக்கம் கருதியே அப்படி எழுதியிருந்தேன்.
எனது கருத்தை <b>ஆக்கபூர்வமானதாக எடுத்து</b> செயற்பட்டிருப்பது வலைஞனின் வளர்ச்சிக்கு அடையாளம். நல்லது. ஆயினும் வெளியேற்றம் என்ற செயற்பாட்டுக்கு ஆங்கிலத்தில் kick out என்று பயன்படும் சொற்றொடரின் உதவியின்றி, வெளியேற்றம் என்ற பதம் தனது கருத்தை வெளிப்படுத்த வகையற்றதாக தாங்கள் சித்தரிப்பதாகவே கிக்கவுட் என்ற சொற்றொடரை தொடர்ந்து பயன்படுத்துவது காட்டுகிறது. இது தமிழை அவமதிப்பதாகிறது. வெளியேற்றம் தாராளமாக தனது கருத்தை புலப்படுத்தி நிற்கும் சொற்றொடராகும். நீங்கள் செய்யும் செயற்பாடு வெளியேற்றமாகும். அதற்கு ஆங்கிலம் முண்டுகொடுத்து தான், அதன் கருத்து எமக்கு விளங்கவேண்டும் என்ற துர்ப்பாக்கிய நிலையில் தமிழ் இல்லை வலைஞனே! ஆகவே தமிழுக்கு மதிப்பு தந்து அந்த கிக்கவுட்டையும் எடுத்து விடுங்கள். நன்றி.
''
'' [.423]
'' [.423]

