10-26-2005, 05:21 AM
உங்கள் முட்டாள்தனத்திற்கு அளவேயில்லை என்பதை திரும்பத் திரும்ப நிரூபிக்கிறீர்கள்.ஓரிரண்டு பேர் என்பது உலகத்தின் மொத்த தமிழ்ச் சமூகத்தையும்(அதாவது ஆறரைக் கோடி பேர்)கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரு சில லட்சங்கள் தேறும்.
அவர்களும் தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ளடங்குவார்கள்.அவர்களும் சமூகத்தின் முன் சமதையாக வாழவேண்டும் என்பதுதான் எனது வாதமேயொழிய அவர்கள் வாழ்வது மட்டும்தான் வாழ்க்கை தமிழ் மரபே ஓரினச் சேர்க்கைதான் என்று எங்கேயாவது சொன்னதற்கு ஆதாரம் காட்டுங்கள் பார்ப்போம்.
எல்லாவற்றையும் உள்ளடங்கியதுதான் தமிழர் வாழ்க்கை.அவர்களும் சமூகத்தில் மரியாதையாக வாழவேண்டும்.ஒருவன் ஆணைத் திருமணம் செய்வதோ பெண்ணைத் திருமணம் செய்வதோ அவனது உரிமை.அதனை நீங்கள் தீர்மானிக்க எந்தவித உரிமையும் இல்லை.இல்லை அது விதிவிலக்கு தமீழத்துக்கு அவர்கள் தேவையில்லை என்பதை ஐரோப்பாவில் இருக்கும் நீங்கள் தீர்மானிக்க முடியாது.தமிழீழத்திற்கு அவர்களும் தேவை என்பதை சக மனிதனாக சொல்லப் பாருங்கள்.
இரண்டு பெண்கள் கூடிவாழ்ந்தால் உங்களுக்கென்ன குறைவு.இரண்டு ஆண்கள் திருமணம் செய்தால் உங்களுக்கு என்ன குறைந்தது.வழக்கம்போது புசித்து,புணர்ந்து மரித்துப் போகவேண்டியதுதானே.அவர்கள் புறம்போக்குகள் என்றும் தமிழ்ச் சமூகத்துக்கு ஒவ்வாதவர்கள் என்றும் நச்சுச் செடிகள் என்றும் தீர்மானிக்கும் உரிமையை எங்கிருந்து பெற்றீர்கள்.
இவையெல்லாம் தமிழ் மரபில் இல்லவே இல்லை என்றீர்கள்.பழந்தமிழ் இலக்கியத்தில் உதாரணம் காட்டினால் முற்போக்குவாதிக்கு எதற்கு பழந்தமிழ் இலக்கியம் என்கிறீர்கள்.முற்போக்குவாதி என்பவன் நாயின் வாயிலுள்ள தடியைப் பிடித்து நடக்கும் குருடன் இல்லை.தனக்குத் தேவையானதை அவன் தீர்மானிக்கட்டும் நீங்களோ நானோ அல்ல.
நான் சொல்ல விரும்புவதெல்லாம் இவையும் மனித இயல்புகளே இவ்விளிம்பு நிலை மனிதர்களைப் புறக்கணிக்காதீர்கள் சக மனிதராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதுதானொழிய ஆணும் ஆணும் புணர்வதுதான் முற்போக்கு பெண்ணும் பெண்ணும் புணர்வதுதான் நவீனத்துவம் என்பதில்லை.அது அவரவர் தெரிவு.
அவை விவாதிக்கப்படவேண்டுமா இல்லையா என்பதையே உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.சரியா தவறா என்று விவாதம் வந்தால் சூடு பொறுக்க முடியாது போலிருக்கிறது.
யாழ் களத்தில் இதுபற்றிய விவாதங்கள் வேண்டுமா இல்லையா என்பதற்கு எதிர்த்த உங்களைப் போலவே ஆதரித்த நண்பர்களும் சமனான எண்ணிகையில் இருக்கிறார்கள்.ஆகவே இவ்விவாதம் தொடராமற் போனாலும் நான் சொல்ல வந்தவற்றை சரியாகச் சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.மிகுதி நேரத்தையும் உங்கள் பதிலையும் பொறுத்து

\" \"