10-25-2005, 05:02 PM
கடந்த ஒரு மாத்தில் அய்ரோப்பாவில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் புலத்தில் எம்மவர் நிலை இன்p என்னாகும் என்கிற ஒரு கேள்வி குறியை போட வைத்துள்ளது
காரணம் புலத்தில் தமிழர் இன்னெரு தமிழரை கொலை செய்தது இது ஒன்றும் முதல் தடைவையோ புதிதோ அல்ல காரணம் இதற்கு முதலும் குழு சண்டைகள் இளைஞர் மத்தியிலான மோதல்கள் மற்றும் இன்னொருவர் மீதான பழி தீர்த்தல் என்று கொலைகள் நடந்துள்ளன ஆனால் இம்முறை நடந்த கொலைகள் இரண்டும் கணவர்மார் தங்கள் மனைவி பிள்ளைகளை கொலை செய்துள்ளனர் என்பதே.
அது மட்டுமல்ல இரண்டும் நன்கு திட்டமிடபட்டு நடந்தேறியிருக்கிறது . எனவே குழு சண்டை மோதல் கள் போல் இதனையும் கொலை தானே என்று சொல்லிவிட்டு காவல் துறை கவனிக்கும் என்று விட்டு பேசாமல் இருந்து விடலாம் தான் .
ஆனால் இதன் போக்கு புலத்தில் எதிர் காலத்தில் எமது இனத்தின் மீதே அய்ரோப்பியர்களினால் ஈழதமிழர் ஈவிரக்கமற்ற வன்முறையாளர்கள் கட்டியமனைவி பெற்ற குழந்தையை கொல்லுமளவிற்கு மனிதாபிமானமற்றவர்கள்: என்று முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது.
ஏனெனில் அய்ரோப்பாவில் ஏற்கனவேஅய்ரோப்பியர் மட்டுமல்ல அய்ரோப்பிய காவல் துறையும் சில இனத்தவரை அவர்கள் திருடர்கள் வன்முறையாளர்கள் என்று அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள் .அவர்கள் பட்டியலில் எமதினத்தை சேர்க்கும் பட்டியலில் எம்மவர் சிலர் ஈடுபடுகிறார்களே என்கிற கவலை எழுகிறது.
குழு மோதல்களில் என்று பார்தால் இளைஞர்களின் பொறுமையின்மை பக்குவமின்மை அவர்களின் வேகம் தாங்களே தங்களை கதா நாயகர்களாக நினைத்து செயல்படுதல்அதற்கு தீனி போடும் தென்னிந்தசினிமா இதனால் பெரிய காரணமேதுமற்ற சடுதியான கொலைகளே இதுவரை நடந்துள்ளது அதுவும் முன்றாவது நபர் மீது.ஆனால் அண்மையில் சுவிசில் தனது மனைவியையும் பிள்ளை களையும் கொலை செய்தவர் நன்கு திட்டமிட்டு செயல் பட்டிருக்கிறார்.
அவரது போதாத காலம் அவர் கொலை செய்து விட்டு வீட்டை கொழுத்தி விட்டு போக முற்பட்ட போது குற்றுயிராய் கிடந்த மனைவி அவரை பாய்ந்து கட்டி பிடிக்க அவரும் தீயில் கருகி இப்போ வைத்திய சாலையில் உயிருக்கு போராடியபடி இருக்கிறார். மற்றையது யெர்மனியில் அவரும் மனைவி பிள்ளையை கொன்று விட்டு தப்பிக்க முதல் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டு யெர்மன்காரர் உசாரடைந்ததால் இப்போ காவல் துறையின் வசம்.
காரணம் என்னவென்று பார்த்தால் எல்லா குடும்பத்தினுள்ளும் வருகின்ற கணவன் மனைவி பிணக்குதான் சரி பிரச்சனை பெரிதானால் பேசாமல் இரண்டு பேருமே பிரிந்து வாள வசதிகளும் சட்டங்களும் அய்ரோப்பாவில் தாராளமாகவே உள்ளது அதன்படி செய்யலாமே? சரி கணவன் மனைவி பிரச்சனையென்றால் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள் ?? கடும்ப பிரச்சனைக்கு கொலைதான் முடிவா?? ஈழத் தமிழர் என்றால் வன்முறையாளர்களா?? கேள்வி இது விடை காலம் பதில் சொல்லட்டும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/