Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயரட்னத்தை 6 மாதமாக தேடும் சிறிலங்கா படை
#1
[b]ஜெயரட்னத்தை 6 மாதமாக தேடும் சிறிலங்கா படை
[திங்கட்கிழமை, 24 ஒக்ரொபர் 2005, 15:34 ஈழம்] [கொழும்பு நிருபர்]
கல்கிசை சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் இரண்டாவது அதிகாரியாகப் பணியாற்றிய ரி.ஜெயரட்னம் கடத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும் அவரைப் பற்றியத் தகவல்களை இதுவரை கண்டறிய பாதுகாப்புப் படையினால் முடியாது போயுள்ளது.


கடத்தப்பட்ட ஜெயரட்னம் கல்கிசை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி மொகமட் நீலாப்தீனுக்கு அடுத்த நிலை அதிகாரியாக கடமையாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து வனாத்தவில்லுப் பிரதேசத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்று மீண்டும் பம்பலப்பிட்டி காவல் நிலையத்தில் சேவையாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை கல்கிசை உணவு விடுதிக்கு அருகில் ஜெயரட்ணம் கடத்தப்பட்டார்.

ஜெயரட்ணம் கடத்தலையடுத்து கல்கிசை பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி நீலாப்தீன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
www.puthinam.com
Reply


Messages In This Thread
ஜெயரட்னத்தை 6 மாதமாக தேடும் சிறிலங்கா படை - by வினித் - 10-24-2005, 10:35 AM
[No subject] - by victor - 10-25-2005, 01:19 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)