10-26-2005, 03:57 AM
என்னவோ அற்புதமான கருத்துக்களை சொல்லிவிட்டது போல காட்டிக் கொள்கின்றீர்கள். அப்படி ஒன்றும் உருப்படியாக ஏதும் எழுதியது போல தெரியவில்லையே. அப்படியிருக்க எதையாம் கண்டு நான் சொக்கிப்போய் நிற்;பதற்கு.
ஒரு விடயத்தை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். உங்களின் எதிர்காலம் நோக்கிய விழிப்புணர்ச்சிக்கு(?) சங்ககாலத்தை ஏன் உதாரணமாகக் கொள்கின்றீர்கள் என்று தான் கேட்கின்றேன். அதற்கு ஏன் சொதப்பலான பதில்கள். மீண்டும் நீங்கள் மீண்டும் சங்ககாலத்துக்கு தான் போக இருக்கின்றீர்கள் என்றால் தெளிவாகவே சொல்லுங்களேன். என்ன தயக்கம்? கூடவே இருக்கின்ற பழைய வேட்டியில் 4 துண்டைக் கிழித்து தருகின்றேன் கட்டிக் கொண்டு சென்று வாருங்கள். (அதுக்கும் முற்பட்ட காலமெண்டால் அதுவும் தேவையில்லைங்க) அதை விட்டிட்டு புதுமையாம்.....புரட்சியம்......
நான் உங்களை ......மவனே என்று காரணச்சொல் கொண்டு அழைத்ததை பவ்வியமாக ஏற்றுக் கொண்டீர்கள். (உங்கள் வாதம் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும.; வேறு என்ன வழி) ஆனால் மட்டறுத்தினர் தனிநபர் தாக்குதலாக கருதுகின்றாரே ஏன்? அவருக்கு உங்கள் சீர்திருத்தக்கொள்கைகளில்(?) என்னும் தெளிவு ஏற்படவில்லையா?. ஜயகோ! உங்களின் வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கித் தான் இவ் இணைப்பை ஆரம்பிக்கபோகின்றனரா?
உள்ளும் வராமல், வெளியிலும் போகாமல் நின்று கத்திக்கொண்டு நிற்கின்றோமாம். ஜயா!! பொது இடத்தில் நின்று கூத்துக்காட்ட இந்தக் கூத்தே இங்கே வேண்டாம் என்று தானே நாம் கத்துகின்றோம். உங்களுக்கு அது ஏன் புரிவதில்லை. ஏன் இப்போதும் அந்தப் போதையில் தான் வாழ்கின்றீர்களா? அது தான் தெளிவற்று இருக்கின்றீர்களோ?
வேறு ஒரு பகுதியில் நடந்த வாதம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். கண்ணன் பற்றிய பாடல் ஒன்றை விமர்சித்த விதம் ஒன்றில் "பசுக்களை கூடச் செய்த கண்ணனாம்" என்பதற்கு ஒருவர் கொடுத்த காம விளக்கத்தை படித்திருப்பீர்கள். கூடச் செய்தல் என்பது அவரது பார்வையில் அப்படித் தெரிந்தது. ஆனால் உண்மையில் கண்ணன் தனது பாடல் மூலம் மேய்ந்துகொண்டிருந்த (புல் மேய்தலை தான் சொல்கின்றேன். இதற்கும் தங்களின் பார்வை ?)பசுக்கள் மேய்ச்சலை விட்டு இங்கு கூடி அவன் இசையை ரசிப்பதாக தான் சொல்லப்படுகின்றது. இப்படியான உண்மைகளைத் திரிவுபடுத்தி வாதம் என்ற பெயரில் எம் முன்னோர்களின் கல்லறைகளில் மலம் அடிக்கவேண்டும் என்பது தான் இந்த அவா. இப்படிப்பட்டவர்களின் விவாதங்கள் ஏற்புடையதாகவா இருக்கப்போகின்றது.
மது, போதைப்பொருள் பாவிப்பதே தப்பென்ற நிலையில், தம் பிள்ளை வெளியில் பாவிப்பதை தடுக்காமல் "வா...மகனே.. வா" என்று வரவேற்று தாங்களே வாங்கிக் கொடுத்தால் தப்பில்லை என்று சொல்வதைப் போலத்தான் உங்கள் வாதம். சிங்கப்புூரிலும், ஜரோப்பாவிலும் விபச்சாரம் ஓகே. ஈழத்தில் கூடாதா? என்று விதண்டாவாதங்கள் வேறு. எங்கையுமே விபச்சாரத்தை ஆதரிப்பதாக நாம் கூறவில்லையே. எம் சக்திக்கு ஈழத்தில் மட்டும் தான் கட்டுப்படுத்த முடிகின்றது. மேலைத்தேசத்தில் எத்தனை தமிழ்பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றனர் தெரியுமா? ("புரட்சித்"தமிழரை குறிக்கவில்லை)
ஈழவன் தனது தளத்தில் இது பற்றி எல்லாம் விவாதித்து முடிந்தாகிவிட்டது. அதனால் தான் யாழ்களத்தில் விவாதிப்போம் என்கின்றார். விவாதித்து முடிந்த ஒரு விடயத்தை திரும்பவும் விவாதிக்கவேண்டும் என்ற தேவையை ஈழவன் ஏன் ஏற்படுத்த விரும்புகின்றார். 2 காரணங்களைக் கூறலாம்.
1. அது பற்றிய சிந்தனைகளை சுமந்து திரிதல்(அரிப்பெடுத்து)
2. பின்ணனியில் ஏதும் சதி இருக்கலாம். ஏனென்றால் தமிழீழ தேசியவிடுதலைப் போராட்டத்துக்கு முமுமையான சார்பினை யாழ் இது வரைக்கும் எடுத்து வந்திருக்கின்றது. அதை விட அதிகளவு உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தளமும் இதுவே. இந்த தளத்தின் கொள்கையை திசைதிருப்பும் விதத்தில் ஏதும் முயற்சிகள் நடக்கலாம். இது ஈழவனை தப்பாக பேசவரவில்லை. ஆனால் அவருக்கே தெரியாமல் நடக்கும் தி;ட்டமாக இருக்க கூடும்.
உண்மையான தமிழ்பற்று கொண்டவர் நீங்கள் என்றால் இப்படியான தேடலை மேற்கொள்ளுங்கள்.
சேரநாடு மலையாளமண்ணாய் மாறியது ஏன்?
பிராமி எழுத்துக்களுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு?
காப்பியங்களான வளையாபதியும், குண்டகேசியும் எங்கே போயின?
சோழசாம்ராட்சியத்தின் அடிச்சுவடுகள் எங்கே?
தமிழ்சங்கங்களின் அழிவுகளால் ஏற்பட்ட விளைவுகள்?
இப்படி ஏராளமான தேடல்கள் உள்ளன. அதை விட்டிட்டு இப்பவும் மடியிக்குள்ளேயே தலையைவிட்டோண்டு..... இப்படிச் சொன்னவுடன் சில "நல்ல உள்ளங்கள்" வருவினம். நீ அதைச் செய்யலாமே என்று. வரட்டும் பதில் சொல்கின்றேன்.
பிருந்தன் சொன்ன இக் கொள்கைகளோடு நான் ஒத்துப்போகின்றேன். இன்று நீலப்படங்களை சார்ந்த தளங்கள் ஏராளமாக உள்ளன. அங்கு எவர் போவதையும் தடுக்கமுடியாது. அது போலவே மோகன் அண்ணாவிடம் வேண்டுகோள் என்னவென்றால் இதை நீங்கள் அமைக்கவேண்டும் என விரும்பினால், இப்படிப்பட்ட செய்திகளைத் தாங்கிய பக்கத்தை யாழுடன் தொடர்பற்ற நிலையில் தனித்தளமாக அமைத்துக் கொடுங்கள். இத் தளத்தோடு இணைத்து யாழுக்கு இது வரைக்கும் உள்ள மரியாதையை இதன் மூலம் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
ஒரு விடயம் மட்டும் உண்மை. எல்லோரும் செய்கின்றனர் என்று நாமும் செய்யவெளிக்கிட்டோம் என்றால் எமது அடையாளத்தை நாமே தொலைப்பதற்கு அத்திவாரம் இடுகின்றோம். தமிழ் இனம் என்பது உலகிலே தனித்த அடையாளத்தைக் கொண்ட இனம் என்ற தேசியத்தலைவனின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கப்படவேண்டும் என்றால் எம் சமுதாயக் கட்டமைப்புகளுடன் பிணைந்தே வாழவேண்டும். இது தான் எமக்காக மறைந்த மாவீரர்களுக்கு நாம் கொடுக்கும் உயர்ந்தபட்ச மரியாதை. இல்லை உலகம் போகின்ற திசைக்கேற்ற வகையில் நாமும் அடிபட்டு, இச்சைகளுக்கு இசைவாகத் தான் வாழப்போகின்றோம் என்றால் அது எம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் வெட்டும் புதைகுழி அதுவாகத்தான் இருக்கும்.
மோகன் அண்ணா யோசித்து முடிவெடுங்கள். எது எப்படியோ என்றும் யாழ்களத்தோடு இணைந்தே இருப்போம்.
...................................................................................................................................................................
மேலே உள்ளகருத்துக்கள் யாவும் குறித்த நபர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றே தரப்பட்டதே தவிர மனதை நோகடிக்கும் எண்ணத்தில் அல்ல.