11-23-2003, 09:44 PM
விடியலைத் தேடிய வனிதையர் முடிவைக் காணாத துயரத்தில்!
ஒருவேளை உணவுக்காக உடலைத் தானம் செய்ய வேண்டும். அதிகாரிகளின் சல்லாபங்களுக்கும் சேட்டைகளுக்கும் இடம்கொடுக்காவிட்டால் அங்கு நிம்மதியாக வாழவே முடியாது. இதுதான் லெபனானில் உள்ள பணிப்பெண்களின் உண்மை நிலைமை.
வெபனானில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் வரை பணிப் பெண்கள் கௌரவமாகவே நடத்தப்பட்டனர். கைநிறையச் சம்பளம் பெற்று வந்தனர். லெபனானில் குடியேறியவர்களுள் பெரும்பாலானவர்கள் ஜரோப்பா, ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்த படித்த சமூகத்தினர். இவர்களிடமே இலங்கைப் பெண்கள் பெரும்பாலும் பணிப்பெண்களாக கடமையாற்றினர்.
'உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடம்பெயர்வால் இவர்கள் எம்மை கைவிட்டு ஜரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால் நாம் அனாதைகளானோம். குண்டு வெடிப்புகளும், துப்பாக்கி வேட்டுக்களுக்கும் மத்தியில் தெரு நாய்களைப் போன்று இரவு பகலாக அலைந்து திரிந்தோம். உணவு இல்லை, மாற்றுடை இல்லை, தங்கவும் இடம்இல்லை. யார் காலைப் பிடித்தாவது நாடு திரும்பலாம் என்றால் பாஸ்போட் கையில் இல்லை. இங்கு தான் எங்கள் வாழ்க்கையில் சீரழிவுப் படலம் ஆரம்பமாகியது.
ஆங்காங்கே அகதி முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு சென்று தங்கும்படியும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவை எங்கே இருக்கின்றன? அங்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பது எவருக்கும் தெரியாமல் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு ஆதரவளிக்க வந்தது ஒரு கும்பல். அவர்கள் எம்முடன் அன்பாகப் பேசினர். இது நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு துரும்பாக அல்ல, உயிர் காக்கும் தோணியாகவே தோன்றியது.
எம்மை அவர்கள் அழைத்துச் சென்றனர். ஆதரவு காட்டினர். உணவளித்து உபசரித்தனர். இவை அனைத்தும் முதல் இரண்டு நாட்கள் மட்டுமே. பசி பட்டினியால் துவண்டு போய் இருந்த நாம், சற்று தெம்படைந்த பின்னரே எம்மை ஆதரித்தவர்களின் சுயரூபம் வெளிப்பட ஆரம்பித்தது.
வெட்டிப் பலி கொடுக்கவிருக்கும் ஆடை எப்படிக் குளிப்பாட்டி அதற்கு மாலை போட்டு உணவ10ட்டுவார்களோ அப்படியானது எங்கள் நிலை. மாற்றுடை கேட்டபோது அரைகுறை ஆடைகளை தந்தனர். ஒரே அழுக்கான ஆடைகளை எத்தனை நாட்களுக்கு உடுத்தி இருப்பது? இங்கே எல்லோரும் பெண்கள் தானே என்று அவற்றை உடுத்திக் கொண்டுடோம். எந்த நேரத்திலும் அரைநிர்வாணம் உருண்ட திரண்ட அங்கங்ள் பளிச் என தெரிய வேண்டும். இது அதிகாரிகளின் கண்டிப்பான கட்டளை.
சிறு சிறு வேலைகளுக்காக எம்மை வெளியே அழைத்துச் செல்வார்கள். அங்கே இந்த அதிகாரிகளின் மனைவியைப் போன்று நடந்து கொள்ள வேண்டும். பட்டப் பகலில் பல நண்பர்கள் ஒன்று கூடி அனுபவிப்பார்கள் இவர்களைக் குஷிப்படுத்த மறுத்தால் கிடைக்கும் சித்திரவதைகளுக்கு அளவே இல்லை.
நல்ல உண்வு வேண்டுமா? அதற்காக, ஒரு வேளை உணவுக்கு ஒருவனுக்கு உடலை தானமாக்க வேண்டும். நிம்மதியாக சற்று தூங்க எழ வேண்டுமானல் இரவு முழுவதும் ஒரு அதிகாரியின் கட்டிலில் பங்காளியாக வேண்டும். இதற்கும் மேலாக, இராணுவ சிப்பாய்கள், பொலிஸார் என கூட்டமாக வந்த கும்மாளம் அடிப்பார்கள். அன்று நகர வேதனை தான்.
நாட்கள் செல்லச் செல்லத்தான் இது ஒரு அகதி முகாம் அல்ல, பொலிஸாரின் அனுசரனையுடன் நடத்தப்படும் சட்ட விரோத உல்லாச விடுதி என்பது தெரியவந்தது. என்ன செய்வது? எப்படித் தப்புவது? அந்த முகாமில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இருக்கின்றார்கள். யாரை நம்புவது? ஆண்களிடம் தான் இந்த கெடுபிடி என்றால், போதை தலைக்கேறிய பெண்கள் அட்டகாசம் அதைவிட மோசம். இவர்களிடம் சகவாசம் வைத்துக் கொண்ட நமது பெண்கள் பலர் ஒரினச் சேர்க்கையில் கூட பழக்கப்பட்டிருந்தனர்.
வெளியில் வாடகைக்கு அழைத்துச் செல்லும் சமயங்களிலும், பொலிஸார் கூட்டமாக வந்து கும்மாளம் போடும் சந்தர்ப்பங்களிலும் தப்பி ஓடிய பெண்கள் கொடுத்த தகவல்களை வைத்து உண்மையான பொலிஸார் வந்து எங்களை மீட்டனர்.
ஒருபடியாக எமது நாட்டுத் தூதரகத்தை கண்டுபிடித்தோம். உதவி கோரினோம். உதவி செய்தார்கள். கைமாறாக அவர்களது உடல்பசிக்கு இரையாக வேண்டிய நிலைமை. தமக்குத் தேவையானவர்களை தம்மோடு வைத்துக் கொண்டு, ஏனையவர்களை லெபானான் அரசு நடத்தும் முகாம்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கே பல ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அதில் எம் நாட்டவர்களும் இருந்தனர்.
பாஸ்போட் இல்லாதவர்கள், விசா முடிந்தும் கள்ளத்தனமாக தங்கி இருந்தவர்கள், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என அங்கே பல தரப்பட்டவர்களையும் காண முடிந்தது. மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான் இந்த முகாமின் நிலைமை. தூதரக அதிகாரிகள் என்று சொல்லிக் கொண்டு யார் யாரோ வருவார்கள். பாஸ்போட் பெற வேண்டும் என அழைப்பார்கள். அரவணைத்து மகிழ்வித்து விட்டுப் போவார்கள். இந்த முகாம்களில் ஏழு எட்டு வருடங்களாகவும் பலர் இருக்கின்றனர்.
இலங்கைப் பெண்கள் பலர் கைகளில் குழந்தையுடன் கன்னித் தாய்மார்களாக அங்கே தங்கி இருப்பதையும் காண முடிந்தது. பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வெளிநாடு சென்ற இளம்பெண்கள், தாமே பிள்ளையைப் பெற்றுக் கொண்டு பரிதவித்து நிற்கின்றனர்.
திருமணம் முடிந்து ஒரு சில வாரங்களில், ஒரு சில மாதங்களில் வெளிநாடு போய் உழைத்துக் கொண்டு வா என கணவன்மாரால் கட்டயமாக அனுப்ப வைக்கப்பட்ட இளம் மனைவிமார் அங்கே கைகளில் குழந்தையுடன் இருக்கின்றார்கள். இந்த குழந்தைகளின் தந்தையர் யார்? வீட்டு எஜமாக்களா? முகாம் அதிகாரிகளா? உதவி செய்வதாக கூறிய உத்தியோகத்தர்களா? தந்தையின் பேர் அறியாத குழந்தைகள் 400க்கும் மேல் இருக்கின்றனர் என்று தெரிய வருகின்றது. இது தெரிந்த விவரம். தெரியாமல் இன்னும் எத்தனை குழந்தைகளோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இப்படிப் பிறந்த குழந்தைகளின் பிறப்புக்கள் கூட இன்னும் பதியப்படவில்லை. இவர்கள் எந்த நாட்டைச் சோந்தவர்கள் என்று தீர்மாணிக்க முடியாத நிலையில் நாடற்ற பிறவிகளாக ஓரம்கட்டப்பட்டுள்ளனர். இக் குழந்தைகளின் எதிர்காலம் சூனியமாகவே இருக்கின்றது.
கன்னித் தன்மையுடன் விமானம் ஏறியவர்கள்; இன்று கன்னித் தயாமாராகிவிட்டனர். கணவனை விட்டுச் சென்றவர்கள் கையில் குழந்தை. இவர்கள் இங்கு திரும்பி வந்தால் குடும்பத்தவர்கள் இவர்களை ஏற்றக் கொள்வர்களா? பணம் சம்பாதித்து வா என்று விரட்டிய கணவர்மார் தமது மனைவியை மீண்டும் தம்முடன் சேர்த்துக் கொள்வார்களா? இல்லை, இந்த சமுதாயம் தான் இந்த அபலைகளை ஏற்றுக்கொள்ளுமா?
இப்படியான கேள்விகளுக்கு விடைகிடைக்காமல் இப்பெண்கள், லெபனானில் திக்குத் தெரியாமல் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கின்றனர். இந்த நிலைக்கு யார் பொறுப்பு? யார் குற்றவாளி? இந்த இளம் பெண்கள் தண்டனை அனுபவிப்பது அவர்களுடைய தலைவிதியா?
பொருள் தேடிவா என்று அனுப்பிய பெற்றோர்களா, பணம் கொண்டு வா என்று இளம் மனைவியை அனுப்பி வைத்த கணவன்மரா இந்த பாவச் செயலுக்கு பொறுப்பேற்கப் போகின்றனர்.? இப்டியான கேள்விகளை எழுப்புகின்றனர்; லெபனான் சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் இருக்கும் இலங்கைப் பெண்கள். இக் கேள்விக்கு விடை காண்பது யார்?
தொழில், தொழில்வாய்ப்புகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அண்மையில் லெபனான் சென்று, அந்நாட்டு தொழில் அமைச்சர் மற்றும் சட்ட விவகார அமைச்சர் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தினார். இதன் பயனாக விசா இன்றியும், சிறு குற்றச் செயல்களுக்காகவும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் 175 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்களுள் 71 இளம் பெண்கள் கடந்த 7ஆம் திகதி வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் மூலம் அழைத்து வரப்பட்டனர். இவர்களுள் மேலும் 104 பேர் இன்னும் சில தினங்களில் அழைந்து வரப்படவுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சுஸந்த பெர்னான்டோ கூறினார்.
இதே வேளை தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, 13ஆம் திகதி மீண்டும் லெபனான் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க விமானநிலையம் வந்திறங்கிய இப் பெண்கள் மிகவும் சந்தோஷமாகக் காணப்பட்டனர். மீண்டும் இலங்கை வருவோமோ? வரத்தான் முடியுமோ? என்று ஏக்கத்துனட இருந்தவர்கள், அமைச்சரின் முயற்சியால் தாய்நாட்டு மண்ணில் வந்திறங்கினர். இது அவர்களுக்கு மறுபிறவி எடுத்ததைப் போன்று தோன்றுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இப்படியான சித்திரவதைகள் எல்லாப் பெண்களுக்குமே ஏற்படுகின்றனவா? என்று கேட்டால், அதற்கு அவர்கள் அளித்த பதில் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. அங்கே நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதே அந்தப் பதில். மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்களில், லெபனானில் தொழில் புரியும் இலங்கைப் பெண்கள்தான் கூடுதலான வருமானம் பெறுகின்றனர். வசதியாக இருக்கின்றனர் என்று லெபனானில் உள்ள இலங்கைத் தூதுவர் கூறுகின்றாரே அது சரியானதா? என்று கேட்டோம். அது அவருடைய பார்வையில் என்று ஒரே சொல்லில் பதில் அளித்தனர்.
அதிகாரிகள் தொடர்பாகப் பல்வேறு குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. இப்பொழுது எமது தூதரகத்தின் செயற்பாடுகள் எப்படி? என்று கேட்டபோது, 'புதிய அமைச்சர் பலமுறை அங்கு வந்து நிலைமைகளை பார்த்ததாக அறிந்தோம். கடைசியாக எம்மை விடுவித்த போது எங்களால் அமைச்சரைக் காண முடிந்தது. எங்களுடைய குறைகளைக் கேட்டறிந்தார். தூதரக நிலைமையும் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்று கூறியவர்கள், இன்னும் லெபனானில் பெரும் தொகையான இலங்கைப் பெண்கள் விசா முடிந்தும் பாஸ்போட் இல்லாமலும், சிறு சிறு குற்றங்கiளுக்காகவும் இலங்கை திரும்ப முடியாமல் இருக்கின்றனர். எனவே அவர்களையும் இலங்கைக்கு திருப்பி அழைக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உருக்கமான ஒரு வேண்டுகோளையும் இப் பெண்கள் விடுத்தனர்.
இப்படி மததிய கிழக்கு நாடுகளில் எமது பணிப்பெண்கள் பல்வேறு சீரழிவுகளுக்கும், பாலியல் வல்லுறவுகளுக்கும், சி;த்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.அங்கு செல்லும எல்லாப் பெண்களும் இப்படிப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தீர்மானித்துவிட முடியாது. அங்கிருந்து வரும் சில பெண்கள் 'என்னை வீட்டு எஜமானி சொந்தப்பிள்ளை போல் பார்த்தார். ஒரு மகாராணியைப் போல் இருந்தேன்" என்றும் கூறுகின்றர். அப்படியானால் ஏன் அடைத்து வைக்கப்பட்டிருந்தீர்கள்? என்று கேட்டால் வாயடைத்து நின்றனர்.
முன்னாள் ஜனதிபதி ஆர். பிரேமதாசாவின் அமைச்சரவையில் தொழில் அமைச்சராக இருந்த ஜீ.எம். பிரேமச்சந்திர மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று திரும்பியவுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பெண்கள் பணிப் பெண்களாகச் செல்வதற்கு தடை விதித்தார். ஆனால் அது தொடர்ந்து நடைபெறவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் தடை நீக்கப்பட்டது.
இப்பொழுதும் முற்றாகத் தடை செய்யவிட்டாலும், அங்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கருத்து.
நன்றி சுடர்ஒளி