10-25-2005, 02:31 PM
நான் அங்கத்தவர் பகுதியில் எழுதிய ஒரு பதிவின் சில பகுதிகள் இவை.
பாலியல் குறித்த எழுத்துக்கள் தீவிர எழுத்தாக இருக்க கூடும். ஆனால் தீவிர எழுத்துக்கள் என்றால் அது பாலியல் மட்டும் இல்லை. அதற்குள்ளே அதிகார வெறியர்களின் கொரூர முகம் குறித்த எழுத்து இருக்கும். அடக்கப்படுகின்ற மக்களின் குமுறல் குறித்த எழுத்து இருக்கும். ஆண் பெண் காமத்தில் தன் ஆசைகள் புறக்கணிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கோபம் இருக்கும். அல்லது தன் மீது திணிக்கப்பட்ட காமம் மீதான கோபம் இருக்கும்.
இவையெல்லாம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களா? ஒரு பெண் தன் மீது தன் விருப்பின்றி காமம் திணிக்கப்படுகிறது.. என்னும் போது எழுகின்ற கோபத்தை எழுதினால்.. இவளெல்லாம் ஒரு தமிழ் பொம்பிளையோ.. நாலு சுவருக்குள்ளை நடக்கிறதை இப்பிடி பப்பிளிக்காக சொல்லுறாளே.. உவளின்ரை எழுத்தை தடை செய்ய வேண்டும் என்கிறீர்கள்
அல்லது ஒரு ஒருத்தி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான காமத்தில் தன்னுடைய ஆசைகள் நிராகரிக்கப்படுகின்றன. தன்னுடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படுவதில்லை. நான் வெறும் பிணமாகவே நடாத்தப்படுகின்றேன் என்னும் அவளது ஏக்கத்தை எழுத்தில் பதிவு செய்தால் .. ச்சீ இவள் எல்லாம் ஒரு தமிழ் பொம்பிளையோ..? உவள் அலையிறாள்.. என்கிற வரிசையில் அதியுச்சமாக அவளுக்கு விபசாரி பட்டம் கட்டுகிறீர்கள்.
நான் மேலே சொன்ன விடயங்கள் சமூக தளத்தில் விவாதிக்கப்பட கூடாதவையா..? அவையெல்லாம் பாரதூரமான விடயங்களாக உங்களுக்கு தெரியவில்லையா..
அவைதான் தீவிரமான எழுத்துக்கள். மற்றும்படி.. நீங்கள் சிந்தித்தது போல ஆண் பெண் புணர்ச்சிகளையும் புணர்ச்சியூடான உணர்ச்சிகளையும் அக்கு வேறு ஆணி வேறாக எடுத்துச் சொல்பவை அல்ல. தயவு செய்து அப்படி நினைப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கும் பரப்பாதீர்கள்.
எல்லாம் சரி.. யாழில் பக்கம் திறந்தாயிற்று. அவற்றிற்கு தனியாக அனுமதி என்கிறார்கள் சரியாக தெரியவில்லை. நான் எதிர்பார்ப்பது இதனைதான்.அங்கு நீங்களும் வர வேண்டும்.. சொல்லப்பட்ட விடயம் பற்றி விடயம் பற்றி மட்டுமேயான விமர்சன எழுத்தை தர வேண்டும். அதுவேயன்றி.. உதை எழுதினவனுக்கு அக்கா தங்கச்சி இல்லயைா என்ற கேள்விகளோ..
உதை தங்கச்சியோடு சேந்து வாசிப்பியோ என்ற கேள்வியோ
வேண்டாம்..
வாருங்கள் தீவிர இலக்கியம் பகுதியில் இலக்கியம் மீது மட்டும் சண்டை பிடிப்போம். மாறாக அதை எழுதியவன் மீதோ அல்லது எழுதியதை இங்கே போட்டவன் மீதோ அல்ல..