10-26-2005, 03:01 PM
தூயவன் நீங்கள் இன்னும் என்னுடைய கேள்விகளுக்கு பதில் தரவில்லை! மீண்டும் இடுகின்றேன்..
தொடர்ந்து விவாதிக்க உங்கள் பதில்கள் தேவையாக இருக்கின்றது..
--------
பாலியல் குறித்த எழுத்துக்கள் தீவிர எழுத்தாக இருக்க கூடும். ஆனால் தீவிர எழுத்துக்கள் என்றால் அது பாலியல் மட்டும் இல்லை. அதற்குள்ளே அதிகார வெறியர்களின் கொரூர முகம் குறித்த எழுத்து இருக்கும். அடக்கப்படுகின்ற மக்களின் குமுறல் குறித்த எழுத்து இருக்கும். ஆண் பெண் காமத்தில் தன் ஆசைகள் புறக்கணிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கோபம் இருக்கும். அல்லது தன் மீது திணிக்கப்பட்ட காமம் மீதான கோபம் இருக்கும்.
இவையெல்லாம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களா? ஒரு பெண் தன் மீது தன் விருப்பின்றி காமம் திணிக்கப்படுகிறது.. என்னும் போது எழுகின்ற கோபத்தை எழுதினால்.. இவளெல்லாம் ஒரு தமிழ் பொம்பிளையோ.. நாலு சுவருக்குள்ளை நடக்கிறதை இப்பிடி பப்பிளிக்காக சொல்லுறாளே.. உவளின்ரை எழுத்தை தடை செய்ய வேண்டும் என்கிறீர்கள்
அல்லது ஒரு ஒருத்தி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான காமத்தில் தன்னுடைய ஆசைகள் நிராகரிக்கப்படுகின்றன. தன்னுடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படுவதில்லை. நான் வெறும் பிணமாகவே நடாத்தப்படுகின்றேன் என்னும் அவளது ஏக்கத்தை எழுத்தில் பதிவு செய்தால் .. ச்சீ இவள் எல்லாம் ஒரு தமிழ் பொம்பிளையோ..? உவள் அலையிறாள்.. என்கிற வரிசையில் அதியுச்சமாக அவளுக்கு விபசாரி பட்டம் கட்டுகிறீர்கள்.
நான் மேலே சொன்ன விடயங்கள் சமூக தளத்தில் விவாதிக்கப்பட கூடாதவையா..? அவையெல்லாம் பாரதூரமான விடயங்களாக உங்களுக்கு தெரியவில்லையா..