11-22-2003, 04:04 PM
தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்து எழுதலாம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டால் ஆங்கிலத்தையும் கலந்து எழுதுவதை நியாயப்படுத்தலாம் என்று ஒரு சாரார் வாதிடமுனையலாம். தமிழில் இப்போது வழக்கத்திலிருக்கும் சொற்களில் 30-35 வீதமான சொற்கள் வடமொழியிலிருந்து மருவி வந்தன என்று எப்போதோ படித்த ஞாபகம் இருக்கின்றது. இந்த வடமொழிச் சொற்களில் தமிழ் ஒலிநடையுடன் ஒலிப்பனவற்றை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என நான் எண்ணுகின்றேன். ஏனெனில் வடமொழியின் ஆதிக்கம் இப்போது இல்லை இனி அது தமிழினை அழிக்கமுடியாது. எனவே அதனால் ஆபத்து தமிழிற்கு இனி இல்லை. ஆனால் ஆங்கிலம் அப்படியல்ல. அது ஆதிக்கம் நிறைந்தது. அதன் செல்வாக்கு தமிழின் இருத்தலை கேள்விக்குறியாக்கும். அதன் கலத்தலை நாம் முற்று முழுதாக தவிர்க் முனையவேண்டும். புதிதாக உருவாகும் பொருட்களுக்கு உடனடியாகவே தமிழ்ச்சொல்லையும் நாம் அறிமுகப்படுத்தவேண்டும். அதாவது அந்தப் பொருள் கண்டுபிடித்து சந்தைக்கு வரும்போதே அதற்கான தமிழ்ச்சொல்லை அறிமுகப்படுத்தக்கூடிய வேகம் எங்களிடம் இருக்க வேண்டும். தமிழில் வினையடிச்சொற்கள் ஏனைய மொழிகளிலிலும் பார்க்க மிக அதிகமாயுள்ளதாம். எனவே முயன்றால் புதிய சொற்களை தமிழில் அறிமுகப்படுத்துவது கடினமாயிருக்காது என்று தமிழறிஞர் கூறுவர்

