10-27-2005, 04:51 AM
Written by Paandiyan Thursday, 27 October 2005
கனடாவின் வோட்டர்லூ பகுதியில் கடந்த மாதம் இரு தமிழ் சகோதரர்களை ஊர்தியால் மோதிக் கொன்று விட்டு தப்பியோடிய தமிழ் இளைஞரை அமெரிக்காவில் வைத்து அமெரிக்க உளவுப் பிரிவினரான எப்;.பி.ஐயினரின் துணையுடன் தாம் கைது செய்துள்ளதாக வோட்டலூ பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் கனடா வோட்டர்லூ பகுதியில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் வைத்து நகுலசிகாமணி சந்திரசேகர் மற்றும் அவரது சகோதரர் சௌமியன் ஆகியோர் ஊர்தியால் மோதிக் கொல்லப்பட்டிருந்தனர்.
இவர்களின் கொலையுடன் சம்பந்தப்பட்ட போல் ஜெயராஜா அலெக்சாண்டர் (அகவை 21) என்ற ரொறன்ரோவைச் சேர்ந்த நபரே நியுூயோர்க் நகரிற்கு 80 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள கனக்கட் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் ஒளிந்திருந்த வேளை அமெரிக்க உளவுப் பிரிவினரான எப்.பி.ஐயினரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என வோட்டர்லூ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்நபர் அமெரிக்காவின் நியுூ ஹெவன் பகுதியில் உள்ள நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டதாகவும், இவரை கனடாவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் வோட்டர்லூ பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஊர்தியை தாம் அண்மையில் மீட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நன்றி சங்கதி

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.