Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விமான நிலையத்தில் தமிழ் இளைஞர்கள் கடத்தல்
#1
சிறிலங்காவின் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.


தங்களது நண்பர் ஒருவரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக 4 பேரும் விமான நிலையத்திற்கு வந்த போது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

யாழ். நெல்லியடியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் 4 பேரும் செவ்வாய்க்கிழமை காலை கொழும்புக்கு வந்து வெள்ளவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். பின்னர் வான் ஒன்றில் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் சென்ற வானை மறித்த இனந்தெரியாத ஆயுதக் குழுவினர் நால்வரையும் மற்றொரு வானில் வலுக்கட்டாயமாகத் ஏற்றி கடத்திச் சென்றுள்ளது.

இந்தச் சூழலிலும் கடத்தப்பட்ட இளைஞர்களில் ஒருவர் தனது கைபேசி மூலம் உறவினருக்கு தாங்கள் தடுக்கப்பட்டு மற்றொரு வானில் ஏற்றப்படுவது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நான்கு இளைஞர்களின் உறவினர்களும் காவல்துறையிடம் இந்தக் கடத்தல் குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.
<span style='font-size:14pt;line-height:100%'>puthinam</span>
Reply


Messages In This Thread
விமான நிலையத்தில் தமிழ் இளைஞர்கள் கடத்தல் - by mayooran - 10-27-2005, 05:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)