Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மருத்துவர்களின் கவனக்குறைவால் அதிகரிக்கும் மனித இறப்புக்கள்
#1
மேலைநாடுகளில் மருத்துவம் துரித வளர்ச்சி கண்டுவரும் அதேவேளையில் மருத்துவ கவனக்குறைவால் ஏற்பட்டு வரும் இறப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. உதாரணத்திற்கு 1999இல் தேசிய அறிவியல் கல்விக்கழகம் (National Academy of Science (USA)) வெளியிட்ட அறிக்கையின் படி மருத்துவ கவனக்குறைவால் அமெரிக்காவில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை சுமார் 44,000க்கும் 98,000க்கும் குறையாமல் இருப்பதைக் காட்டுகிறது. உலகப் பணக்கார நாடுகளின் முன்னோடியான அமெரிக்காவில் மருத்துவ சேவையை எதிர்பார்ப்பது இயல்பே. ஆனால் அங்கே மருத்துவக் கவனக்குறைவால் ஏற்பட்டுவரும் இறப்புகளின் எண்ணிக்கையானது அந்நம்பிக்கையை முறியடிக்கச் செய்துள்ளது.
மருத்துவர் பலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற உண்மை தெரியாமல் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. இதற்கு முக்கிய காரணம் மருத்துவர்கள் மீதுள்ள நம்பிக்கையாலும் அவர்களின் திறமையின்பால் உள்ள உறுதிப்பாட்டிலும்தான். நாம் அனைவரும் அறிய வேண்டிய உண்மை என்னவென்றால் மருத்துவரோ, தாதியரோ அல்லது மருத்துவ நிபுணரோ எல்லாரும் சாதாரண மனிதர்களே என்பதால் தவறு செய்வதற்கான சாத்தியம் உண்டு.

மருத்துவர்கள் புரியும் ஒவ்வொரு கவனக்குறைவான காரியத்திற்கும் தீங்கியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். மருத்துவர்கள் அனைவரும் தங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் நலனைப் பாதுகாக்கும் கடமையைக் கொண்டுள்ளனர். மருத்துவர்கள் அக்கடமையை முறையே செய்யத் தவறும்போதும் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு மருத்துவர்களே பொறுப்பேற்க வேண்டும். தீங்கியல் சட்டத்தின் கீழ் ஒரு மருத்துவர் அறிவிற்கு ஏற்புடைய கடமையை ஆற்றும் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

ஆங்கிலேயர் சட்டத்தின்கீழ் ஒவ்வொரு மருத்துவரும் தங்களின் நோயாளிகளின் நலனை பாதுகாக்கும் கடமையில் ஈடுபடும்போது அம்மருத்துவர் மேற்கொண்ட அதே சிகிச்சை முறையை அவரைப்போன்றே மற்றொரு தேர்ச்சி பெற்ற மருத்துவர் மேற்கொண்டிருந்தார் என்றால் அம்மருத்துவர் தனது கடமையிலிருந்து தவறவில்லை எனப்பொருள்படும் என்று எம்.சி நாயர் ஜே (MC Nair J Bolam V Frien Hospital Management Committee (1957) வழக்கொன்றில் தீர்ப்பளித்துள்ளார். அவரின் கூற்றின்படி நோயாளியைக் காப்பாற்றும் கடமையை மேற்கொண்டுள்ள அம்மருத்துவர் அவரைப் போன்ற தகுதி பெற்ற எல்லா மருத்துவர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சிகிச்சை முறையை மேற்கொண்டிருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டிற்கு மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளின் உடல்நிலை எவ்வாறு உள்ளது என்பதை மருத்துவர் பரிசோதனை செய்த பின்புதான் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் நோயாளியின் பேச்சைகேட்டு சிகிச்சை மேற்கொள்ள அந்த மருத்துவர் முயலும்போது அவர் கவனக்குறைவாகச் செயல்படுகிறார் என்று பொருள்படும். சில மருத்துவர்கள் இதை சரி என்பர். இன்னும் சிலர் இச்செய்கை பிழையெனக் கூறலாம். ஆனால் எம்.சி நாயர் (MC Nair) அவர்களின் கருத்துபடி தவறு செய்த அம்மருத்துவர் செய்த சிகிச்சைமுறை வழக்கமாக எல்லா மருத்துவரும் செய்யும் செயல்களாக இருத்தல் வேண்டும் என்பதுதான்.


எம்.சி நாயர் (MC Nair) அவர்களின் கூற்று ஆங்கில சட்டத்தின்கீழ் போலம் ஆய்வு (Bolam Test) என்ற அழைக்கப்பட்டது. இந்த ஆய்வின் முக்கியமான நோக்கம் என்னவென்றால் தவறு செய்த மருத்துவரின் செயல் பற்றிய கருத்தை மற்றொரு மருத்துவர் முடிவு செய்வாரேயன்றி வழக்கறிஞர்கள் முடிவு செய்ய முடியாது. இந்த ஆய்வு பல வழக்குகளில் பயன்படுத்தப்பட்டது. ஒரு மருத்துவரின் தவற்றை மற்றுமொரு மருத்துவர் சுட்டிக்காட்டுவது என்பது சுலபமான காரியமன்று. கண்டிப்பாக தன் சக தொழிலில் உள்ளவரை காப்பாற்றும் நோக்கில் சாட்சி கூறும் மருத்துவராக இருப்பார். இதனால் அநீதிக்கு தள்ளப்படுவது நோயாளிகளே என சர் டொனால்சன் ஒரு வழக்கில் கூறியுள்ளார்.

(Sir Donaldson Vidaway V Bethtem (1985) என்னும் வழக்கில் கூறிய கருத்துப்படி ஒரு மருத்துவர் நோயாளியைப் பாதுகாக்கும் கடமையை விவரித்து கூறும் உரிமை சட்டத்திற்கும் நீதிமன்றத்திற்கு மட்டும்தான் உள்ளது. இந்த உரிமையைச் சட்டம் ஒருபோதும் இன்னொரு மருத்துவருக்கு விட்டுக்கொடுக்காது. ஏனெனில் மருத்துவரும் சாதாரண மனிதரேயன்றி கடவுள் அல்லர் எனக் கூறியுள்ளார்.

ஆக மொத்தத்தில் போலம் (Bolam) ஆய்வு பலவிதமான குறைபாடுகள் கொண்ட ஆய்வாகத்தான் பல நீதிபதிகளாலும் வழக்கறிஞர்களாலும் கருதப்பட்டது.

ஆங்கிலேயர் நாட்டின் உச்சநீதிமன்றம் (House Of Lords) இந்த போலம் ஆய்வை மீண்டும் ஆய்வு செய்ய முனைந்தது. பொலித்தோ சிட்டி எக்னி நலவாரியம் (Bolitho V City and Hackney Health Authority) என்னும் வழக்கில்தான் இந்த வழக்கில் போலம் Bolam ஆய்வு பயன்படுத்தப்பட்டது ஆனால் இவ்வழக்கின் சிறப்பு என்னவென்றால் மருத்துவ சோதனையிலோ அல்லது சிகிச்சை முறையிலோ தவறு விளைவிக்கும் மருத்துவர் தீங்கியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம். அவர் (மருத்துவர்) மேற்கொண்ட சிகிச்சை முறை சரியானது என்று மருத்துவர் குழுக்கள் கருத்துத் தெரிவித்தாலும் அக்கருத்து ஏற்றுக்கொள்ளக்
கூடியதா என்பதை நீதிபதிதான் முடி
வெடுக்க வேண்டும் என்பது புரொவுன்
வில்கின்சன் (Browne Wilkinson) அவர்களின் கருத்து. போலம் ஆய்வின்படி ஒரு மருத்துவர் தவறு விளைவித்துள்ளாரா என்பதை அதே துறையைச் சார்ந்த மற்றொரு மருத்துவக்குழு முடிவெடுக்கப்பட்ட பின்னரே நீதி வழங்கப்படும். ஆனால் போலிதோ (Bolitho) ஆய்வை பொறுத்தமட்டில் மருத்துவரின் சிகிச்சை முறை சரியா பிழையா என்பதை மருத்துவக்குழு ஆராய்ந்து முடிவெடுத்த பின்பு நீதிபதி அவர்கள்தான் அம்மருத்துவர் தவறு செய்துள்ளாரா இல்லையா என்பதை நிருணயம் செய்வார்.

இவ்வழக்கு ஆங்கிலேய சட்டத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

நமது நாட்டிலும் நம் நீதிமன்றம் போலம் (Bolam) ஆய்வைக் கொண்டு மருத்துவர்களின் தவறை நிருணயித்து வருகிறது. நமதுநாட்டு மருத்துவர் செய்யவேண்டியதெல்லாம் மருத்துவத்துறை வழக்கத்தில் இருக்கும் ஏற்புடைய சிகிச்சைமுறைகளைக் கையாளுவதுதான். இந்த வழக்கிலுள்ள சிகிச்சைமுறையை கையாள தவறும்போது நமது நாட்டு மருத்துவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படலாம். சட்டத்துறையின் கீழ் மருத்துவர்களுக்கென ஏற்படுத்தப்பட்ட சட்ட விதிமுறைகள் சிலவற்றை இங்கே தருகின்றோம்.

(1) தன் திறமைக்கு அப்பாற்பட்டு சிகிச்சை முறையை ஒருபோதும் மேற்கொள்ளக் கூடாது. சந்தேகம் எழும்போது அனுபவம்பெற்ற மருத்துவரிடம் உதவியை நாட வேண்டும்.

(2) எந்தவித சிகிச்சையை மேற்கொண்டாலும் அதற்கு தேவையான உதவிகளும் மருத்துவக் கருவிகளும் தயாராக இருத்தல் வேண்டும். எதிர்பாராது எதிர்நோக்கும் எல்லாவித பிரச்சனைகளையும் சந்திக்கும் ஆற்றல் இருத்தல் வேண்டும்.

(3) மருத்துவ சிகிச்சைக்காகப் பயன்படும் கருவிகளின் பயன்பாட்டை நன்கு அறிந்திருத்தல் வேண்டும். அக்கருவிகள் நன்றாகச் செயல் படுகிறதா என்பதை சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பே சோதனை செய்து கொள்ளல் வேண்டும்.

(4) எந்தவித சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு நோயாளிக்குச் சிகிச்சை முறையை பற்றிய விளக்கமும் அதன் பின்விளைவுகள் பற்றியும் விளக்கிக்கூற வேண்டும்.

(5) மருத்துவ முடிவுகளைப் பதிவேட்டில் எழுதிய பின்பு அதனைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். அப்பதிவேட்டில் தேவையான விவரங்களைக் குறித்துவைக்க வேண்டும். இது மற்ற மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை முறையைப் பின்பற்றுவதற்கு எளிதாக இருக்கும்.

இந்த விதிமுறைகளைச் சரிவர செய்வதன்வழி மருத்துவர்கள் கவனக்குறைவுடன் செயல்படுவதை தவிர்க்கலாம் என்றாலும் பலர் இன்னும் மருத்துவ கவனக்குறைவால் அவதியுற்றுக் கொண்டுதான் இருக் கின்றனர். மருத்துவத்துறை என்பது பலவிதமான சவால்களைக் கொண்ட ஒரு துறை என்பதை பலராலும் மறுக்க முடியாது. ஒரு மருத்துவரை நாம் கடவுளுக்குச் சமமாகப் போற்றுவதில் தவறேதுமில்லை. தவறு செய்பவர் யாராக இருந்தாலும் சட்டம் அவர்களைத் தண்டிக்கலாம். மருத்துவரின் கவனக்குறைவால் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். யாரிடம் போய் இந்த இழப்புக்கு நீதி கேட்பது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். சட்டப்படி தீங்கியல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கூடும்?.


நன்றி செம்பருத்தி


----- -----
Reply


Messages In This Thread
மருத்துவர்களின் கவனக்குறைவால் அதிகரிக்கும் மனித இறப்புக்கள் - by கரிகாலன் - 10-24-2005, 02:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)