10-27-2005, 03:25 AM
மீண்டும் வாதங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற தோற்றப்பாட்டை கொண்டு இதை நான் ஆரம்பிக்கவில்லை. ஆனால் கேட்ட கேள்விக்கு( பதில் தாருங்கள் பகுதியில்) பதில் தரவேண்டிய கடப்பாட்டை கருத்தில் கொண்டு எழுதுகின்றேன்.
வணக்கம் நாரதர்
தேசியவிடுதலைப் போராட்டத்தை என் தேவையற்ற விதத்தில் பயன்படுத்துமளவுக்கு சிறுமைப்பட்டுப் போகவில்லை. ஆனால் அதெப்படி நாரதர். உங்கள் சார்பான கருத்துக்களை போராட்டம் சார்பாக கொண்டு செல்லும் போது சரி எனவும், உங்கள் கருத்துக்களுக்கு எதிராகப் போகின்றபோது பிழை என்றும் போகின்றது. அப்படியிருக்க எனது எக் கருத்தில் தவறு என்று உங்களால் சுட்டிக்காட்டமுடியுமா? மேலும் இங்கே பலர் போராட்டத்தை கேலி செய்து பேசும்போது நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? குருக்கள் ....... குற்றமில்லையோ?
இதை விட நீங்கள் சொன்னது போல எதிர்கருத்துக்களை வழங்குபவர் முடங்கிப்போகின்றார் என்றால் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இருந்து அவர் அன்னியப்பட்டுத் தானே போகின்றார் என்று தானே அர்த்தம். ஆக அவர் சார்பான கருத்துக்களை எம் விடுதலைப் போராட்டம் தாங்கி நிற்கவில்லை என்பது தானே உண்மை. அவரது கருத்துக்கள் அதன் முன் எடுபடாமை தான் உங்கள் விலகும் வார்த்தைகளுக்கான மறைமுகக் காரணிகளோ?
அரசியல் தெளிவின்மை பற்றி சொன்னீர்கள்? எது குறித்து என்பதை தெளிவுபடுத்தியிருந்தால் திருத்திக் கொள்ளலாம் என நினைக்கின்றேன்(உங்களைத் தான்). மூடநம்பிக்கையிலிருந்தான விடுதலையைத் தான் தலைவன் தந்தான் தவிர கலாச்சார விலகல் அல்ல என்று ஏலவே சொல்லியிருக்கின்றேன். திரும்பியும் விளங்கப்படுத்தியாக வேண்டிய நிலைக்கு நீங்கள் இல்லை என நினைக்கின்றேன்.
பல சட்டங்கள் வெளிநாட்டு முறைமையைப் பின்பற்றி இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றை அப்படியே உபயோகிக்கப்படவில்லையே. எம் இனம் சார்ந்த திருத்தங்களுடன் தான் அவை உள்வாங்கப்பட்டன. கண்மூடித்தனமாக உள்வாங்குதற்கும், திருத்தங்களுடன் உள்வாங்குவதற்கும் நிறைய வேறுபாடுக்ள உள்ளன நண்பரே. முடிந்தால் மேலைத்தேச ஆனால் எமக்கு ஒவ்வாத சட்டதிருத்தத்தை அடையாளப்படுத்துங்கள்.
எதிர்கால சமுதாயம் எப்படி அமையவேண்டும் என்பதை புலிகள் தெளிவாக உள்ளார்கள் என்று சொன்னீர்கள் அல்லவா. ஏற்றுக்கொள்கின்றேன். அதற்கு நடைமுறை உதாரணங்களைக் கூறுகின்றேன்
நீங்கள் சமாதான காலத்தில் யாழ்ப்பாண பிரசித்தி பெற்ற ஆலயத் திருவிழா எதற்காவது சென்ற அனுபவம் உண்டோ. அப்படிப் போய் இருந்தீர்கள் என்றால் சில மணித்துளிகளுக்கு இடையிடையே ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்கும் வசனம் ஒன்றை கேட்டிருப்பீர்கள். அதன் சாரம்சம் இது தான். "தமிழர் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் எவராவது இங்கே நடப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதை கலாச்சாரத்தை பேணும் குழு எச்சரிக்கின்றது". என்பது. இதற்கு மேலே விளக்கம் தேவையில்லை என நினைக்கின்றேன்.
அவ்வாறே ஒரு பெண்ணை நக்கல் அடிக்கும் போது பிடிபட்டால் கத்தரிவிதையோ, பாகல்விதையோ தரப்பட்டு குறித்த இடம் ஒன்றில் நடப்பட்டு அது வளர்ந்து பலன் தரும் வரை நீர் ஊற்றப்பட வேண்டும். இடையில் பட்டுவிட்டால் திரும்ப செய்யவேண்டும். அவ்வாறே இன்னுமொரு தண்டனை. 50 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும். ஆனால் தினமும் 50 சதம் தான் கட்டப்படவேண்டும். நேற்று முந்தினம் கூட யாழ்பாணம் மானிப்பாய் பகுதியிலும், வடமராட்சிப் பகுதியிலும் கூடி நின்று சேட்டைகள் செய்தவர்களை சிலர் தாக்கிய விடயம் அறிந்திருப்பீர்கள். அது யார் தாக்கியிருப்பினம் என்றும் உங்களுக்கு தெரியும்.
இதை ஏன் சொல்கின்றேன் என்றால் இப்படியான நடவடிக்கைகள் தான் எம் சகோதரிகள் இரவில் எத்தனை மணிக்கும் வீதியில் துணிவுடன் சென்று வருவதற்கான உரிமையைக் கொடுக்கின்றது. ஒழுங்கான ஆடைகளை அணிவிக்க ஊக்குவிக்கின்றது. இக் கலாச்சாரத்தை தான் தலைவனும் விரும்புகின்றான். தமிழ் மக்களும் விரும்புகின்றனர்.
துணிவிருந்தால் இங்கே சென்று உங்கள் கருத்துக்களைச் சொல்லிப்பாருங்கள். அதை விட்டிட்டு மூத்த உறுப்பினர் பாலாஅண்ணையை உங்கள் சாட்சிக்கு இழுக்காதீர்கள். அவர் பொதுவாக சொன்ன ஒரு கருத்துக்கும் உங்களின் வாதக்கருத்துக்கும் முடிச்சுப்போடாதீர்கள்.
எல்லாவற்றையும் விட தமிழர் பண்பாடு குறித்து நீங்கள் என்ன எண்ணத்தை கொண்டிருக்கின்றீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. படிக்கின்ற காலத்தில் வாத்தியாரைப் பற்றி கரியால் எழுதுதல், மிதிவண்டிக்கு காற்று கழட்டிவிடல், ஊரிலுள்ள சுவர் ஒன்றிலிருந்து ஊர்வம்பளத்தல் என்பன தமிழர் மரபு என்ற எண்ணப்பாட்டில் நீங்கள் இருந்தால் இப்போதே சொல்லிவிடுங்கள்.
ஒரு விடயம் புரிகின்றது. எங்களுக்கெதிரான கருத்துக்களை நீங்கள் சந்திக்கமுடியாமல் தத்தளிக்கின்ற போது மட்டறுத்தினர் நிறையவே கைகொடுக்கின்றார். அப்பக்கத்தை மூடி விடும் செயற்பாட்டை மேற்கொள்கின்றார். ஆனாலும் உண்மைகளை சாகடிக்க எவராலும் முடியாது. இதை புரிந்து கொண்டால் சரி.
அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானதே எம் விடுதலைப்போராட்டம் என்று கூறிக் கொண்டு தன்னினச்செயற்கையையும் நியாயப்படுத்தாதீர்கள்.<b> வார்த்தைகளால் ஏமாந்து போன தலைமுறைகளைத் தாண்டித் தான் நாம் வந்திருக்கின்றோம். மீண்டும் வார்த்தைகள் மூலம் எம் இனத்தை ஏமாற்றி விடமுடியும் எனக் கனவிலும் கொள்ளவேண்டாம்.</b>
..................................................................................................................................
கருத்துக்கள் யாவும் பதில்களாக மட்டுமே கொள்க