Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெ.கரிகாலனின் கவிதைகள்
#11
நீங்கள் புரிந்துகொள்வதற்குச் சிக்கலான, மர்மமான வலையினுள் பிடித்து வைக்கப் பட்டுள்ளீர்கள். சுரண்டல் தந்திரமாய்ச் செயல்படும் உலகிலிருந்து தப்புவது சிரமமானது. உங்களது மொழியை மேற்கத்திய அதிர்வுகளுக்குள் நீங்களே சிக்கிக் கொள்ளுமாறு செய்திருக்கிறீர்கள். உலகம் முழுவதும் போலி அதிர்வை, மேற்கத்திய அதிர்வை, கோலோச்சுமாறு விட்டுக் கொடுத்து விட்டீர்கள் அல்லது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளீர்கள். ஆணாதிக்க உலகின் பார்வைக்குப் பெண்களின் உடலுறுப்புகளை வெளிப்படுத்திக்காட்டும் ஜீன்ஸ் கலாசார உலகில் நீங்கள் இசையடிமையாகவும், ஹிப்பிகளாகவும் மாற்றப்பட்டுள்ளதால் இரகசிய சதி உள்ளது. மின்னணுவியல் புரட்சி அடிமைப்படுத்தலை எளிமையாக்கியிருக்கிறது. அழகியின் அரவணைப்பில் சுகம் காணும் மாயையில் நீங்களெல்லாம் பேயின் மடியில் உறங்குகிறீர்கள். உங்களுக்கான மண் தாய். தாயின் மடியில் உங்களது பாரம்பரியம் பிறந்தது. நீங்கள் உணரத் தவறிவிட்டீர்கள். உங்களுக்கான இசை உங்கள் மண்ணில் இருக்கிறது. உங்கள் மொழியிலிருக்கிறது.
தாயின் அன்பு மீது போதை கொள்ளுங்கள்.
மண்ணின் மீது போதை கொள்ளுங்கள்.

உங்களுக்குத் தரப்பட்டிருக்கிற போதைத்துகள்கள், திரவங்கள் பேய் உங்களுக்குச் ஊட்டியிருக்கிற உணவுகள். உங்களைச் சாகடிக்கும் போதை. பேயின் மடியில் கிடக்கும் உங்களுக்குப் பேய் தருவது தாலாட்டன்று. கூச்சல்களுக்குப் பழகிக்கொண்டு விட்டீர்கள். அதிர்வுகளில் உங்களின் நரம்புகள் எப்பொழுதும் புடைத்துக் கொண்டிருக்கின்றன. உங்களது இரத்தவோட்டத்தில் போதைப்பொருள் கலந்து ஒருவகை மயக்கம் இன்பத்தைத் தருகின்றது அல்லது அது பழகிப்போன கிறக்கம். நுகர்வு வெளியின் படாடோ பத்தில் சுற்றி வருகின்றீர்கள். உங்களுக்கான குடும்ப சங்கிலித்தொடரின் இணைப்பை அறுத்துக் கொண்டுள்ளீர்கள். ஏன்? சிந்தியுங்கள். குடும்பமும் சமூகமும் காபரே காரியின் ரிப்பன் உடைபோல நார்நாராய்த் தொங்குகிறது. இரண்டு வகையான போதைவெளிக்குள் நீங்கள் இயங்குகிறீர்கள். ஒன்று: நுகர்வின்பம் தரும் மதுபோதை. மற்றொன்று நுகர்வு உலகின் கைப்பெறாப் பகுதிகள் மீதான ஏக்கத்தை மறக்க நீங்கள் இரத்தத்தில் ஏற்றிக்கொள்கின்ற போதை.

என்ன கொடுமை! வாழ்க்கைச் சுரண்டப்படுவதில் என்ன ஒரு நுட்பம்? என்ன ஒரு நூதனத்துவம்?! சிந்தனையை முடக்குவதற்கு, முடப்படுத்துவதற்குப் போதைதான் சிறந்த கருவி என்பதை உலகாளும் சுரண்டல்கூட்டம் நன்கு புரிந்துகொண்டுள்ளது. மதுவில் ஊறுகிறது உங்களது மூளை. மாயபோதைக்குள் செருகிக் கொண்டுவிட்டன உங்களது அகக்கண்கள்.


----- -----
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 10-12-2005, 06:07 PM
[No subject] - by inthirajith - 10-12-2005, 07:33 PM
[No subject] - by கரிகாலன் - 10-13-2005, 01:03 AM
[No subject] - by இளைஞன் - 10-14-2005, 07:06 AM
[No subject] - by கரிகாலன் - 10-17-2005, 02:52 AM
[No subject] - by RaMa - 10-17-2005, 04:27 AM
[No subject] - by kuruvikal - 10-17-2005, 06:33 AM
[No subject] - by கரிகாலன் - 10-24-2005, 01:40 PM
[No subject] - by கரிகாலன் - 10-24-2005, 01:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)