10-24-2005, 12:13 PM
பெல்ஜியத்தை உலுக்கிவருகிறது பல்லாயிரக்கணக்கான புகலிடத் தமிழர்களின் உரிமை முழக்கம்!!
[திங்கட்கிழமை, 24 ஒக்ரொபர் 2005, 17:00 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயண வரவேற்பு மறுப்பை மீளப்பெற வேண்டும் என்று பெல்ஜியத்தில் கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான புகலிடத் தமிழர்கள் உரிமை முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
இன்று திங்கட்கிழமை ஐரோப்பிய நேரம் பிற்கபல் 12 மணியளவில் இந்த உரிமை முழக்கப் போராட்டம் தொடங்கியது.
ஐரோப்பிய ஒன்றியத் தலைமைச் செயலகம் அருகில் இந்த நிகழ்வின் தொடக்கத்தில் பாரம்பரிய நாதஸ்வர இசை வாசிக்கப்பட்டது.
பின்னர் பொதுச்சுடரினை தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் ஏற்றி வைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஏற்றினார்.
பின்னர் தொடங்கிய உரிமை முழக்கப் போராட்டத்தில்
சூரியத் தேவனே! எங்கள் தலைவன்!!
தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே!!
ஐரோப்பிய ஒன்றியமே மீளப் பெறு! மீளப் பெறு!!
விடுதலைப் புலிகளின் பயண வரவேற்பு மறுப்பை மீளப் பெறு!!
என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
தமிழீழத் தேசியக் கொடி மற்றும் சின்னங்களை கைகளில் ஏந்தியும் சிவப்பு மஞ்சள் உடை அணிந்தும் புகலிடத் தமிழர்கள் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

" "