Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுகாதார வாழ்விற்கு சில வழிகள்
#1
நீண்ட நாள் சுகாதாரமாக வாழ்வதற்கு சில எளிய வழிகளை பின்பற்றலாம். அவற்றுள் சில இதோ உங்களுக்காக.

காய்கறிகள் உண்பது மட்டுமே சுகாதாரவாழ்விற்கு வழி வகுப்பதில்லை. மரங்கள் மற்றும் தோட்டத்திற்கு அருகில் வாழ்வதும் நலமளிக்கும். ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், டோக்கியோவின் நகர பகுதியில் வாழும் மூவாயிரம் மூத்த குடிமக்களை வைத்து ஆராய்ந்ததில், பூங்காக்களுக்கு அருகிலும், மரங்கள் நிறைந்த தெருக்களிலும் வாழ்பவர்கள், பிற இடங்களில் வாழ்பவர்களை விட சுகாதாரமாக, நீண்ட நாட்கள் வாழ்வதாக கண்டுபிடித்துள்ளனர். இதனால் மக்கள் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.

நீங்கள் தண்ணீர் குடிக்கும் அளவையும், கவனிக்க வேண்டியது அவசியம். தினமும் உடல் செயல்பாட்டிற்கு தேவையான நீரை அருந்தாவிட்டால், உடல்நீர் வற்றி பல அவதிகளுக்கு உள்ளாக நேரிடும். சிறுநீரை வைத்தே நாம் குடிக்கும் தண்ணீர் போதுமானதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளலாம். தினமும் முதன்முதலில் கழிக்கும் சிறுநீருக்கு பிறகு, சிறுநீர் கழிக்கும் ஒவ்வொரு தடவையும் அதன் நிறத்தை சோதிக்க வேண்டும்.


அது லேசான மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். அதிக மஞ்சளாக இருந்தால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் தலைவலி ஏற்படுதல், சோர்வு, சிந்தனை சிதறல் போன்றவை ஏற்படலாம். குளிரூட்டப்பட்ட அறைகள் உலர்ந்து இருப்பதால் அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும். அதேபோல், கோடை காலங்களிலும், உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களிலும், அதிக நீர் அருந்த வேண்டியது அவசியம். தர்பூசணி, வெள்ளரி, போன்றவையும் உதவும். வெளியில் செல்லும் பொழுது ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்து செல்லுங்கள். மது அருந்தும் போது நீர் சேர்த்தோ அல்லது ஒவ்வொரு கப்பிற்கும் இடையில் ஒரு கப் நீர் அருந்தவதால் ஓரளவு பாதிப்புகளை குறைக்கலாம்.

பொழுதுபோக்குகள் நம் மனதிற்கும் உடலுக்கும் நன்மையளிக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? தோட்டவேலை, தபால் தலைகள் சேகரித்தல், தையற்கலை, பொம்மைகள் சேகரித்தல் என பல வகையான பொழுதுபோக்குகள் உள்ளன. இப்படி ஏதாவது பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுபவர்களது மனம் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருப்பதால் ரத்த அழுத்தம் குறைவதாகவும், அமைதியை தந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குறுக்கெழுத்து போட்டிகள் கூட நம் மனதை வலிமையாக்கி, மனச்சிதைவு ஏற்படாமல் தவிர்க்கின்றன என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

பனிரெண்டாயிரம் பேர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், பொழுதுபோக்குகளில் ஈடுபடுபவர்கள் மாரடைப்பு அல்லது ரத்த ஓட்ட கோளாறுகளால் இறப்பது மிக குறைவு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற எளிய வழிகள் மூலம் நலமாகவும், வளமாகவும் வாழலாம்.

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Messages In This Thread
சுகாதார வாழ்விற்கு சி - by சாமி - 11-22-2003, 11:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)