10-26-2005, 08:56 AM
Thiyaham Wrote:உறுப்பினர்களாக இருந்துவிட்டு மட்டுறுத்துனர்களா மாறும் போது ஏன் இந்த புதிய முகமூடி...? ஏன் இந்த இரட்டை வேடம், பயங்கொள்ளித்தனம்? ஒரு பெயரில் எழுதிவிட்டு அதற்கு உங்களுடைய அடுத்த பெயரில் வந்து வக்காலத்து வாங்குவது காணாது என்று மட்டுறுத்துனர்களாகவும் வந்து வக்காலத்து வாங்க போகிறீர்களா...? இங்கே களத்திற்கு தேவை ஆரோக்கியமான கருத்தெழுதும் உறுப்பினர்களே தவிர புதிய மட்டுறுத்தினர்கள் அல்ல
வணக்கம் தியாகம்,
இந்த நடைமுறை களத்தில கனகாலமா இருக்குது.இது புதிசா வந்த ஒண்டல்ல.எனக்கும் இந்த நடை முறயுடன் உடன்பாடு இல்லை.இந்த இரட்டை வேடங்கள் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.மட்டுறுத்தினர்கள்
நடு நிலயாக செயற்படாமைக்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.மதனைப் போல் ஒரே முகத்துடன் நியாயம் வழங்க ஏன் இவர்களால் முடியாதுள்ளது.அத்துடன் இவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் பக்கச் சார்பானதாக ,உறவு முறை சார்ந்ததாக இல்லை என்பதை எந்த நேரமும் கேட்டுக் கொண்டிருக்கவும் முடியாது.மேலும் இவர்கள் சாதாரண கள உறுபினர்கள் போல உலா வந்தாலும் மற்றய உறுபினர்கள், போல் அல்லாது மட்டுறுதினர்களுக்கிடயே நடக்கும் கருத்துப் பரிமாறல்களை அறிந்தவர்களாக இருப்பதனால் ,அவர்கள் களத்தில் ,தந்திரோபாயமாகக் கருத்தாடல்களை நடத்தக் கூடியதாகவும்,கருத்துக்களைத் தணிக்கை செய்யக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.இவர்கள் நடு நிலயாக நடக்கும் பட்சத்தில் ஏன் புதிய முக மூடிகளைப் போட வேண்டும்.மட்டுறுத்தினர்கள் கெட்டவர்கள் இல்லயே. இது ஒரு நேர்மயான நடைமுறையாக எனக்குத் தெரியவில்லை.

