Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"பெல்ஜியத்தில் எழுக தமிழ்"
#1
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயண ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்க வலியுறுத்தி பெல்ஜியத்தில் இன்று திங்கட்கிழமை 'எழுக தமிழ்' எனும் முழக்கத்தோடு பாரிய தமிழர் உரிமைப் பேரணி நடைபெற உள்ளது.


பெல்ஜியத்தின் பிரெசெல்ஸ் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் செயலகம் முன்பாக இந்த பேரணி நடைபெற உள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக அனைத்து நாடுகளிலிருந்தும் புகலிடத் தமிழர்கள் வானூர்திகளிலும் தங்களது வாகனங்களிலும் பேரூந்துகளிலும் அலை அலையாக பெல்ஜியம் நோக்கி திரண்டு வருகிறார்கள்.

புகலிட நாடுகளில் இயங்கி வரும் அனைத்து சமூக, கலாச்சார, அரசியல், மகளிர், இளையோர் மற்றும் விளையாட்டுக் கழகத்தினரும் முதல் முறையாக இப்பேரணிக்காக ஒன்று திரண்டுள்ளனர். யேர்மன், பிரான்ஸ், சுவிஸ், நெதர்லாந்து நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இப்பேரணியில் கலந்து கொள்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழர் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இந்த பேரணியில் உரையாற்றுகின்றனர்.

தமிழீழத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய பேரணியில் பங்கேற்கின்றனர்.

பேரணியின் முடிவில் பிரகடனமும் வெளியிடப்பட உள்ளது.

- இலங்கைத்தீவின் இணக்க முயற்சிகளில் ஐரோப்பிய சமூகம் நீதியானதும், பாரபட்சமற்றதுமான பங்கை வகித்தல் வேண்டும்.

- இலங்கைத்தீவின் சமாதானப் பேச்சுக்களிலும், போர்நிறுத்த உடன்பாட்டிலும் சம தரப்பாகப் பங்கேற்கும் தமிழர்களின் தேசியத் தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகளை அங்கீகரித்து கௌரவமாக நடாத்துதல் வேண்டும்.

- இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கினை தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவற்றைக் தளமாகக் கொண்ட அரசியல் நிலைப்பாட்டை ஐரோப்பிய சமூகம் ஆதரித்து - மதித்து சமாதான முயற்சிக்கு ஆதரவு தரல் வேண்டும்.

- விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும், புத்திஜீவிகளுக்கும் எதிராக சிறிலங்கா இராணுவ உளவுத்துறையினால் நடாத்தப்படும் நிழல் போரைப் பயங்கரவாதம் என ஐரோப்பிய சமூகம் பகிரங்கமாக பிரகடனப்படுத்தல் வேண்டும்.

- ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் ஒடுக்கப்பட்டு, துன்புறும் தமிழ் மக்களிற்கு ஆதரவு தருவதற்கும், அவர்கள் மீதான சிறிலங்கா பேரினவாத பயங்கரவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கும் உரிமை கொண்டவர்கள் என்பதை ஐரோப்பிய சமூகம் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்

ஆகிய கோரிக்கைகள் அந்தப் பிரகடனத்தில் இடம்பெறக் கூடும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

http://www.eelampage.com/?cn=21102
" "
Reply


Messages In This Thread
"பெல்ஜியத்தில் எழுக தமிழ்" - by cannon - 10-24-2005, 06:10 AM
[No subject] - by cannon - 10-24-2005, 06:11 AM
[No subject] - by cannon - 10-24-2005, 12:13 PM
[No subject] - by தூயவன் - 10-24-2005, 02:54 PM
[No subject] - by vasisutha - 10-24-2005, 05:43 PM
[No subject] - by வியாசன் - 10-24-2005, 06:07 PM
[No subject] - by RaMa - 10-24-2005, 06:08 PM
[No subject] - by inthirajith - 10-25-2005, 03:43 AM
[No subject] - by selvanNL - 10-25-2005, 12:13 PM
[No subject] - by வழுதி - 10-25-2005, 12:20 PM
[No subject] - by selvanNL - 10-25-2005, 12:46 PM
[No subject] - by vasisutha - 10-25-2005, 01:04 PM
[No subject] - by Mathan - 10-25-2005, 03:28 PM
[No subject] - by MEERA - 10-25-2005, 03:51 PM
[No subject] - by sabi - 10-25-2005, 04:59 PM
[No subject] - by cannon - 10-25-2005, 05:32 PM
[No subject] - by sri - 10-26-2005, 12:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)