11-22-2003, 11:31 PM
மாற்றம் என்பது ஒன்று மட்டுமே மாறத ஒன்று என்று மாக்சு சொல்கின்றார். அதாவது உலகத்திலுள்ள அனைத்தும் காலவோட்டத்தின் தன்மைக்கேற்ப மாற்றத்திற்கு உள்ளாகும் அல்லது உள்ளாக்கப்படவேண்டும் இல்லாவிடின் அது அழிந்து விடும் என்று அவர் கருதுகின்றார். அது போல நாமும் எமது வாழ்க்கைமுறைமைகள் பழக்கவழக்கம்கள் கருத்தியல்கள் போன்றவற்றை எமது நிகழ்கால சூழ்நிலைக்கேற்ப மாற்றவில்லையெனில் எமது இருப்பு கேள்விக்குள்ளாகும். இந்த மாற்றங்கள் என்று மாக்சு குறிப்பிட்டது ஆரோக்கியமான மாற்றங்களை மட்டுமே.
தமிழர் வாழ்வு என்பது அல்லது அவர்தம் பண்பாடு என்பது சமயத்தைச் சார்ந்திருக்கவில்லை. தமிழரது உண்மையான சமயம் அல்லது நம்பிக்கை இயற்கையாகும். சைவம் இந்து என்பன கிறித்துவம் போன்று இடையில் வந்து செருகினவையே. இது பற்றி தமிழ்நாத இணையத்தளத்தில் கனடாவிலிருந்து நக்கீரன் அவர்கள் பலமான தொல்பொருள் ஆதாரத்துடன் சிறப்பாக எழுதி வருகின்றார். சமயம் அல்லது மதம் என்ற பெயரால் நாம் எப்படி மதம் பிடித்துப்போயுள்ளோம் என்பது அதனைப் படித்து சிந்தித்துப் பார்த்தால் தெளிவாகப்புரியும். எம்மிடம் இன்றுள்ள மதமானது எம்மிடையே சாதிப் பிரிவினையும் பெண்ணடித்தனத்தையும் மூடநம்பிக்கைகளையும் நன்கு ஆழவேரூன்றி அகல கிளைபரப்ப உதவினவே தவிர அதனால் நாம் ஒரு சமுதாயம் என்ற முறையில் குறிப்பிடத்தக்க முறையில் பெரிய நன்மை எதனையும் பெற்றதாக குறிப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை.
"எமது" புராணக்கதைகளை எடுத்து நோக்கினால் கடவுள்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி. திருவிளையாடல் என்ற பெயரில் அவர்கள் ஆடிய ஆட்டங்களுக்கு அளவுகணக்குகிடையாது. புராணக்கதைகள் பெண்ணின் கற்பு பற்றி கட்டுக்கட்டாக பல கதைகள் பண்ணின. ஆனால் அவை கண்ணன், இராதை, பாமா என்று பலபெண்களுடன் களிநடனம் புரிந்ததை பெருமையுடன் சொல்லின. அவற்றை நாம் இன்றும் எமது பாலருக்கு பள்ளியில் பயபக்தியுடன் படிப்பிக்கின்றோம். கந்தன் வள்ளி தெய்வானையை வைத்திருக்கின்றபோதோ அல்லது பிள்ளையார் சித்தி புத்தியுடன் பாணைவயிறு பெருக்க திருஅமுது உண்டுகொண்டிருப்பதனையோ நாம் எமது பண்பாட்டு அவமானச் சின்னங்களாக கருதவில்லை. அவர்களுக்கெல்லாம் இலட்சோபலட்சம் செலவு செய்து கோயில் கட்டி தோப்புக்கரணம் போடுகின்றோம். இப்படியான கதைகளை எமது பண்பாட்டு ஆதரங்கள் என்று நாம் பெருமையுடன் சுமந்து கொண்டிருப்பது எமது இனத்தை இழிவாக எடைபோட மட்டுமே உதவும்.