10-26-2005, 03:39 PM
Eelavan Wrote:பதில் தாருங்கள்
அண்மையில் டி.சே எழுதிய கவிதை நண்பர் ஒருவரால் களத்தில் இடப்பட்டதைத் தொடர்ந்து ஆங்காங்கே இடம்பெற்ற சர்சைகளையும் வாதங்களையும் விதண்டாவாதங்களையும் கவனித்தேன்.
அவற்றுக்குப் பதிலளிக்க முயன்றால் ஒவ்வொரு களமும் பூட்டப்படுகிறது.
கெட்ட வார்த்தைகள்,தலித் இலக்கியம் பின்னவீனத்துவம் பற்றி அரைகுறையான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன கள உறுப்பினர்கள் இவற்றைப் பற்றி விவாதிப்பதும் அவற்றைப் பற்றி அறிவதும் முக்கியம் என நினைக்கிறேன்.வெறுமனே களத்தைப் பூட்டிவிடுவதால் சண்டையைத் தவிர்க்க முடியும் ஒழிய அறிவைப் பெற்றுக்கொள்ள முடியாது
இந்தத் தலைப்புகளினை விவாதிப்பதற்கு களத்தின் எந்தப் பகுதி பொருத்தமானது என்று யாராவது சொல்லுங்கள்
இவற்றை விரும்பாதவர்களுக்கு இந்தத் தலைப்புகளின் கீழ் இன்னின்ன கருத்துகள் விவாதிக்கப்படும் என்று ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருப்பதால்.அவற்றைப் படித்து ஆட்சேபணை தெரிவிப்பதில் காலத்தை வீணாக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.
எங்கே ஆரம்பிக்கலாம்
வணக்கம் ஈழவன்,
களத்தில் சிந்தனைக்களம் என்கிற பிரிவு உள்ளது. அதில் புதிய பிரிவுகள் சில உருவாக்கப்பட்டுள்ளன. அவையாவன தீவிர இலக்கியம், சிறப்பு விவாதங்கள். இங்கே பொருத்தமான பிரிவில் நீங்கள் விவாதிக்கலாம். அவை தவிர அரசியல், சமூகம், தத்துவம் போன்ற பிரிவுகளும் உள்ளன.
மேலதிக தகவல்களிற்கு:
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=135363#135363

